S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) (@MAadukalam) header
S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) (@MAadukalam) profile picture

தேசமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்.

Joined October 2020
Photo by S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) (@MAadukalam)Photo by S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) (@MAadukalam)Photo by S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) (@MAadukalam)Photo by S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) (@MAadukalam)Photo by S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) (@MAadukalam)Photo by S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) (@MAadukalam)Photo by S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) (@MAadukalam)Photo by S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) (@MAadukalam)Photo by S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) (@MAadukalam)
S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) retweeted
நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான திரு.வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. “அரோகரா” என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும். இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் அறிவுறுத்த வேண்டும்.
151
1,283
44
4,166
178,147
S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) retweeted
We have seen the last of this wonderful person as a player! His retirement today from the IPL as a player reflected his signature way of saying Goodbye to us - unassuming and on his own terms! Thank you MSD for being who you are and for entertaining and educating us!
25
1,673
5
16,440
123,025
S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) retweeted
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தனக்கெனத் தனி அத்தியாயம் படைத்த கப்பலோட்டிய தமிழன், ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் நினைவு தினம் இன்று. ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, சுதேசி இயக்கத்தின் அடையாளமாகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியர்களின் தொழில் வலிமையையும் தன்னம்பிக்கையையும் உலகறியச் செய்தவர். தியாகத்தையும், துணிச்சலையும், தேசப்பற்றையும் தனது வாழ்வின் அடையாளமாகக் கொண்டிருந்தவர். அந்நிய ஆதிக்கத்திற்கு அடிபணியாமல், நாட்டின் விடுதலைக்காகத் தனது உடைமைகளையும், வாழ்வையும் அர்ப்பணித்த ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் துணிச்சலையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
26
425
5
1,493
25,325
S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) retweeted
பள்ளிக் கல்வித்துறை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டு, நாங்கள் DMK Files வெளியிட்டபோது, தமிழ்நாட்டில் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பாக நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அன்றைய திமுக அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை. அந்த முதலீடும் தமிழகத்துக்கு வரவில்லை, முறைகேடான முதலீடு என்ற எங்கள் குற்றச்சாட்டுக்கும் இன்றுவரை பதில் இல்லை. திரு. அன்பில் மகேஷ் தொடர்பான உதயநிதி ஸ்டாலின் பெயரிலான அறக்கட்டளை, நோபல் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான நோபல் பிரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே முகவரியில் இயங்கி வந்ததாகக் கூறப்பட்ட தகவலுக்கும் இன்று வரை பதில் இல்லை. நோபல் பிரிக்ஸ் நிறுவனத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் இடையே என்ன தொடர்பு? அந்த நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பான கேள்விகளுக்கு என்ன பதில்? இந்த விவகாரத்திலும் தவெக அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி, உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
132
1,112
42
5,581
385,547
S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) retweeted
தேச விடுதலைக்காகத் தங்கள் உயிரையும் துச்சமெனக் கருதி, வீரத்துடன் போராடிய மாவீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினம் இன்று. ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர்கள் வெளியிட்ட ஜம்புத்தீவு பிரகடனம், அவர்களின் வீரத்திற்கும் விடுதலை வேட்கைக்கும் சான்றாகத் திகழ்கிறது. சிவகங்கைச் சீமையை மீட்டு, வீரமங்கை ராணி வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தியதில் அவர்களின் பங்கு மகத்தானது. காளையார் கோவில், மானாமதுரை, திருமோகூர், குன்றக்குடி உள்ளிட்ட திருத்தலங்களின் ஆன்மீகப் பணிகளிலும் சிறந்து விளங்கிய மாவீரர்கள் மருது சகோதரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
35
451
6
1,909
35,926
S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) retweeted
