Ntk Memes retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்து, 120வது நாளில் கைது செய்யப்பட்டிருக்கிறான் கள்ளக்குறிச்சி விஜய்யான அருள் விக்னேஷ்.
Ntk Memes retweeted
இனத்தை அழித்த காங்கிரஸ் கூட தவெக நின்னுகிட்டு எனக்கு பாடம் எடுக்கயா அண்ணன் சீமான் 🔥🔥🔥
Ntk Memes retweeted
ஒரு கோமாளியிடம் தமிழ்நாடு சிக்கியிருக்கிறது.
பொறுப்புணர்ச்சி, தலைமைப்பண்பு இதுவெல்லாம் மயிரிழை அளவுக்குக்கூட விஜய்யிடம் இல்லை.
தான் எது செய்தாலும் அதனைக் கொண்டாடும் தற்குறிக்கூட்டத்தை வைத்தே, ஐந்து ஆண்டுகளும் வண்டி ஓட்டிவிடலாம் எனும் மிதப்பில் இருக்கிறார் விஜய்.
அந்த நினைப்பில் மண் விழும் காலம் வெகுதொலைவில் இல்லை.
"ஐயோ வந்துட்டாரே" கலாய்ப்பாரே!
"நானே Assembly-யில் அமைதியாக இருப்பேன், அவங்களே ஆசைப்பட்டு கேக்குறாங்க வேற என்னப்பா பண்றது" - முதல்வர் விஜய்
CM Vijay | TVK | TVK Education Award
#CMVijay #Students #Newstamil24x7
Ntk Memes retweeted
திசதிருப்புறாரமா !
யோவ் ஊழல் உன் கட்சிக்காரன் எவன் பண்ணல ? ஈரோடு பாலாஜி விஜய் அவர் சகோதரர்கள் கை வைக்காத இடமே இல்லை. என்னமோ யோக்கியன் போல பேசுற..
கள்ளகுறிச்சி MLA மேல நடவடிக்கை எடுக்காம எதுக்கு மூடி மறைக்க முயற்சி பண்ணினது இந்த அரசு ? அதுக்கு பதில் சொல்லு..
இப்படி வெக்கமே இல்லாம சின்ன பசங்களை வச்சி திசை திருப்பிவிட முயற்சி பண்றயே உனக்கெல்லாம் வெக்கமா இல்லை? அப்படினு மக்கள் அங்கே நாக்க புடுங்கிறங்க.. எதுவுமே தெரியாத மாதிரியே சுத்திவர.
"ஊழலை ஒழிக்க நான் எடுத்த நடவடிக்கையால் சிலரின் பேஸ்மென்ட் ஆடிப்போயுள்ளது".. ஊழலை ஒழிக்க முடியவில்லை என்றால் கட்டுப்படுத்தவாவது முயற்சிக்க வேண்டும்.. கல்வித்துறையில் ஊழல் என்பதை எப்படி ஏற்க முடியும்? - முதலமைச்சர் விஜய்
#Chennai | #Neelankarai | #TVK | #CMVijay | #Vijay | #KalviViruthuVazhangumVizha | #கல்விவிருதுவிழா | #Students | #PolimerNews
Ntk Memes retweeted
மானங்கெட்ட முதல்வரே! @TVKVijayHQ
ஒரு மாவட்ட ஆட்சியர் கொடுத்த புகாரை விசாரிக்காது, 115 நாட்களாக மூடி மறைத்து, குற்றவாளியைக் காப்பாற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தியது எல்லாம் முறைகேட்டில் வராதா? ஊழலில் சேராதா?
Ntk Memes retweeted
”மதுபோதையில் என் வண்டியை வந்து இடிச்சிட்டாரு.. என்னனு கேட்டதுக்கு தகாத வார்த்தையில் திட்டுனாரு”.. எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது இளைஞர் பரபரப்பு குற்றச்சாட்டு
Kallakurichi MLA | Complaint | Liquor Drinking
#Newstamil24x7 #TVKMLA
Ntk Memes retweeted
உலகத்தமிழர்களின் ஒற்றைத்தலைவர் , தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் புகழ் போற்றுவோம் !
#தேசியத்தலைவர்72
#Hbd_Tamil_National_leader
Ntk Memes retweeted
அரியலூர் மூன்று வயது பெண் குழந்தை நிவிஷ்னா மரணத்திற்கு காரணம் யார்? பெற்ற பிள்ளையை பறிகொடுத்து பெற்றோரை நீதிகேட்டுப் போராடவிடுவது ஏன்?
