பட்டியலின கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கு துரோகம்!
இந்திய அரசியலமைப்பு 1950-ன் படி, இந்து, சீக்கிய மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பட்டியல் சாதியினராக அங்கீகரிக்கப்பட முடியும்.
கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய தலித்துகள் மத்திய அரசின் விதிகளின்படி பட்டியலின அந்தஸ்தைப் பெறத் தகுதியற்றவர்கள்.
மதம் மாறிய பிறகும் பட்டியலின கிறிஸ்தவர்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சாதிய பாகுபாடுகளையும் தீண்டாமையையும் எதிர்கொள்கின்றனர்.
மதம் மாறுவது அவர்களின் சமூக நிலையை மாற்றிவிடவில்லை. மதம் என்பது ஒரு தனிநபரின் சுதந்திரம்.
மதத்தைக் காரணம் காட்டி ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய சமூகப் பாதுகாப்பு மற்றும் இட ஒதுக்கீடு சலுகைகளை மறுப்பது சமத்துவ உரிமைக்கு எதிரானது.
1956-ல் சீக்கியர்களுக்கும், 1990-ல் பௌத்தர்களுக்கும் பட்டியலின அந்தஸ்து நீட்டிக்கப்பட்டது போல, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய பட்டியலினத்தவருக்கும் இது நீட்டிக்கப்பட வேண்டும்.
பட்டியலின கிறிஸ்தவர்கள் மற்றும் பட்டியலின இஸ்லாமியர்களுக்குப் பட்டியலின அந்தஸ்து வழங்க தேசிய மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான ஆணையம் பரிந்துரை செய்தது.
தலித் கிறிஸ்தவர்களுக்குப் பட்டியலின அந்தஸ்து வழங்குவது குறித்து ஆராய மத்திய அரசு 2022 அக்டோபரில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் புதிய ஆணையத்தை அமைத்தது.
இந்த ஆணையத்தின் அறிக்கை மீது கடந்த 4 ஆண்டுகளாக பாஜக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
தேர்தல் காலத்தில் இது பற்றிப் பேசுவது, அதன்பின்னர் கண்டுகொள்ளாமல் இருப்பது என்ற மோசடி வித்தையை மத்திய பாஜக அரசு தொடர்ந்து பின்பற்றி வருகிறது.
பட்டியலின மக்களின் ஓட்டு மட்டும் வேண்டும், அவர்களுக்கு உரிமை இல்லையா? – at Dharmapuri, India
கச்சத்தீவு பிரச்சினையில் மறைக்கப்பட்ட உண்மை!
கச்சத்தீவு குறித்த உண்மை நிலை தெரியாமல். அரைவேக்காட்டு அரசியலை அரை நூற்றாண்டுகளாக தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையுடனான நல்லுறவுக்காகவும், இருநாட்டு எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலுமே 1974-ல் அன்னை இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
கச்சத்தீவின் 285 ஏக்கர் பகுதியை இலங்கைக்கு வழங்கியபோதிலும், அதற்கு மாற்றாக வாட்ஜ் மணல் திட்டுப் பகுதியில் 25 லட்சம் ஏக்கர் வளமிக்க கடல் பகுதியை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தார் அன்னை இந்திரா காந்தி.
வாட்ஜ் மணல் திட்டு இந்தியாவின் கன்னியாகுமரிக்கு தெற்கே, கடலுக்கு அடியில் அமைந்துள்ள ஒரு மிக முக்கியமான மற்றும் பரந்த கடல்சார் மேட்டுநிலப் பகுதி ஆகும்.
இது உலகின் மிகச்சிறந்த மற்றும் வளமான மீன்பிடித் தளங்களில் ஒன்று. 4,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒரு பெரிய கடலடி மேட்டு நிலமாகும்.
இந்தப் பகுதியில் கடல் நீரோட்டங்கள் ஒன்றிணைவதால், கடலின் அடிப்பகுதியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மேலே வருகின்றன. இதனால் இங்கு பாசிகள் மற்றும் மிதவை உயிரினங்கள் அதிகளவில் வளர்கின்றன.
இது மீன்கள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு உகந்த இடமாகும். இங்கு 60-க்கும் மேற்பட்ட வணிக ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த மீன் இனங்கள், கணவாய்கள், இறால்கள் மற்றும் நண்டுகள் அதிகளவில் காணப்படுகின்றன.
கடந்த காலத்தில், இந்தப் பகுதி இலங்கையின் கட்டுப்பாட்டிலிருந்தது.1976 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட கடல் எல்லை ஒப்பந்தத்தின்படி, வாட்ஜ் மணல் திட்டுப் பகுதி இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் கொண்டுவரப்பட்டது.
இதன் மூலம் இப்பகுதியில் மீன்பிடிக்கும் முழு உரிமையும் இந்திய மீனவர்களுக்குக் கிடைத்தது.
கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்ததின் பின்னணியில் இருக்கும் வரலாற்றுச் சாதனையை மறைக்கும் முயற்சி 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்கிறது.
ஜென்ஸீ தலைமுறைக்காவது கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்த உண்மையைச் கொண்டு செல்ல வேண்டியது, ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனின் கடமை! – at Pennagaram, India
தேனி மாவட்ட மேகமலையில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் 102 கிராம பழங்குடியின மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கண்டித்து தமிழக காங்கிரஸ் தேனிமாவட்ட SC துறைசார்பாக இனியவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய போது ,,,, நிலமே எங்கள் உரிமை 😇😇😇😇 – at Kalpakkam Township, India
சாதி ஒழிப்புக்கு அடித்தளம்!