இன்றைய தினம் காலை, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலத்தில், நமது @WTLFoundation சார்பில், 11 ஏக்கர் பரப்பளவில் ‘திருவனம்’ எனும் 15,000 மரக்கன்றுகளை நடும் மாபெரும் விழாவில் பங்கேற்று, இந்தப் பசுமைப் பயணத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மரங்களை நடுவது என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறைகளுக்கான நமது கடமையும் கூட. மண்ணின் வளத்தைப் பாதுகாப்பது, பசுமைப் பரப்பை அதிகரிப்பது, இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாப்பது ஆகியவை நம் ஒவ்வொருவரின் கடமையாகும். கடந்த மாதங்களில், தமிழகம் முழுவதும் நமது @WTLFoundation முன்னெடுத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம் 2,700-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு, 13 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த மக்கள் இயக்கம் தொடரட்டும். மரங்களை வளர்ப்போம், மண்ணைக் காப்போம், பசுமையான, வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
39
762
10
2,970
46,503
S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) retweeted
வரும் அக்டோபர் 15, ஐயா அப்துல் கலாம் அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாம் தொடங்கவிருக்கும் பயிற்சி மையத்தில், அரசியல் குறித்தும், இளைஞர்களின் தலைமைப் பண்பை வெளிக் கொண்டுவரும் விதத்திலும், பயிற்சிகள் வழங்கப்படும். அதன் மூலம், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நமது இளைஞர்கள், தங்களது பணிகள் குறித்து நன்கு தெரிந்து போட்டியிடுவார்கள். அரசியலுக்கு சினிமா நடிகர்கள் வருவது தவறல்ல. மக்களுக்குப் பிடித்தவர்களுக்கு வாக்களிப்பார்கள். ஆனால், வரும் 2031 தேர்தலில், எதற்காக வாக்களிக்கிறோம் என்பது தெரிந்து மக்கள் வாக்களிக்க வேண்டும். அதற்கான பணிகளில்தான் நமது @WTLFoundation அமைப்பு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
38
537
12
2,165
41,536
S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) retweeted
கடந்த சட்டமன்றத் தேர்தலில், மக்களிடம் நாம் யாருக்காக வாக்களிக்கக் கேட்டோமோ, அவர்கள், வாக்களித்த மையின் ஈரம் காயும் முன்பாகவே, கட்சி மாறிச் சென்று விட்டார்கள். இது போன்ற மோசமான அரசியலை மாற்றவே நமது @WTLFoundation களத்தில் இருக்கிறது. எந்தவித எதிர்பார்ப்புமின்றி, உள்ளூர் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கொடுக்கும் நமது தலைவர்களை, உள்ளூரில் இருந்தே உருவாக்குவோம்.
39
552
10
2,373
60,269
S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) retweeted
நமது @WTLFoundation அமைப்பு அரசியல் இயக்கமாக மாறும்போது, இது போன்ற கட்சி நமக்கு வேண்டும் என்று மக்கள் கூறும்படி, நமது கட்சி உருவாக வேண்டும். தமிழகத்தில் உள்ள 12,525 பஞ்சாயத்துகளில் உள்ள, சுமார் 8 லட்சம் பஞ்சாயத்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும். உள்ளாட்சித் தேர்தலில் நாம் முதலில் போட்டியிடுவோம். அதன் பின்னர் வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும், நமது அரசியல் இயக்கம் போட்டியிடும். ஒரு வலிமையான அரசியல் இயக்கமாக உருவாகும் அடிப்படைப் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.
44
675
15
2,747
72,017
S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) retweeted
எளிமை, நேர்மை, தூய்மை மற்றும் தன்னலமற்ற அரசியல் வாழ்க்கையின் மூலம், மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு தினம் இன்று. மக்கள் சேவையை தனது வாழ்வின் நோக்கமாகக் கொண்டவர். அரசுப் பள்ளிகள், மதிய உணவுத் திட்டம், நீர்ப்பாசனம் மற்றும் தொழில் வளர்ச்சி எனப் பல துறைகளிலும் தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்துச் செயலாற்றிய நவீன தமிழகத்தின் சிற்பி. அவரது எளிமையும் நேர்மையும் பொதுவாழ்வில் அனைவருக்கும் என்றும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும். கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவைப் போற்றி வணங்குவோம்.
30
408
7
1,582
29,532
S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) retweeted
Captain Smit Machchhar’s extraordinary courage in putting his life on the line to save 174 passengers during a life-threatening crisis stands as a powerful testament to true leadership and service before self. What was first reported as a “possible attempt to hijack” was later clarified as an attempt by one of the co-pilots of the plane to deliberately crash Fly Dubai’s Boeing 747 Max flying from Dubai to Tel Aviv. Despite being stabbed by his co-pilot, Captain Smit Machchhar rose to the occasion and fought him off. His presence of mind in opening the cockpit door allowed the other passengers to come in, overpower the co-pilot, and restrain him. What would have been a tragedy of wider ramifications in an already volatile geographical area was averted, and the plane was piloted to safely land in Saudi Arabia, saving the 174 passengers on board of various nationalities. Many a time, Heroes don’t wear a Superman cap. They will be one among us. They will rise when the situation demands of them. Captain Smit Machchhar is one such Hero and has made every Indian proud.
