I.S.INBADURAI (@IInbadurai) header
I.S.INBADURAI (@IInbadurai) profile picture

Member of Parliament - Rajya Sabha : TamilNadu | AIADMK Advocates Wing Secretary | Former MLA Radapuram | Advocate - High Court Of Madras

Navaladi.Tirunelveli District
Joined June 2018
Photo by I.S.INBADURAI (@IInbadurai)Photo by I.S.INBADURAI (@IInbadurai)Photo by I.S.INBADURAI (@IInbadurai)Photo by I.S.INBADURAI (@IInbadurai)Photo by I.S.INBADURAI (@IInbadurai)Photo by I.S.INBADURAI (@IInbadurai)Photo by I.S.INBADURAI (@IInbadurai)Photo by I.S.INBADURAI (@IInbadurai)Photo by I.S.INBADURAI (@IInbadurai)Photo by I.S.INBADURAI (@IInbadurai)
நான்கு பெண்களுக்கு தனது அமைச்சரவையில் இடம் அளித்துள்ளதாக சட்டப்பேரவையில் @TVKVijayHQ பெருமையுடன் கூறுகிறார். ஒரு பெண்ணையே முதலமைச்சராக்கிய பெருமை அதிமுகவுக்கு உண்டு! 1979-ஆம் ஆண்டு சரண்சிங் அமைச்சரவையில் அதிமுக இடம்பெற்றபோது, மறைந்த சத்தியவாணி முத்து அம்மையார் என்ற பட்டியலினப் பெண்ணுக்கு அந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சுதந்திர இந்தியாவில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண் மத்திய அமைச்சராக உயர்ந்த முன்னோடித் தலைவர் என்ற பெருமையை அம்மையாருக்கு பெற்றுத் தந்தது அதிமுக! டாக்டர் அம்பேத்கர் தனது சுயசரிதையில், பள்ளிப் பருவத்தில் உணவு அருந்தும் நேரங்களில் பிற மாணவர்களிடமிருந்து தனியே அமர வைக்கப்பட்ட வேதனையைப் பதிவு செய்துள்ளார். அதிமுக ஆட்சியில், பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் சத்துணவுத் திட்டத் துறையை பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சரோஜா அவர்களிடம் ஒப்படைத்த வரலாறு உண்டு! அதுமட்டுமா? திருச்சி பொதுத் தொகுதியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த எழில்மலையை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்த சிறப்புமிக்க வரலாறும் அதிமுகவுக்கு உண்டு! சமூக நீதி என்றால் அன்றும், இன்றும், என்றும் அதிமுகதான்! @AIADMKOfficial @TVKVijayHQ @EPSTamilNadu @arivalayam #AIADMK #MGR #Jayalalithaa #SocialJustice #TNPolitics
39
203
7
615
156,930
அரசமைப்புச் சட்டத்தின் கீழ் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அமைச்சர் @AadhavArjuna , தமிழகத்தில் ஆட்சியைக் கலைத்தால் புரட்சி வெடிக்கும் என்று மக்களை தூண்டும் வகையில் பேசலாமா? ஏற்கனவே இலங்கை, நேபாளத்தைப் போல தமிழகத்திலும் புரட்சி வெடிக்கும் என்று நீங்கள் வலைதளங்களில் பதிவு செய்து, காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின் அப்பதிவை நீங்களே திருத்தி, பின்னர் நீக்கி, சென்னை உயர்நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டதை மறந்துவிட்டீர்களா அமைச்சரே? (Crl.O.P. No.28737 of 2025 / Crime No.47 of 2025) அரசுகள் அமைவதும், நீடிப்பதும், முடிவுக்கு வருவதும் அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகளின்படிதான் நடக்கும். அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பையும், ஜனநாயக நடைமுறைகளையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஓர் அமைச்சரே, அதுவும் அரசு விழாவில் - இத்தகைய எச்சரிக்கை விடுப்பது முறையல்ல! எந்த ஆட்சியும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மேலானது அல்ல! @AIADMKOfficial @TVKVijayHQ @lokbhavan_tn @HMOIndia @PTI_News @ANI @ians_india
15
112
3
309
14,812
அதிமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளரும், முன்னாள் மதுரை துணை மேயருமான பி.எம். மன்னனை விடுவித்து மதுரை நீதிமன்றம் உத்தரவு! BNSS பிரிவு 35(3)-ன் கீழ் நாளை (07.11.2026) விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் வழங்கிவிட்டு, அதற்கு ஒரு நாள் முன்னதாகவே கைது செய்தது ஏன்? என காவல்துறையிடம் நீதிபதி சரமாரி கேள்வி. சட்டத்தின் முன் அனைவரும் சமம்! LAW IS SUPREME! @AIADMKOfficial @EPSTamilNadu @CMOTamilnadu @TVKVijayHQ
4
132
1
414
15,357
மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார், மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னனுக்கு BNSS பிரிவு 35(3)-ன் கீழ் நாளை (07.11.2026) விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஆனால், அவர் நாளை விசாரணைக்கு ஆஜராகத் தயாராக இருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாகவே இன்று காலை அவரைக் அவசரமாக கைது செய்திருப்பது ஏன்? Satender Kumar Antil v. CBI (15.01.2026) வழக்கில், 7 ஆண்டுகள் வரை தண்டனைக்குரிய குற்றங்களில் BNSS பிரிவு 35(3)-ன் கீழ் நோட்டீஸ் வழங்குவதே விதி; கைது என்பது விதிவிலக்கு என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நோட்டீஸ் வழங்கிவிட்டு, அவர் ஆஜராக தயாராக இருந்தும், ஆஜராக வாய்ப்பு அளிக்காமல் ஒரு நாளுக்கு முன்பே அவரை கைது செய்திருப்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் BNSS சட்டத்தின் நோக்கத்திற்கும் முரணானதல்லவா? இந்தக் கைது எதற்காக? யாருடைய அழுத்தத்தின் பேரில் இந்த நடவடிக்கை? சட்டங்களும்,நீதிமன்ற தீர்ப்புகளும் @TVKVijayHQ அரசை கட்டுப்படுத்தாதா? தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? அல்லது எதேச்சதிகாரத்தின் ஆட்சியா? @AIADMKOfficial @CMOTamilnadu @lokbhavan_tn @tnpoliceoffl
11
108
3
278
19,006
ஹிட்லரும் கோயபல்சும் : 1. அடிக்கடி பேரணி,பெருந்திரள் கூட்டங்கள் நடத்து! 2. ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லு; அது உண்மை என ஏற்றுக்கொள்ளப்படும் வரை! 3.எது நடந்தாலும் எதிர்க்கட்சிகளைக் குற்றம் சொல்லு! 4. எவ்வளவு பெரிய தவறாக இருந்தாலும்,தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் உன் செயலை நியாயப்படுத்து! 5. ஊடகங்களைக் உன் கட்டுப்பாட்டில் வை.பொய்ப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து முன்னெடு! 6. ஒவ்வொரு உண்மைக்கும் ஒரு கட்டுக் கதையை உருவாக்கி, அதை மக்களிடம் பரப்பு! 7. உனது கருத்துக்கு எதிரானவர்களை தேசத் துரோகி என முத்திரை குத்தி சிறையிலடை! 8. உன் இயக்கத்தின் தலைவர்களை மக்கள் மத்தியில் எப்போதும் பேசுபொருளாக வைத்திரு! 9. கடந்தகாலப் பெருமைகளை அவ்வப்போது பேசு! இவையெல்லாம் ஹிட்லரின் ஆட்சியில் கோயபல்ஸ் கையாண்டதாகக் கூறப்படும் அரசியல் உத்திகள்! அப்படியானால், இன்றைய வாழும் கோயபல்ஸ் யார்? @AIADMKOfficial @TVKVijayHQ
7
82
1
214
4,083
தவெக அரசின் அமைச்சராகப் பணியாற்ற அயல்பணியில் (Deputation) சென்று, தற்போது @TVKVijayHQ - ன் செய்தித் தொடர்பாளராகக் கூடுதல் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் @VanniTamizhVCK அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! @AIADMKOfficial
21
145
10
765
45,653
துப்பாக்கி வன்மம்! @AIADMKOfficial @TVKVijayHQ
8
94
2
243
2,940
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற ₹5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற நபர் யார் என்பதை @TVKVijayHQ அமைச்சர் @RajmohanTN பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்! லஞ்சம் கொடுக்க முயன்றவரின் அடையாளத்தை மறைப்பது குற்றம். ஆதாரங்களுடன் உண்மையை வெளிக்கொணர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதே, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 164(3)-ன் கீழ் அவர் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்தின் உணர்வுக்கும், அமைச்சரின் பொறுப்புக்கும் ஏற்புடையதாகும். ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் கீழ் இப்புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்! @AIADMKOfficial @CMOTamilnadu @lokbhavan_tn @tnpoliceoffl
3
96
2
279
3,640
இஸ்ரேலில் உயிரிழந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி சுப்பையா வீரமணி (31) அவர்களின் உடலை உடனடியாகத் தாயகம் கொண்டுவர வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளேன். உடலைச் சென்னைக்குக் கொண்டுவருவதற்கான முழுச் செலவையும் மத்திய அரசே ஏற்கவும் - இஸ்ரேல் நிறுவனம் மற்றும் அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய உரிய இழப்பீட்டுத் தொகையை விரைந்து பெற்றுத்தரவும், இந்தியத் தூதரகம் மூலம் அனைத்து நடைமுறைகளையும் துரிதப்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளேன். @AIADMKOfficial @EPSTamilNadu @PMOIndia @DrSJaishankar @DrVpb
3
43
116
2,120