@CMOTamilnadu
@TVKVijayHQ
அரியலூர் மாவட்டம், சிலுப்பனூர் கிராமத்தில் காணாமல்போன மூன்று வயதுக் குழந்தை நிவிஷ்னா, குட்டையில் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்ட செய்தியும் நெஞ்சைப் பிளக்கிறது. குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உரிய விசாரணை கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது பெரும் வேதனையளிக்கிறது. அன்புமகள் நிவிஷ்னாவை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும் உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
உலகம் என்னவென்றே அறியாத பிஞ்சுக்குழந்தை உயிரிழந்திருக்கிறது. மகளைப் பறிகொடுத்த பெற்றோர், தங்கள் குழந்தைக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியக்கூடப் போராட வேண்டுமா? குழந்தையை இழந்த துயரத்தோடு, நீதிக்காக அலையும் துயரத்தையும் அந்தக் குடும்பம் சுமக்க வேண்டுமா?
குழந்தை காணாமல்போன இடத்திலிருந்து குட்டைக்குச் சென்றது எப்படி? அதற்கான தடயங்கள் கிடைத்துள்ளனவா? குழந்தையின் மரணத்தில் சந்தேகம் எழுப்பும் குடும்பத்தினரின் வாக்குமூலங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டனவா? அவர்கள் முன்வைக்கும் ஒவ்வொரு கேள்வியும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதா? பெற்றோரின் சந்தேகங்களைப் போக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு இருக்கிறதா, இல்லையா? குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மேடைதோறும் பேசும் தவெக அரசு, இக்குடும்பத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறது?
உடற்கூறாய்வு, தடயவியல் ஆய்வு, சம்பவ இடத்தின் சூழல், சாட்சியங்கள் ஆகிய அனைத்தையும் இணைத்து விசாரிக்க வேண்டும். குழந்தைக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல், இந்த வழக்கின் விசாரண முடியாது!
எனவே, காவல்துறை மூலம் விரைவான விசாரணை நடத்தி ஆதாரங்களின் அடிப்படையில் குழந்தையின் மரணத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
குழந்தை நிவிஷ்னா குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Ntk Memes retweeted
கூச்சமே இல்லை !
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினம்!
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுப்போம்! பெண்களின் பாதுகாப்பு, சுதந்திரம், சம உரிமை மற்றும் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வது ஒவ்வொருவரின் கடமையாகும்.
பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் ஒழித்து, அச்சமற்ற சமூகத்தையும், சமத்துவமான எதிர்காலத்தையும் உருவாக்க உறுதியேற்போம்.
பெண்களின் பாதுகாப்பே சமூகத்தின் முன்னேற்றம்!
பெண்களைப் போற்றுவோம்… உரிமைகளைப் பாதுகாப்போம்… வன்முறையற்ற உலகைப் படைப்போம்!
மாண்புமிகு கு.ஜெகதீஸ்வரி,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்.
#பெண்களுக்குஎதிரானவன்முறைஒழிப்புதினம் #InternationalDayForTheEliminationOfViolenceAgainstWomen #StopViolenceAgainstWomen #EndViolenceAgainstWomen #WomenSafety #WomenEmpowerment #GenderEquality
Ntk Memes retweeted
கள்ளக்குறிச்சி MLA கைது இல்லையாம்.
கள்ளக்குறிச்சி MLA அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் பண்ணவங்க கைதாம்!
அமோகமான மாற்றம்!
Ntk Memes retweeted
MLA அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு அனுப்பிய ஆபாசக் குறுஞ்செய்தியை நடிகை திரிஷாவுக்கு அனுப்பியிருந்தால் 115 நாட்கள் வாயை மூடிக்கொண்டு இருந்திருப்பாரா விஜய்?
Ntk Memes retweeted
நெலைம மோசமா போய்க்கிட்டு இருக்கு.
இது ஒன்னும் சரிப்பட்டு வராது. பேசாம Road Showவ போட்ற வேண்டியதுதான்!
Ntk Memes retweeted
This you bro??
(காலைல ஒரு வாய், சாயங்காலம் ஒரு வாய்
தே*டியா தோத்துருவாடா உங்க கிட்ட 😮...)
Ntk Memes retweeted
தமிழக காவல்துறையின் கவனத்திற்கு !
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது புகார் அளித்து, நீதிமன்றம் அதற்கென்று தனிப் படையை உருவாக்கி விசாரிக்கச் சொல்லி இருக்கிற இந்த சூழ்நிலையில், மாவட்ட ஆட்சியரை கண்ணியக் குறைவாக பேசும் இது போன்ற நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?