பள்ளி மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களிலிருந்து சாதிப் பெயரை நீக்க இமாச்சலப்பிரதேச காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளதை மனதார பாராட்டுகிறேன், வரவேற்கிறேன்.
அப்போது பேசிய சுக்விந்தர் சிங் சுகு, “சமூகத்தில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை ஒழிப்பதிலும், சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை ஊக்குவிப்பதிலும் தமது தலைமையிலான காங்கிரஸ் அரசு உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.
அதன்படி அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களிலிருந்து சாதி பெயரை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.
இமாச்சலப் பிரேதச காங்கிரஸ் அரசின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை, சாதி அடிப்படையிலான பாகுபாட்டை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றும்.
குழந்தைகள் மனதில் ஏற்றத்தாழ்வு விதைக்கப்படுவதை நிச்சயம் தடுக்கலாம்.
சமூக நீதியை நூறாண்டுகளாகப் பேசிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பள்ளிகளிலேயே சாதிக் கொடுமை தலைவிரித்தாடுகிறது.
வண்ணக்கயிறுகள் சாதியின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. பிஞ்சு மனங்களில் சாதியை விதைத்தால், வளர்ந்த பிறகு அவர்கள் கையில் ஆயுதம் தான் மிஞ்சும்.
இசாச்சலப் பிரதேசம் போன்று தமிழகத்திலும் பள்ளியில் சேரும்போது விண்ணப்பத்தில் கேட்கப்படும் சாதி என்ற பகுதியை நீக்க வேண்டும்.
சாதி ஒழிப்பைப் பள்ளியிலிருந்தே தொடங்க வேண்டும். இதற்கு ஆரம்பப் புள்ளியாக இருக்கும் இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் அரசை மீண்டும் பாராட்டுவோம்! – at Kalpakkam Township, India
திமுக முகத்திரையை கிழித்த அமைச்சர் விஸ்வநாதன்!
ஏதோ தாங்கள் தான் சமூக நீதிக் காவலர்கள் என்பது போன்ற போலித் தோற்றத்தை 50 ஆண்டுகளாக ஏற்படுத்திய திமுகவின் முகத்திரையைக் கிழித்திருக்கிறார், அமைச்சர் விஸ்வநாதன்.
அமைச்சரவையில் பட்டியலினத்தவருக்கு ஒப்புக்கு இடம் கொடுத்து, இவர்கள் ஆதிதிராவிட நலத்துறைக்கு மட்டுமே தகுதியானவர்கள் என்று முத்திரை குத்தியது திமுகவும் அதிமுகவும் தான்.
ஆனால், தவெக கூட்டணி ஆட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 8 பேரை அமைச்சராக்கி அழகு பார்த்துக் கொண்டிருப்பவர் முதலமைச்சர் விஜய்.
சட்டப்பேரவையில் அமைச்சர் விஸ்வநாதன் பேசும்போது, ‘‘ விஜய் ஆட்சியில் உயர் கல்வித்துறையைச் சார்ந்தவரும், பள்ளிக் கல்வித்துறையைச் சார்ந்தவரும் பட்டியலினம்தான். இது அதிசயம்.
மிகப்பெரிய கவுரவம் இந்த இடத்தில் இருக்கிறது. நீங்கள் ஏதோ இந்த நாட்டுக்காகப் போராடியவர் போலவும் சமூகப் புரட்சிக்காக வித்திட்டவர் போலவும் பேசுகிறீர்கள்.
பூசாரியின் மகனாகப் பிறந்து, வெட்டியானாக இருந்த தியாகச் சீலர் கக்கன் அவர்களை உள்துறை அமைச்சராக்கியது காங்கிரஸ் பேரியக்கம்.
கோயிலுக்குள் நுழைந்தால் மலச்சட்டியை எடுத்து அடிக்கும் காலத்தில், பரமேஸ்வரன், கக்கன் ஆகியோருக்கு அதிகாரத்தைத் தந்தது காங்கிரஸ் பேரியக்கம்’’என்றார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் உயர் கல்வித்துறை அமைச்சரும் அருகருகே இருப்பது அதிசயம் என்று குறிப்பிட்டார் அமைச்சர் விஸ்வநாதன்.
திராவிட கட்சிகளின் ஆட்சிகளில் இதுபோன்ற காட்சியை தமிழகம் கண்டதில்லை என்பதே உண்மை.
ஆக, உண்மையான சமூக நீதியை காங்கிரஸ் பேரியக்கத்துக்குப் பிறகு நிலை நாட்டியிருப்பது முதலமைச்சர் விஜய் தான். – at Sholinganallur, India
பரந்தூர் விமான நிலைய முடிவு சரியே...ஆனால்....!
விமானம் அமைப்பது வரவேற்கக் கூடியது தான். அதிக அளவில் சரக்குகளைக் கையாளும்போது பொருளாதாரம் வளர்ச்சியடையும்.
அதேசமயம் விவசாய நிலங்களை அழித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துத் தான் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்ற திமுகவின் பிடிவாதம் விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டிருக்கிறார். மிக முக்கியமாக பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது என்றும் முதல்வர் அறிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பு நிச்சயம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
தொழில் வளர்ச்சிக்கும் சரக்கு போக்குவரத்துக்கும் இன்னொரு விமானம் நிலையம் தேவை தான்.
அதேசமயம், விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் இன்னொரு விமானநிலையத்துக்கான இடம் எடுக்கப்பட வேண்டும்.
நிலங்கள் பாதிக்கப்படாத மாற்று இடம் தேர்வு செய்யப்படும். பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்திருப்பது வரவேற்கக்கூடியதுதான்.
