Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் மற்றும் இ.எஸ்.ஐ. மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியத் தொழில் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry-CII) தலைவர் திரு.ஆர்.முகுந்தன்,தென் மண்டலத் தலைவர் திரு.பு. ரவிச்சந்திரன்,தென் மண்டல இயக்குநர் திரு. இந்திரனில் கோஷ், தமிழ்நாடு தலைவர் மற்றும் இயக்குநர் திரு.பா.ஜெய்கிருஷ்ணன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
Dharmapuri PRO retweeted
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின்நினைவு நாளான “தியாகத் திருநாளை”முன்னிட்டு, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன் அவர்கள், அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @AdvocateVenkatP
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிருவாக இயக்குநரகம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஆகியவற்றின் சார்பில் மொத்தம் 174 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 12 திட்டப் பணிகளைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 11 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களிடம் இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், காதர் நவாஸ்கான் சாலையில் பாதசாரிகளுக்கான பிரத்யேக நடைபாதை, சாலைப் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளுக்காக ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் “சிறந்த மோட்டார் அல்லாத போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம்” என்ற பிரிவின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட விருதினை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப.,பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., இணை ஆணையர் (பணிகள்) திரு.எஸ்.சரவணன், இ.ஆ.ப.ஆகியோர் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களிடம் இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், புதுதில்லியில் நடைபெற்ற ஸ்வச் சர்வேக்ஷன் 2025–26 (Swachh Survekshan) விருது வழங்கும் விழாவில், ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், தமிழ்நாட்டின் முதல் தூய்மை நகரமாகத் தேர்வு செய்யப்பட்ட தேனி - அல்லிநகரம் நகராட்சிக்கு மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் வழங்கிய விருதினை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப.,நகராட்சி நிருவாக இயக்குநர் திரு.ப.மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., தேனி-அல்லிநகரம் நகராட்சி ஆணையர் செல்வி எஸ். பார்கவி ஆகியோர் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 210 கோடியே 14 இலட்சம் ரூபாய் செலவில் அரசு மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள் மற்றும் 5 தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 52 கோடியே 1 இலட்சம் ரூபாய் செலவில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரிகள் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களைத் திறந்து வைத்து, செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூரில் 22 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @Viswanathan_INC
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.210.14 கோடி செலவில் திருக்கோவிலூர், பள்ளப்பட்டி, சத்தியமங்கலம், கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள்,ஈரோடு மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பரமத்திவேலூர், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம் அரசு மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டடங்கள் ஆகியவற்றைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
Dharmapuri PRO retweeted
உயர்கல்வித் துறை சார்பில் ரூ.52.01 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களைத் திறந்து வைத்து,ஆலந்தூரில் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டடத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
Dharmapuri PRO retweeted
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள் அரசு சார்பில் அன்னாரது திருவுருவப்படத்திற்கும் அங்கு வைக்கப்பட்டிருந்த வ.உ.சிதம்பரனார்
அவர்கள் சிறையில் இழுத்த மரச்செக்கிற்கும்
மலர்த்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிருவாக இயக்குநரகம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஆகியவற்றின் சார்பில் மொத்தம் ரூ.174.97 கோடி செலவில் முடிவுற்ற 12 திட்டப் பணிகளைத் திறந்து வைத்து,ரூ.11.15 கோடி மதிப்பீட்டில் சென்னை விமான நிலைய நுழைவுவாயில் பகுதியில் பசுமை வழித்தடம் அமைப்பதற்கான 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
Dharmapuri PRO retweeted
EDII-TN, Chennai, is organising a Three-Day Coconut Value Added Training Programme
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
Dharmapuri PRO retweeted
தமிழ்நாடு பஞ்சாலைக் கழகத்திற்குச் சொந்தமான அருப்புக்கோட்டை விசைத்தறிக்கூட வளாகத்தில் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்திக்காக ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் 20 நவீன தையல் இயந்திரங்களுடன் கூடிய புதிய தையல் அலகு துவங்குதல் மற்றும் கோயம்புத்தூர் குறிச்சியில் இந்நிறுவனத்திற்குச் சொந்தமாக உள்ள காலியிடத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அலுவலக கட்டடம் மற்றும் கிட்டங்கி கட்டுவதற்கு தமிழ்நாடு பஞ்சாலைக் கழகத்தின் சொந்த நிதியிலிருந்து செயல்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
Dharmapuri PRO retweeted
தமிழ்நாடு நாள்" சிறப்புப் போட்டிகளில் பங்கேற்று உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
Dharmapuri PRO retweeted
Rs.6,513.18 crore sanctioned for 2,221 road works covering 4,126 km under CRIDP 2026-27
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @AadhavArjuna |
Dharmapuri PRO retweeted
விரிவான சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2026-27
• நிதி ஒப்புதல் ரூ.6,513.18 கோடி
• மொத்தப் பணிகள்: 2,221 சாலைப் பணிகள் (4,126.39 கி.மீ நீளம்)
முக்கிய சிறப்பம்சங்கள் :
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @AadhavArjuna |
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று (18.11.2026) புதுதில்லியில் மாண்புமிகு ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சர் திரு.சி.ஆர்.பாட்டீல் அவர்களை, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.நா.ஆனந்த் அவர்கள், மாண்புமிகு பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் ஆகியோர் சந்தித்து மேகதாது திட்டத்திற்கு எதிரான கருத்துகளை வலியுறுத்தும் வகையில் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கினார்கள்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@BussyAnand | @AadhavArjuna | @imrajmohan |
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (18.11.2026) புதுதில்லியில், மாண்புமிகு ஒன்றிய இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தவும், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் மற்றும் நிதி உதவிக்கான கடிதத்தினை அளித்து ஆலோசனை மேற்கொண்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @AadhavArjuna |
Dharmapuri PRO retweeted
மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சார்பில் புதுதில்லியில் இன்று (18.11.2026) தொடங்கிய இரண்டு நாள் தேசிய அளவிலான துறைசார் உச்சிமாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @jagadeshwarioff |

















































