Pinned Tweet
#hope
முதல் ஒரு மணி நேரம் ஏலியனையே காட்டாம, அடுத்து என்ன நடக்கும்னு ஆர்வத்தைத் தூண்டி நல்லா கொண்டு போயிருக்காங்க...
தமிழ் டப்பிங்கில் காமெடியை நல்லாவே பண்ணியிருக்காங்க...
வழக்கமான ஏலியன் படங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசமான முயற்சி! ஆக்ஷன், காமெடி, த்ரில்லர் என எல்லாமே ரசிக்க வைக்குது...
குறிப்பா தாத்தா வர்ற சீன் செம 😂
VFX மட்டும் இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருந்தா படம் இன்னும் சிறப்பா இருந்திருக்கும்...
Part 2-க்கான லீடும் இருக்கு... பார்ப்போம்...
#NithyViews
😂😂😂
#GodzillaMinusZero Postponed Indefinitely From November 6 in India😳👀
“ The One ” #Suriya Vantha Thalli Pogithana Aganum😎🔥
Nithy retweeted
#SattamumNeedhiyum2 - Average ⭐️ ⭐️ ✨ (2.5/5)
OTT: ZEE5
Language: Tamil
Single sitting-ல முடிச்சிடக்கூடிய ஒரு Binge-watch Series தான் இந்த SattamumNeedhiyum2.
Season 1-ஏ ஒரு அளவுக்கு சுமாரான ரகம் தான். Season 2-லயும் பெருசா எந்த மாற்றமும் இல்லை. அதே டெம்ப்ளேட், அதே மாதிரியான திரைக்கதை தான்.
ஒரு Inspector இறந்து போக, அது கொலைதான் என்று அவருடைய மனைவியான வழக்கறிஞர் நாலு பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடுறாங்க.
இன்னொரு பக்கம், அந்த நாலு பேரும் நிரபராதிகள் என்று நிரூபிக்க நம்ம சித்தப்பு களமிறங்குறார். இதைத் தொடர்ந்து நடக்கும் Courtroom Drama தான் இந்த சீரிஸ்.
Courtroom காட்சிகள் எல்லாமே ரொம்ப மேலோட்டமாகவே இருக்கு. எந்த ஒரு வாதமும் அழுத்தமாக இல்லாததால், காட்சிகளிலும் பெரிய தாக்கம் ஏற்படவில்லை.
பெருசா எதிர்பார்க்காம, நேரம் போகலைன்னா ஒரு எட்டு எட்டிப் பார்த்துட்டு வரலாம்.
அதுக்கு மேல பெருசா எதுவும் இல்லை 😐
Nithy retweeted
சார், இந்த வீடியோவை ஒரு முறை பாருங்களேன்.. @imrajmohan
ஒரு சாதாரண மனுஷனா இருக்கும்போது என்னென்ன பேசுறீங்க.. அப்படிப் பேசி பேசி அந்த இடத்துக்கு வந்த பிறகு, நீங்களும் அதே விஷயத்தைத்தானே செய்றீங்க?
என்ன மாற்றம் வந்திருக்கு?
இப்போ அதே கேள்வியை உங்களைப் பார்த்துக் கேட்க இன்னொரு YouTube சேனல் தேவைப்படுது..
இதுதான் மாற்றம். வேற ஒண்ணும் இல்லை..
VPN போட்டு வெப்சைட்களைப் பார்க்கிறதுக்காக இனிமேல் VPN ஆப்ஸை டவுன்லோட் பண்ணாதீங்க...
அதற்குப் பதிலா, வீடியோல இருக்கற வெப்சைட்டை பயன்படுத்திப் பாருங்க...
#VPN {Source - Instagram}
Is it possible @grok? And how does it work?
#NewsUpdate | மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி உலகம்.. பில் கேட்ஸ் கொடுத்த அலர்ட்!
#SunNews | #BillGates | #AI | #Robotics
Nithy retweeted
அதிகாரத்துல இருக்கவங்க நினைச்சா, சாமானிய மக்களோட வாழ்க்கையை எப்படி சீரழிக்க முடியும்னு காட்டுற படங்கள்ல ஒண்ணா இருந்திடாம, கொஞ்சம் வித்தியாசமான திரைக்கதையில சொல்லியிருக்காங்க..