எனினும், இனி அமையப் போகும் விமான நிலையம் விவசாயிகளுக்குப் பாதிப்பில்லாமல் அமையும் என்று முதலமைச்சர் உறுதி அளித்திருக்கிறார்.
அதேசமயம், புதிய இடத்தை விரைவில் தேர்வு செய்து விமானப் பணிகளை விரைந்து முடுக்கி விட வேண்டும்.
இல்லையேல், தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் ஆந்திராவுக்கும் சென்று விடும்.
முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதே அனைவரது எதிர்பார்ப்பு. – at Sikkarayapuram, India
ஆணவப் படுகொலைக்கு முடிவு கட்டுங்கள் முதல்வரே!
மகளைக் காதலித்த இளைஞரை, மகனோடு சேர்ந்து சேர்ந்து வெட்டிக் கொன்றிருக்கிறார் தந்தை.
வெட்டிக் கொன்றவர் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் அல்ல.
அவரும் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர் தான்.
படுகொலை செய்யப்பட்ட இளைஞரும் அதே பட்டியல் இனத்தைச் சார்ந்தவர் தான்.
இங்கு ஆணவப் படுகொலை சாதியால் நடக்கவில்லை.
பொருளாதார ஏற்றத்தாழ்வால் நடந்திருக்கிறது.
சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை விரைந்து கைது செய்திருப்பது வரவேற்கக் கூடியது.
இருந்தாலும், தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலை தொடர்வதை உடனடியாக தடுத்து நிறுத்தியாக வேண்டும்.
இதற்காகத்தான் ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
பொருளாதாரப் பாகுபாட்டால் நடந்த இந்த ஆணவப் படுகொலைக்கு வன்கொடுமை சட்டம் பொருந்தாது.
ஏனென்றால் கொன்றவரும் கொலை செய்யப்பட்டவரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
சாதி அடிப்படையில் மட்டும் ஆணவப் படுகொலை நடக்கவில்லை என்பதே கேளம்பாக்கம் சம்பவம் நமக்கு காட்டும் கள நிலவரம்.
எப்போதோ அத்தி பூத்தாற்போல் நடந்து வந்த ஆணவப் படுகொலை, கடந்த சில ஆண்டுகளாக அன்றாட நிகழ்வாகி இருக்கிறது.
இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.
சிறிதும் தாமதிக்காமல், மேலும் பல உயிர்கள் பறி போவதற்கு முன்பு, ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் விஜய் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி.துறை தலைவர் என்ற வகையில் கேட்டுக்கொள்கிறேன். – at Sankarapuram, India
சென்னை பிறந்தநாள் கொண்டாட்டம் யாருக்காக?
1639ஆம் ஆண்டு இதே நாளில் கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதி பிரான்சிஸ் டே சென்னை பூந்தமல்லியை சேர்ந்த அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரிடம் இருந்து தற்போது தலைமைச் செயலகம் இருக்கும் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த சிறு கிராமத்தை விலைக்கு வாங்கினார்.
அந்த இடத்திற்கு பத்திரம் பதிவு செய்யப்பட்ட நாள் 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஆகும்.
அது முதல் சென்னையின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இன்றைக்கு சென்னையின் 387 வது பிறந்தநாளை கொண்டாடுகிறோம்.
நவீன சென்னை பெருநகரமாக மாறுவதற்கு முன்பு இங்குள்ள ஏரிகள், குளம் மற்றும் நிலப்பரப்புகளைச் சார்ந்து வாழ்ந்த பூர்வகுடி உழைப்பாளர்கள் பெரும்பாலும் பட்டியலின மற்றும் மீனவ சமூகத்தினரே இந்தப் பிறந்தநாளைக் கொண்டாடத் தகுதியுள்ளவர்கள்
ஆனால், இந்த மண்ணின் மைந்தர்களை முன்னறிவிப்பு மற்றும் முறையான மறுவாழ்வு வழங்கப்படாமல் சென்னையிலிருந்த வெளியேற்றி விட்டு பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள் திராவிட கட்சிகள்.
ஆய்வு அறிக்கைகளின்படி, 1990-களில் இருந்து சென்னை நகரின் நீர்நிலைப் பகுதிகள் மற்றும் உட்பகுதிகளில் வசித்து வந்த 70,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2.5 லட்சத்திற்கும் அதிகமான பூர்வீக குடிமக்கள் சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதில் 2015 பெருவெள்ளத்திற்குப் பிறகு மட்டும் சுமார் 22,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
பூர்வீக குடிமக்களின் என்றைக்கு சென்னை நிரந்தர வாழ்விடமாக மாறுகிறதோ, அன்றைக்குத் தான் சென்னைக்கு உண்மையான பிறந்தநாள்.
அதுவரை கொண்டாட்டங்கள் என்பது வெறும் சம்பிரதாயம் மட்டுமே!
1
141
இது பொதுக்குழுவா?மாநாடா?
பொதுக்குழுவை மாநாடு போல நடத்தி முடித்திருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்.
கோஷ்டிகள் நிறைந்த காங்கிரஸ் என்று ஏளனம் செய்யப்பட்ட நிலையை மாற்றிக் காட்டியிருக்கிறார்.
இங்கு கோஷ்டிகள் ஏதும் இல்லை...அன்னை சோனியாவின், தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின், தலைவர் ராகுல் காந்தியின் தலைமையின் கீழ் ஒரே படை தான் என்பதை, ஏளனம் செய்வோருக்கு உணர்த்தியிருக்கிறார் தலைவர் மாணிக்கம் தாகூர்.
காமராஜர் அரங்கில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிமிருந்து தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் பங்கேற்றார். அவரது உரை கட்சிக்காரர்களுக்கு நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பொதுக்குழுவில் சமூக நீதியைக் காக்க, இளைஞர்-இளம்பெண் நலன் காக்க நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஜென்ஸீ தலைமுறையினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.