அரசியல் விமர்சகர் அண்ணன் கலை மறைந்தார். அரசியல் என்பது கருத்துகளின் மோதல், கொள்கைகளின் விவாதம், ஜனநாயகத்தின் உயிரோட்டம் என்பதைத் தனது சிந்தனையாலும், பேச்சாலும் உணர்த்தியவர் அண்ணன் கலை. அதிகார அரசியலின் போக்குகளைத் துணிச்சலுடனும், அதிமுக குறித்து தனித்துவமான பார்வையுடனும் விமர்சித்து வந்த கலையின் குரல் இனி ஒலிக்காது என்பது ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதை கண்ணீரில் எழுதுகிறேன். @AIADMKOfficial
11
53
241
2,618
அதிமுக தொண்டன் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்! @AIADMKOfficial @EPSTamilNadu
7
161
2
513
3,989
Theni: 17 prisoners escape from custody! A shocking manifestation of administrative failure and sheer incompetence under the @TVKVijayHQ government. This colossal security lapse demands accountability. The situation warrants nothing less than placing the administration under suspended animation! @AIADMKOfficial @CMOTamilnadu @lokbhavan_tn @PMOIndia @HMOIndia @ANI @PTI_News #Theni #TVKFailure #TamilNadu
5
81
1
218
2,431
உச்சநீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி செய்யப்பட்ட குதிரை பேர வழக்கு அதிமுக தாக்கல் செய்த வழக்கு அல்ல! வழக்கு விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள FIR மீது உரிய விசாரணை நடைபெறட்டும்; சட்டம் தன் கடமையைச் செய்யும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். மேற்படி FIR, குதிரை பேரம் தொடர்பாக @TTVDhinakaran கிண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டதா? அல்லது - @AIADMKOfficial சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அளிக்கப்பட்ட புகாரின் மீது பதிவு செய்யப்பட்டதா? என்பது குறித்து @lokbhavan_tn தமிழகத் தலைமைச் செயலாளரை அழைத்து விளக்கம் கேட்டு, விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிட வேண்டும்! #குதிரைபேரம் #HorseTrading
7
88
304
20,602
இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வென்ற இருவருக்கும் சபாநாயகர் நடத்தும் தகுதிநீக்க விசாரணை தீர்ப்புக்கு பிறகு சிக்கல் வரும். @AIADMKOfficial கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்ததற்காக வருத்தம் தெரிவித்து @EPSTamilNadu அவர்களிடம் மன்னிப்புக் கோரிவிட்டு @TVKVijayHQ வுக்கு தாவிய இரண்டு விஜயபாஸ்கர்களும் தகுதி நீக்கத்திலிருந்து தப்பிக்க முடியாது! #குதிரைபேரம்
5
194
1
614
24,520
ஜப்பானில் நடைபெற்ற 5- ஆவது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்து தாயகம் திரும்பிய தமிழகத்தின் பெருமைமிகு வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், பேபி சகானா ரவி, கஸ்தூரி ராஜாமணி ஆகியோரை புதுடெல்லியில் இன்று சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டேன். ​@AIADMKOfficial @EPSTamilNadu ​#AsianParaGames #TamilNadu #ParaAthletes #AIADMK #Inbadurai
3
45
182
1,975
சென்னை விமான நிலையக் காத்திருப்புக் கூடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடன் ஒரு பொன்மாலைப் பொழுது சந்திப்பு! @Vairamuthu
5
29
1
209
1,902
தவெக என்பது கொள்கைக் கூடாரமல்ல; அது அரசியல் அகதிகள் முகாம்! @TVKVijayHQ
71
171
22
764
12,267
ஜரிகை வேலை காட்டாமல் மக்களுக்காக உண்மையோடு அக்கறையுடன் செயல்படுங்கள்..! @IInbadurai MP #ADMK_VNR
1
10
21
339
அதிமுகவையும், பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்களையும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வரும் அமைச்சர் @AadhavArjuna மீது, @AIADMKOfficial சார்பில் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆதிராஜாராம் அவர்கள் மூலம் சென்னை பெருநகர மூன்றாவது நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமைச்சர் மீதான கிரிமினல் வழக்கில் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளத் தேவையான Sanction தொடர்பாக, BNSS பிரிவு 218-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி @lokbhavan_tn அவர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கின் தொடர் விசாரணை வரும் நவம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
18
205
5
661
24,964
பத்து நாட்களாக செஞ்சி சிறுமி மாயம். ஐந்து நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட பெருந்துறை செவிலியர் சடலம். 'அண்ணனாகவும் இருப்பேன். அரணாகவும் இருப்பேன்' என்று பேசிய @TVKVijayHQ எங்கே இருக்கிறார்? @AIADMKOfficial
10
270
8
628
19,653