#LeninPandiyan 👏
படிப்போட முக்கியத்துவத்தை அந்த Judge character மூலமா ரொம்ப அழகா சொல்லியிருக்காங்க. அந்தக் கதாபாத்திரம் பேசுற விஷயங்கள் நிறைய யோசிக்க வைக்கும்..
ரோஜா & கங்கை அமரன் ரெண்டு பேரோட கதாபாத்திரங்களும் நல்லா இருந்துச்சு. குறிப்பா, அந்த போலீஸ் கேரக்டர்ல நடிச்சவர் நடிப்பு ரொம்ப நல்லா இருந்தது..
Overall, நல்ல படம். கண்டிப்பா பார்க்கலாம்! 👏
Nithy retweeted
கஜப் ராத் (2026) - ரிவ்யூ
⭐ ⭐.75/5
தமிழ் டப்புடன் ✅ நெட்ப்ளிக்ஸ்ல இருக்கு..
இரவு நேரத்தில் டெல்லியில் படுகாயத்துடன் ஒரு பெண் ரோட்டில் வீசப்படுகிறார். அந்த ஏரியா ஊழல் போலீஸ் இந்த கேஸின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.
சாதாரண கேஸ் போல ஆரம்பிக்கும் இந்த கேஸில் திடீரென சிபிஐ, என்ஐஏ, என்ஜிஓ என பல துறைகள் உள்ளே வந்து அந்த பெண்ணை கொல்ல முயற்சி செய்கிறார்கள். ஏன் எதற்கு என்பது தான் படம்..
ஊழல் போலீசாக மனோஜ் பாஜ்பாயி செம நடிப்பு...முதல் பாதி பரபரப்பாக போனாலும் ரெண்டாவது பாதி ஸ்லோ ஆகிறது.. மனோஜ் பாஜ்பாயி கேரக்டர் குழப்பமாக இருந்தது..டிரான்பர்மேஷன் நம்பும்படியாக இல்ல.
டைம் பாஸ் படம் கண்டிப்பாக ஒரு டைம் பார்க்கலாம்..
Nithy retweeted
#dorothy
கார்த்திக் சுப்புராஜ் மறுபடியும் ஒரு வித்தியாசமான உலகத்துக்குள் நம்மை கூட்டிட்டு போயிருக்கார். 90s மதுரை பின்னணியில் நட்பு, சாதிய மனநிலை, ஆணாதிக்கம், வன்முறைன்னு பல விஷயங்களை தொட்டு செல்லுது இந்த Dorothy.
சனந்த், ரிஷிகாந்த் ரெண்டு பேருமே நடிப்பில் அசத்தியிருக்காங்க. குறிப்பா, ஆண்மைன்னு இந்தச் சமூகம் கட்டமைத்து வச்சிருக்கிற விஷயங்களை படம் கேள்வி கேட்கும் விதமும், அந்த வசனங்களும் 👌.
திருவின் cinematography படத்துக்கு ஒரு தனி அழகை கொடுக்குது. இளையராஜாவும் திருவும் சேர்ந்து படத்தை வேறொரு தளத்துக்கு எடுத்துட்டு போறாங்க. குறிப்பா ராஜாவின் BGM பல இடங்களில் கதாபாத்திரங்கள் பேசாத உணர்வுகளைக்கூட நமக்கு கடத்திடுது. ❤️
இளையராஜா இல்லாம வேற யார் வேலை செஞ்சிருந்தாலும் படம் ஜீவனை இழந்துருக்கும்.
கீர்த்தி சுரேஷின் character க்கு இன்னும் கொஞ்சம் depth கொடுத்திருக்கலாம். Second half ல் சில விஷயங்கள் அவசரமாக நடக்கிற மாதிரி இருக்கு. குறிப்பா climaxஐ நோக்கிப் போகும் twists எல்லாமே போதுமான அளவுக்கு organically develop ஆகலைங்கிறதுதான் என்னோட feel.
ஒருத்தரை ஏத்துக்கிறதுக்கும், அவங்க மேல காதல் வர்றதுக்கும் என்ன சம்பந்தம்?
Friendship வேற, love வேற, sexual identity வேற. இந்த வித்தியாசங்களை படத்தோட பெரும்பாலான இடங்களில் நல்லாவே புரிஞ்சு கையாண்ட இயக்குநர், climaxல் மட்டும் ஏன் அப்படி முடிவெடுத்தார்னு புரியலை.