இந்தப் பொதுக்குழுவில் மோடி அரசையும்,குறிப்பாக அமித்ஷாவையும் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்காக தலைவர் மாணிக்கம் தாகூர் அவர்களை காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.துறை பாராட்டுகிறது.
காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அருமையாக செய்திருந்தார் தலைவர்.
இதில் சிறப்பு என்னவென்றால், தலைவர்கள் முதல் கடைக்கோடி தொண்டன் வரை அனைவரையும் சரிசமமாக நடத்தியதும், அவர்களுக்கு ஒரே மாதிரியான உணவு வழங்கியதும்தான்.
பொதுக்குழுவில் கலந்து கொண்ட தொண்டர்களின் உற்சாகம் இதுவரை காணாதது. அதற்கு ஒரே காரணம் தலைவர் மாணிக்கம் தாகூர் தான் என்றால் அது மிகையல்ல.
பொதுக்குழுவில் தலைவர் ராகுல் காந்தியை முதன்மைப்படுத்தியதும், தொண்டர்கள் ஈடுபாட்டோடு கலந்து கொண்டதும் 1967 க்கு முந்தைய காங்கிரஸை நினைவுபடுத்துகிறது.
முதல் முறையாக தலைவர் ராகுல் காந்தியை முதன்மைப்படுத்தி இந்தப் பொதுக்குழுவை நடத்தியிருக்கிறார் மாணிக்கம் தாகூர். இதுவே கட்சியில் பெரும் மாற்றம்தான்.
பல ஆண்டுகளாக தவித்துக் கொண்டிருந்த காங்கிரஸ்காரர்களுக்கு தாயாக, நல்ல தலைவனாக, மாணிக்கமாக ஜொலிக்கும் எங்கள் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்! – at Sikkarayapuram, India
அமித்ஷாவின் தேசபக்தி நாடகம் !
1937 ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, 'வந்தே மாதரம்' பாடலின் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே தேசிய மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பாடப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் போன்ற தலைவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
வங்காள நாவலாசிரியர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்' பாடலின் முதல் இரண்டு அடிகளில் தாய்நாட்டின் இயற்கைப் பெருமைகள் கூறப்பட்டுள்ளன.
ஆனால், அடுத்தடுத்த அடிகளில் இந்து தெய்வங்களின் உருவங்கள் குறித்து இடம்பெற்றிருந்தன.
அனைத்து மதத்தினரும் கலந்துகொள்ளும் தேசிய கூட்டங்களில் மத நல்லிணக்கத்தைப் பேணவும், சர்ச்சைகளைத் தவிர்க்கவும் முதல் இரண்டு அடிகளை மட்டும் பாட அன்றைக்குக் காங்கிரஸ் பரிந்துரைத்தது.
ஆனால், அமித்ஷாவுக்கு திடீர் தேசப்பற்று ஏற்பட்டிருக்கிறது. கோவா காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் முந்தைய தீர்மானத்தின்படி வந்தே மாதரம் பாடலில் இரண்டு வரிகள் மட்டுமே பாடினால் போதும் என்று முடிவு செய்திருக்கிறது.
இது தேச விரோதமாம். அமித்ஷாவுக்கு வந்தே மாதரம் பாடல் மீதோ, தேசத்தின் மீதோ பற்று அல்ல.
இந்து மதம் சார்ந்த வரிகள் வர வேண்டும், அதை முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் ஏனைய மதத்தவரும் பாட வேண்டும்...அவ்வளவுதான்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு ஆர்எஸ்எஸ்காரரை அமித்ஷாவால் காட்ட முடியுமா?
சுதந்திரப் போராட்டத்தில் பிரிட்டிஷாருக்கு முறைவாசல் செய்துவிட்டு,சுதந்திரத்துக்குப் போராடிய காங்கிரஸாருக்கு தேசப்பற்று இல்லை என்று கூற வெட்கமில்லையா?
அமித்ஷாவின் விமர்சனத்தைப் பார்க்கும் போது, ‘‘ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்" என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. – at Sikkarayapuram, India
6 ஆயிரம் மக்கள் நிலை என்னவாகும்?
மேகமலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை ராணுவத்தை அழைக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் எச்சரித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் கேட்டு தமிழக அரசு தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்காமல், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு, மேகமலை உள்ளிட்ட 90- க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் பல தலைமுறைகளாக பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
விவசாய தொழிலை மேற்கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை அவர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கண்ட பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகள், ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலைப் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பிறகு, பூர்வீகக் குடிகளான பழங்குடியின மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி, அவர்களை வனத்துறையினர் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீதிமன்ற உத்தரவு அமலில் உள்ள காலக்கட்டத்தில் அவசரமான வன்முறை அல்லது வலுக்கட்டாயமான வெளியேற்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க வனத்துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும்.
பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ள நில உரிமைச் சிக்கல்களுக்கு நிரந்தரமான மற்றும் நியாயமான தீர்வு காண மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
புலிகள் சரணாலயம் என்கிறார்கள். அங்கு புலியே இல்லை என்பதே பலரது வாதமாக இருக்கிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற இன்னும் 7 நாள்கள் தான் இருக்கின்றன.
100 வருடங்களாக வன நிலங்களில் விவசாயம் செய்து வரும் 98-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. – at Egmore Nungambakkam, India
சர்வாதிகாரத்தின் உச்சத்தில் மோடி அரசு!
கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை 1.95 சமூக வலைத்தளக் கணக்குகளை முடக்க மத்திய பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதாவது நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,275 சமூக வலைத்தள கணக்குகளை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 68 நொடிக்கு ஒரு முடக்க உத்தரவை மத்திய பாஜக அரசு பிறப்பித்திருக்கிறது.
இதில் அதிகபட்சமாக இன்ஸ்டாகிராமில் கடந்த 5 மாதங்களில் 1 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
80 ஆயிரம் முகநூல் கணக்குகளும் 15,000 யூட்யூப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கணக்கை முடக்கும் போதும் அதில் உள்ள நூற்றுக்கணக்கான பதிவுகளும் உள்ளடக்கங்களும் நீக்கப்படுகின்றன.
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் பிரிவு 79(3) (b) தவறாகக் கையாளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் எழுத்துரிமை, பேச்சுரிமை மறுக்கப்படுகிறது.
மோடி அரசின் இந்தப் போக்கு சர்வாதிகாரத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.
கடிவாளம் இல்லாத குதிரை போல் தறிகெட்டு ஓடினால், விபத்தில் தான் முடியும்.
இதை மத்தியில் ஆளுவோர் புரிந்து கொள்ள வேண்டும்! – at Sholinganallur, India
எம்எல்ஏக்களுக்கு கார் தருவது சரியே!
சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கார் வழங்கப்படும் எனவும், ஓட்டுனர், எரிபொருள், உள்ளிட்ட செலவுகளோடு, உதவியாளர் நியமனத்துக்கு 25,000 ரூபாய் என மொத்தம் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.
திராவிட கட்சிகள் செய்யாததை விஜய் செய்து காட்டியிருக்கிறார்.
இதன்மூலம், தொகுதி மக்களுடன் எம்எல்ஏக்களுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்படும். எந்நேரமும் தொகுதிக்கு எளிதாகச் செல்லலாம்.
அதோடு மற்றொரு முக்கிய விஷயமும் இதற்குள் மறைந்திருக்கிறது.
திராவிட ஆட்சியில் புரையோடிப்போன ஊழலை ஒழிக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார், முதலமைச்சர் விஜய்.
எந்த மாற்றத்தையும் நம்மிலிருந்து தொடங்க வேண்டும் என்பதை இந்த விஷயத்திலும் சரியாகக் கடைப்பிடித்திருக்கிறார்.
எம்எல்ஏக்கள் மீது இனி ஊழல் குற்றச்சாட்டு வருவதை இந்த அறிவிப்பு நிச்சயம் தடுக்கும்.
மக்கள் பணியில் மட்டுமே அவர்கள் ஆர்வமுடன் செயல்பட இது வழிவகுக்கும்.
அடிமட்டத்தில் ஊழலை கலைந்தால் மேல்மட்டம் வரை பலனளிக்கும்.
நிதி நெருக்கடி சூழலில் இந்தச் செலவு தேவையா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
எல்லா எம்எல்ஏக்களும் வசதி படைத்தவர்கள் அல்ல.
பலருக்கு சொந்தக் கார் கிடையாது. தான் தினமும் பேருந்தில் வருவதாகவும், ஒவ்வொரு முறையும் காவலர்கள் தன்னைப் பரிசோதிப்பதாகவும் ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவர் குறிப்பிட்டார்.
அவரைப் போன்றவர்களுக்கு கார் வழங்கும் அறிவிப்பு நிச்சயம் பயன் தரும். மக்கள் பணியாற்ற நிச்சயம் இந்த அறிவிப்பு உதவும். – at Thiruporur, India
1
83
பிஎம் கேர் நிதியில் என்ன நடக்கிறது?
பிஎம் கேர் நிதி ( பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரக்கால நிவாரணம்) 2020 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
கொரோனா காலத்தில் உதவுவதற்காக இந்த நிதியை பிரதமர் மோடி தொடங்கினார்.
ஏற்கெனவே பிரதமர் நிவாரண நிதி இருக்க, பிஎம் கேர் நிதி எதற்கு என்ற அப்போதே கேள்வி எழுப்பப்பட்டது.
ஒரு வழியாக 2024-25 ஆம் ஆண்டுக்கான கணக்கு தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதில், பிஎம் கேர் நிதியில் ரூ.8,452 கோடி மொத்த இருப்பு இருப்பதாகவும், இதிலிருந்து இதுவரை 0.01% தொகை மட்டுமே செலவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-25 நிதியாண்டில் மட்டும் ரூ.1,279.9 கோடி நன்கொடையாகக் கிடைத்தும், அதிலிருந்து வெறும் ரூ.87 லட்சத்து 85 ஆயிரம் மட்டுமே செலவழிக்கப்பட்டிருக்கிறது.
2020 மார்ச் முதல் 2025 மார்ச் 31 ஆம் தேதி வரை, மொத்தம் இருப்புள்ள ரூ.8,452.06 தொகையிலிருந்து ஐந்தில் ஒரு பங்கு (18.1%) மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் 17.8% தொகை செலவழிக்கப்பட்டுள்ளது.
சில துறைகள் இந்த நிதியிலிருந்து பெற்ற ரூ.324 கோடியைத் திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். அதன் விவரம் வெளியிடப்படவில்லை.
இவ்வளவு பெரும் தொகை பிஎம் கேர் நிதியில் அப்படியே வைக்கப்பட்டிருப்பது ஏன்? என்ற கேள்விக்கு மோடி அரசிடமிருந்து பதில் இல்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக பிஎம் கேர் நிதி குறித்து வெளியிடப்பட்ட தணிக்கை அறிக்கையைப் பதிவேற்றம் செய்யாதது ஏன்?
கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட பிஎம் கேர் நிதிக்கு, வெளிநாட்டிலிருந்தும் நன்கொடைகள் வந்தன.
நன்கொடையாளர்கள் பற்றிய தகவல்களை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருப்பதன் காரணம் என்ன?
ஆர்டியை சட்டத்தின்படி, இது குறித்து பொதுமக்கள் கேள்வி கேட்கும் போது, விளக்கம் தர மறுப்பது ஏன்?
இந்தக் கேள்விகளுக்கு விடை தராமல் மவுனம் காத்தால், பாஜக அரசு மீதான சந்தேகம் உறுதியாகும்.
1
79
நீட் தேர்வுக்கு எடப்பாடியும் பொறுப்பு!
மாணவர்கள் தனித்தனியாக பல நுழைவுத்தேர்வுகளை எழுதுவதைத் தவிர்த்து, நாடு முழுவதும் ஒரே தேர்வை எழுத வழிவகுப்பதற்காக காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் அதிகப்படியான நன்கொடை மற்றும் ஊழல் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்துவது,மருத்துவக் கல்வி மற்றும் சேர்க்கையில் அகில இந்திய அளவில் ஒற்றை மற்றும் சீரான தகுதி முறையைக் கொண்டு வருவது காங்கிரஸின் நோக்கமாக இருந்தது.
அப்போது உச்ச நீதிமன்றத்தால் நீட் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
மோடி தலைமையிலான ஆட்சியில், கடந்த 2016-ஆம் ஆண்டில் முழுமையாக நடைமுறைக்கு வந்தது.
ஒரு திட்டத்தைக் கொண்டு வரும்போது, அதற்கு எதிர்ப்பு இருந்தால் வலுக்கட்டாயமாக ஒருபோதும் காங்கிரஸ் திணித்தது இல்லை.
மக்கள் விரோதச் சட்டங்களை என்றைக்குமே காங்கிரஸ் நிறைவேற்றியதில்லை.
நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரித்து வருகிறது.
காங்கிரஸ் தான் நீட் தேர்வைக் கொண்டு வந்தது என்றால், அதை ஏன் பாஜக தொடர வேண்டும். அதை ரத்து செய்திருக்கலாமே?
முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஏன் வலியுறுத்தவில்லை?
எஜமானர்களைத் திருப்திப்படுத்த சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி ஏதேதோ பேசுகிறார்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது தான்,தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது.
அதற்கு முன்பு வரை நீட் தேர்வைத் தமிழ்நாட்டுக்குள் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கவில்லை.
நீதிமன்ற உத்தரவு என்று சொல்லித் தப்பிக்கப் பார்க்கிறார் எடப்பாடி. தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்த துரோகத்தை, நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னே மறைந்து தப்பிக்கப் பார்க்கிறார்.
காமராஜர் என்றாலே திமுகவுக்கு கசப்பது ஏன்?
தமிழகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு இன்றைக்கு இந்தியாவிலேயே சிறப்பாக இருக்கிறதென்றால், அதற்கு காமராஜர் மட்டுமே காரணம்.
தொழில்துறைக்கு அடித்தளமிட்டவர். எல்லோருக்கும் கல்வி வழங்கியவர்.அணைகளை கட்டி நீர்வளத்தை மேம்படுத்தியவர்.
அதனால் தான் முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை முதலமைச்சர் விஜய் சூட்டினார்.
மதிய உணவுத்திட்டம் என்ற ஒன்றை முதன்முதலில் அறிமுகப்படுத்திய அவர் பெயரை வைக்கக்கூடாதா?
அந்தத் திட்டத்துக்கு காமராஜர் பெயரை வைத்ததை திமுகவினரால் ஜீரணிக்க முடியவில்லை.
சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, காமராஜர் பெயர் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அதோடு, அநாகரிகமான உவமையையும் கூறி பெருந்தலைவரை இழிவுபடுத்தியிருக்கிறார்.
பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்துவதை திமுக அன்றையிலிருந்து தொழிலாகக் கொண்டிருக்கிறது.
லஞ்ச லாவண்யமற்ற, நேர்மையான ஆட்சி நடத்திய காமராஜர் பெயரை வைக்காமல் யார் பெயரை வைப்பது?
இந்த லட்சணத்தில் காமராஜருக்கு சிறப்பு சேர்த்ததே நாங்கள் தான் வாய் கூசாமல் பேசுகிறார் எ.வ.வேலு.
ஊழல் வழக்கில் சிக்கித் தலைமறைவாக இருந்த எ.வ.வேலுவுக்கு, காமராஜர் பெயரை உச்சரிக்கக்கூட அருகதை இல்லை.
பவானிசாகரில் காமராஜர் பெயரிலிருந்த பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயரை வைத்தார்கள்.
கடந்த ஆட்சியில் காமராஜர் பெயரை அழித்தொழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
யாரோ பெற்ற பிள்ளைக்கு பேர் வைப்பதை திமுக ஆட்சியில் பிழைப்பாகவே செய்து கொண்டிருந்தார்கள்.
குடியாத்தத்தில் காமராஜரை ஜெயிக்க வைத்தார்களாம். அவ்வளவு நல்லவர்களா இவர்கள்?
1967 சட்டமன்றத் தேர்தலில், தமிழக முதலமைச்சராகவும் தேசிய அளவில் 'கிங் மேக்கராகவும்' திகழ்ந்த காமராஜரை, அவரது சொந்தத் தொகுதியான விருதுநகரில், அப்போதைய மாணவர் தலைவரான சீனிவாசனை நிறுத்தி தோற்கடித்தவர்கள் தான் திமுகவினர்.