130
2,428
28
14,915
124,744
S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) retweeted
भारत के यशस्वी प्रधानमंत्री श्री @narendramodi को जन्मदिन की ढेरों बधाई। स्वस्थ रहिए, मस्त रहिए, व्यस्त रहिए और जबरदस्त रहिए। मगर भारत के युवा आज बेरोज़गार दिवस क्यों मना रहे हैं? #बेरोजगार_दिवस
93
380
11
5,805
141,441
S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) retweeted
Heartiest birthday greetings to our Hon. PM Thiru @narendramodi avl. His tireless service to our nation, visionary leadership, and relentless drive to uplift every section of our society continue to inspire millions. Praying for his good health and long life.
346
4,054
70
33,188
262,380
S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) retweeted
தமது சிந்தனைகளாலும், செயல்பாடுகளாலும், சமூகச் சீர்திருத்த வேட்கை கொண்ட எழுத்துக்களாலும் மாபெரும் புரட்சி செய்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் நினைவு தினம் இன்று. பெண்கள் முன்னேற்றம், சகோதரத்துவம், சாதி-வேற்றுமை ஒழிப்பு என முற்போக்குச் சிந்தனைகளை தமது எழுத்துக்களால் விதைத்தவர். தம் கவிதைகளை, சமூக மாற்றத்திற்கான போர்க்கருவிகளாக்கியவர். தமிழையும், தாய்நாட்டையும் உயிராகக் கொண்டு, எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் ஒளிச்சுடராக விளங்கும் நம் மகாகவியின் காலத்தை வென்ற பாடல்கள் என்றும் நமக்கு உத்வேகத்தை அளிப்பவை. தேசிய உணர்வை விதைத்து, சமூகச் சீர்திருத்தத்திற்கான பாதையை அமைத்த, மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
30
565
8
2,161
37,494
S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) retweeted
படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். #SolomonPappaiah
294
3,107
55
18,387
699,974
S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) retweeted
சிறந்த தமிழறிஞரும், பட்டிமன்றங்கள் மூலம் சமூகம் சார்ந்த நல்ல கருத்துக்களை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரியவருமான, பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. ஐயா சாலமன் பாப்பையா அவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!
102
483
12
2,488
49,875
S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) retweeted
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக சுதேசி இயக்கத்தை முன்னெடுத்துச் சென்று, தனது உடைமைகளை அனைத்தையும் நாட்டிற்காகத் தியாகம் செய்த, கப்பலோட்டிய தமிழர் ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த தினம் இன்று. தாய்நாட்டின் விடுதலைக்காக அச்சமின்றிச் செயலாற்றிய ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களது துணிச்சலையும், தியாகத்தையும், தேசப்பற்றையும் போற்றி வணங்குகிறோம்.
28
532
8
2,204
39,316
S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) retweeted
தேமுதிக நிறுவனத் தலைவர் அமரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த தினம் இன்று. திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி முத்திரை பதித்ததோடு, ஏழை எளிய மக்களின் மீது அளவற்ற அன்பும், கொடுத்துச் சிவந்த கரங்களும் கொண்ட மக்கள் தலைவராகத் திகழ்ந்தவர். நேர்மை, துணிவு, மக்கள் பணி எனத் தனது வாழ்வையே தமிழக மக்களுக்காக அர்ப்பணித்த அமரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.
43
602
10
3,223
69,336
S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) retweeted
தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும் 🙏 #JanakiAmma
525
3,903
265
28,201
1,656,008
S.JAGADESH KUMAR(மோடியின் குடும்பம்) retweeted
இந்திய இசையின் இனிமையான குரலாக, பல தலைமுறைகளைக் கடந்து, கோடிக்கணக்கான இதயங்களை வசீகரித்த பின்னணிப் பாடகி, எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது மறைவு, இந்திய இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. இசையை உயிராக நேசித்த அந்த மாபெரும் கலைஞருக்கு, எனது சிரம் தாழ்ந்த அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.
139
899
21
4,838
90,410