கார்த்திக், சுப்புவை அவனோட identityயோட முழுசா accept பண்ணிக்கிட்டு, அவங்களுக்குள்ள இருக்கிற friendship இன்னும் ஆழமானதா மாறியிருந்தாலே, அது இன்னும் வலுவா Audience மனசுல பதிஞ்சிருக்கும் என்பது என்னோட பார்வை.
வடிவு அண்ணன் தான் கார்த்திக் சுப்புவை காதலிக்கிறான்னு அவனை நம்ப வைக்கிறான். ஆனால், கார்த்திக்கு சுப்புவின் மேல இருந்தது ஆழமான பாசம். அதனாலதான் அவனை தப்பிக்க விட்டிருக்கான். கொல்லாம இருந்திருக்கான்.
கார்த்திக் ஒரு பெண்ணையும் ஏற்கனவே காதலிச்சிருக்கான். அப்படியிருக்க, அவன் உண்மையிலேயே சுப்புவை காதலிச்சிருந்தா, சுப்பு ஆணாக இருந்தப்பவே அந்தக் காதல் ஏன் வெளிப்படலைங்கிற கேள்வி எழுது.
ஒரு படம் இந்த விஷயத்தை சரியா handle பண்ணினா, இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையிலான காதல் அல்லது sexual attraction ஐ ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தாம, சரியான தருணத்தில் அதை reveal பண்ண முடியும்.
இதுக்கு ஒரு சிறந்த example, உலக சினிமா ரசிகர்கள் இன்னைக்கும் கொண்டாடுற Mexican/spanish film - Y tu mama tambien.
ஆரம்பத்தில் ஒரே பெண்ணை விரும்புற இரண்டு நண்பர்களோட கதையை போலதான் படம் நகரும். ஆனால், climaxல் அந்த இரண்டு நண்பர்களுக்கும் இடையில் ஏற்கெனவே இருந்த attraction வெளிப்படுற விதம், அவங்களோட relationshipஐ வேறொரு கோணத்தில் நம்மை பார்க்க வைக்கும். அந்தப் பெண் character அவங்களுக்குள் ஏற்கெனவே இருந்த ஈர்ப்பை வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு catalyst ஆக செயல்பட்டிருப்பாள். ஆனால் கடைசியில் இரண்டு பேரும் பிரிஞ்சு அவங்க அவங்க வாழ்க்கைனு செட்டில் ஆகிருவாங்க.
இப்படிப்பட்ட கதைகளில் அந்த இரண்டு பேருக்கும் இடையிலான attraction, confusion, emotional conflict எல்லாமே Audience க்கு மறுக்க முடியாத அளவுக்கு தெளிவா தெரியனும். அது இங்க மிஸ்ஸிங்.
அதுவரைக்கும் சுப்புவுக்கு கார்த்திக் மேல காதல் இருக்கிறதற்கான எந்தவொரு subtle hintஐயும் படம் கொடுத்திருக்காது. அதற்குள் படம் climaxஐ நெருங்கிடுது. அதனால, அந்த காதல் நமக்கு believable ஆகவும் இல்ல. அந்த உணர்வை உள்வாங்கிக்கிறதுக்கான emotional space ஐயும் படம் கொடுக்கல.
எதுவுமே நடக்காத மாதிரி சுப்பு இயல்பாக பேசுறார். கார்த்திக்கும் திடீர்னு நடந்த இந்த மாற்றத்தை புரிஞ்சுக்கிட்டு, எல்லாத்தையும் சாதாரணமாக எடுத்துக்கணும்னு எதிர்பார்க்கிற மாதிரி இருக்கு. அந்த மாற்றம் கார்த்திக்குள் ஏற்படுத்திய emotional impact ஐ இன்னும் ஆழமாக காட்டியிருந்தா, ஒருவேளை அந்த climax இன்னும் powerful ஆக அமைஞ்சிருக்கலாம்.
Queer மக்களை பற்றி பேசுற ஒரு படம் வந்துட்டா, அதோட flaws ஐ பெருசா பார்க்காம, representation க்காகவே பாராட்டிடணும்னு நினைக்கிற பார்வையும் நிறைய பேர்கிட்ட இருக்குது.


