அவரை தனிப்பட்ட முறையில் மிக மோசமாக விமர்சித்தார்கள்...இன்றைக்கும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
காமராஜரை கொள்கைத் தலைவராக ஏற்ற முதலமைச்சர் விஜய், அந்த மாபெரும் தலைவனின் புகழைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
அது, திமுகவினருக்கு வயிற்றெரிச்சலாக இருக்கிறது. எரியட்டும்...எரிந்து கொண்டே இருக்கட்டும்! – at Sikkarayapuram, India
இதுதான் அந்தக் கவிதை
#RSS #BJP #காவிகளுக்கு #சாட்டையடி ...
உத்தரகாண்ட்டில்
ருத்ர தாண்டவமாடி,
அருணாசலபிரதேசத்தில்
அத்துமீறி அடாவடிகள்
நடத்தி,
கோவாவில்
காங்கிரசின் குடி கெடுத்து
பீகாரில்
லாலு-நித்தீசை பிரித்து
பின்வழியே
அதிகார பீடத்தைப்பிடித்து,
அரவிந்த் கெஜ்ரிவாலின்
அதிகாரச்செங்கோலை
முடக்கி,
புதுச்சேரி
நாராயணசாமிக்கு
புதுசு புதுசா
தொல்லைகளை அடுக்கி,
மணிப்பூரில்
மக்கள் தீர்ப்புக்கு எதிராக
மகுடத்தைப் பறித்து,
ஆளுநர்களை
அரசியல்
ஏஜெண்டுகளாக்கி
அக்கிரமங்கள் நடத்தி,
நீதித்துறை,
அரசியல் சாசனம்,
அமலாக்கப் பிரிவு,
வருமான வரி,
தேர்தல் ஆணையம்
சி.பி.ஐ., எனும்
தன்னாட்சி அமைப்புகளை
தலைகுனிய வைத்து,
அரசியல் அரிப்புக்கு
அவற்றை
சொறிகின்ற ஆயுதமாக்கி,
ஜனநாயகப்
படுகொலைகளை
சகஜங்களாக்கி,
சர்வாதிகார
பகல் கொள்ளையை
சாதனையென பீற்றி,
எழுபதாண்டு கால
இந்தியத்தின்
அரசியல் பண்பாட்டுக்கு
இழிவுகளைச் சேர்த்து
அப்பழுக்கற்ற
பாரதத்தின்
பன்முகத்தன்மையை
ஆழக்குழிதோண்டி
புதைத்து,
உச்சநீதிமன்றத்துக்கும்
அதிகாரம் இல்லையென
உக்கிரமான
அக்கிரமத்தை நிகழ்த்திய
இந்த உத்தமர்கள்தான்...
ஆண்டுக்கு
2.5 கோடி பேருக்கு
வேலை என
ஆசை வலை வீசியவர்கள்...
ஆளுக்கு 15 லட்சம்
ரொக்கம் என
வாய்ஜாலம் பேசியவர்கள்...
அலைமீது
வலைகொண்டு
வாழும் மீனவர்க்கு
அமைச்சகமென
அள்ளி வீசியவர்கள்...
அமெரிக்க
டாலர் மதிப்பை
35 ரூபாய்க்குள்
அடக்குவோம்,
பெட்ரோல்&டீசல்
விலையை
பாதியாகக் குறைப்போம்...
என்றெல்லாம்
வகை வகையான
வாயாலே
வடை சுட்டவர்கள்...
வாய்மையால்
விடை சொல்ல
வழியற்றவர்கள்...
விளைநிலங்களை
வெடிகுண்டு
கிட்டங்கிகளாக்கி
விவசாயி வயிற்றில்
அடிப்பவர்கள்...
வாக்களித்த மக்களை
‘வரி’ குதிரை
ஆக்கியவர்கள்...
கரன்சியை வெற்று
காகிதமாக்கி
‘கருப்பு பணம்
ஒழித்தோம்’ என
கதையளப்பவர்கள்...
இவர்கள் முன்னின்று
நடத்தியதெல்லாம்
மோசடிகளும்
கூடவே
மோடியா? இந்த
லேடியா? என
சவால் விட்ட இயக்கத்தை
மூன்றாகப் பிளந்ததும்
ஈரிலையை முடக்கி
இன்னல்கள்
தந்ததும்தானே!
இப்படி
எல்லார் குடியையும்
கெடுத்து எதையடா வாரிக்கட்டிக் கொள்ளப் போகிறீர்கள்???
நேற்று பேசிய மோடி அவர்களின் 13 ஆண்டுகள் சாதனைகளின் பட்டியலில் ஒருசில இங்கே 😀😀😀😀😀
நயினாரின் ஆபாச நாக்கு!
அநாகரீகத்தின் உச்சத்தை எட்டியிருக்கிறார்கள் பாஜகவினர்.
முதலமைச்சர் மற்றும் அவரது தாயார் குறித்து ஆபாசமாகப் பேசியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதை தொடர்ந்து வழக்கமாகக் கொண்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன்.
ஏற்கெனவே நடிகை ஒருவரை ஆபாசமாகப் பேசி பின்னர் வருத்தம் தெரிவித்தவர் இதே நயினார் நாகேந்திரன் தான்.
தமிழக பாஜகவினருக்கு ஆபாசம் என்பது புதிதல்ல. பாஜகவின் மூத்த தலைவர் கே.டி.ராகவன் பெண் ஒருவரிடம் ஆபாசமாக பேசியது சமூக ஊடகங்களில் வைரலானது.
இப்பேற்பட்ட கட்சியின் தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
முதலமைச்சர் விஜய் 8 கோடி தமிழர்களுக்குமானவர். மக்கள் நேசிக்கக்கூடிய தலைவர்.
அவரைத் தாக்குவதாக நினைத்துக் கொண்டு பெண்களை ஆபாசமாகவும் அருவெருப்பாகவும் பேசுவதும் நயினார் நாகேந்திரனுக்கு கைவந்த கலையாகி இருக்கிறது.
தாயின் மகத்துவம் நயினாருக்கு தெரியாதா? அவரது தாயாரை தெய்வமாக நினைக்கிறாரா? அல்லது குறைத்து மதிப்பிடுகிறாரா?
தாயைத் தெய்வமாக மதிக்கும் தமிழ்நாட்டில், பாஜகவின் தலைவர் நயினாரின் பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்தியில் ஆள்கிறோம் என்ற திமிரில், தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்பது தான் அவரது தைரியத்துக்குக் காரணம்.
பெண்களை தரக்குறைவாகப் பேச வேண்டியது, மக்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளமபியதும் அப்படிப் பேசவில்லை என்று பல்டி அடிப்பது இவருக்கு வாடிக்கையாகி விட்டது.
முதலமைச்சரை அவமதித்தது 8 கோடி மக்களை அவமதித்ததற்கு சமம். எனவே, தயவுதாட்சண்யமின்றி நயினார் நாகேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். – at Thiruporur, India
காங்கிரஸ் தியாகத்தை நினைவுகூர்வோம்!
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பங்கு மிக மகத்தானது.
1885-ல் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் போன்ற மாபெரும் தலைவர்களின் தலைமையில் அகிம்சை வழிப் போராட்டங்கள் மூலம் மக்களை ஒருங்கிணைத்து, நாட்டின் விடுதலைக்கு வித்திட்டது.
அகிம்சை மற்றும் மக்கள் இயக்கங்கள் ஒத்துழையாமை இயக்கம் (1920) மூலம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான மக்கள் கோபத்தை வெளிப்படுத்தியது.
சட்ட மறுப்பு இயக்கம் மற்றும் உப்பு சத்தியாகிரகம் போன்ற அகிம்சையான அறப்போராட்டங்களை நடத்தியது.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942) மூலம் பிரிட்டிஷாருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து நாடளாவிய எழுச்சியை ஏற்படுத்தியது.
தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் தியாகங்கள் சொல்லி மாளாது.
லாலா லஜபத் ராய் போன்ற மூத்த தலைவர்கள் பிரிட்டிஷாரின் தடியடியில் பலத்த காயமடைந்து உயிர் துறந்தனர்.
ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் பல ஆண்டுகள் கொடிய சிறைச்சாலைகளில் சித்திரவதைகளை அனுபவித்தனர்.
தங்களது தனிப்பட்ட வாழ்க்கையைத் துறந்து, நாட்டுக்காகச் சொத்துகளை இழந்து பலரும் சுதந்திரப் போரில் பங்கெடுத்தனர்.
சமூக ஒற்றுமை மற்றும் கட்டமைப்பு சாதி, மத பேதங்களைக் கடந்து இந்தியர்களை ஒரே லட்சியத்தின் கீழ் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைத்தது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய ஜனநாயக இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கவும் தேசத்தை ஒருங்கிணைக்கவும் வழிவகுத்தது.
80 வது சுதந்திர தினத்தை இன்று நாடு வெகு விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்
இந் நன்னாளில் காங்கிரஸ் கட்சியின் லட்சோப லட்ச தொண்டர்களின் தியாகங்களை நினைவுகூர்வோம்! – at Thiruporur, India
மாநில உரிமையைப் பறிக்கும் பாஜக அரசு!
கனிமங்கள் மீதான மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் வகையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்தல்) திருத்த மசோதா 2026ஐ மத்திய பாஜக -அரசு மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவின் பிரிவு 2, கனிமம் கொண்ட நிலங்களையும் ஒழுங்குபடுத்துவதற்கான கூடுதல் அதிகாரத்தை மத்திய அரசுக்கு அளிக்கிறது.
இது முழுக்க முழுக்க மாநில அரசுக்கு தன் எல்லைக்குள் உள்ள நிலத்தின் மீதான உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையாகும்.
இம்மசோதாவானது MMDR 1957 சட்டத்தில் பிரிவு 9D என்பதைப் புதிதாக இணைக்கிறது. இது மிக மிக ஆபத்தான திருத்தமாகும்.
இத்திருத்தத்தின்படி, கனிமங்களின் உரிமைகள் அல்லது கனிம வளம் கொண்ட நிலங்கள் மீது எந்த வரியையும், தீர்வைகளையும் அல்லது வேறு எந்தப் பெயர் கொண்ட கட்டணத்தையும் மாநில அரசுகள் தன்னிச்சையாக விதிக்க முடியாது.
அப்படி விதிக்க வேண்டுமென்றால் ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்படும் கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் மட்டும்தான் வரி விதிக்க முடியும்.
இத்திருத்தமானது முழுக்க முழுக்க மாநில உரிமைகளை முடக்குவதோடு, கூடுதல் நிதிச்சுமையை மாநிலங்களுக்கு ஏற்படுத்தக்கூடியது.
‘‘நிலம் என்பது மாநிலப் பட்டியலின் பிரிவு 18-ன் கீழ் வரும் ஒரு மாநில விஷயமாகும். மாநில சட்டமன்றங்களுக்கு நிலத்தின் மீது வரி விதிக்கும் அதிகாரமும் உண்டு’’ என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது.
இப்போது கொண்டு வரப்பட்ட MMDR மசோதா இத்தீர்ப்புக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது.
அதானி பலன் அடையும் வகையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதாவை தமிழகம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
