#vulgarwarriors
Ntk Memes retweeted
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தனக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அவர்கள் புகார் தெரிவித்திருப்பது தறிகெட்டு நிற்கும் தவெக ஆட்சியின் மோசமான நிலைக்கான சான்றாகும்.
ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கே தவெகவின் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை; அதுவும் தவெகவின் சட்டமன்ற உறுப்பினரே அத்துமீறி நடந்துகொள்ள முனைகிறார் என்றால், எளிய மக்களுக்கு இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கும்?
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறிதும் பொறுத்துக்கொள்ளாத (Zero Tolerance) கொள்கையைக் கடைப்பிடிப்போம் என்று மேடைகளில் வீராவேசமாக முழங்கிய முதல்வர் விஜய் அவர்கள், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காது காப்பாற்றிவிட முனைந்தது எதற்காக? அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அமைச்சர்களைக் கொண்டு பேச வைத்தது ஏன்? அதிமுக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் இப்போதுவரை முதல்வர் விஜய் ஏன் வாய்திறக்கவில்லை? அமைதியாக இருந்து எதை சாதிக்க நினைக்கிறார்?
கடந்த சூலை 31 அன்றே இந்த விவகாரம் அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு புகார் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 115 நாட்களாக முதல்வர் விஜய் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? புகார் தெரிவிக்கப்பட்டப் பிறகும், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அரசுத்தரப்பு எதற்காக சப்பைக்கட்டு கட்டியது? இது மோசடித்தனம் இல்லையா? குற்றவாளியைக் காப்பாற்றும் விதத்திலான முதல்வர் விஜய்யின் நிர்வாக அணுகுமுறை இழிவானது இல்லையா? கடும் கண்டனங்கள்!
பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி, மரியாதையுடன் வாழும் சூழலை உருவாக்குவதே அரசின் முதன்மை நோக்கம் என்று கூறினீர்களே முதல்வரே! ஒரு மாவட்ட ஆட்சியரே, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் தெரிவித்து, நடவடிக்கை கோரி, நீதிமன்றத்தில் புகார்கூற வேண்டிய நிலை என்றால், எளிய பெண்கள் எந்த நம்பிக்கையில் காவல்துறையை அணுகுவார்கள்? பெண்களுக்கு அண்ணனாகத் துணை நிற்பேன் என்றும், இரு பெண்களைக் கொள்கைத் தலைவர்களாக ஏற்றிருக்கிறோம் என்றும் மேடைதோறும் பேசிய முதல்வர் விஜய், இந்தப் புகார் அரசின் கவனத்துக்கு வந்தபோது ஏன் மௌனம் காத்தார்? நடவடிக்கை எடுக்க மறுத்தார்? தனிக்கட்சிப் பெரும்பான்மை இல்லாத தனது ஆட்சியைத் தக்க வைக்க எந்த எல்லைக்கும் முதல்வர் விஜய் செல்வாரேன்றால், இது மாற்றமா? கொடும் துர்நாற்றமா?
தாராபுரம் இடைத்தேர்தல் வழக்கில், என்னுடைய தங்கை கார்த்திகாவைக் கைது செய்ததில் காட்டிய அவசரமும், பயணத்தின் இடையே தம்பி இசை மதிவாணனைக் கைது செய்ததில் காட்டிய முனைப்பும், அரசை விமர்சித்துப் பேசிய தம்பி சாட்டை துரைமுருகன் மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவுசெய்ததில் காட்டிய வேகமும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான இந்தப் புகாரில் எங்கே போனது?
தாராபுரம் இடைத்தேர்தலில் சத்தியபாமா உருவக்கேலிக்கு ஆளானபோது கண்டனம் தெரிவித்த முதல்வர், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவின் புகார் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை? மாண்புமிகு நீதிபதி விக்டோரியா கௌரி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் இவ்விவகாரம் குறித்துப் பேசியதைத் தொடர்ந்து, அவர் மீது தவெகவினர் பொழிந்த ஆபாச வசைகளையும், கீழ்த்தரமான விமர்சனங்களையும் முதல்வர் கண்டிக்காதது ஏன்? பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று தமது கட்சியினரிடம் சொல்லக்கூட முதல்வருக்குத் தயக்கமா?
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட சம்பவமே நடைபெறவில்லை என்று ஊடகச் சந்திப்பில் மறுத்த அமைச்சர் நிர்மல்குமார், எந்த அடிப்படையில் அவ்வாறு கூறினார்? புகாரை மூடி மறைக்கத் துணைபோன அமைச்சர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தேசிய மகளிர் ஆணையம் உள்நுழைந்து, உயர் நீதிமன்றம் தலையிட்டு, மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கும் வரை அரசு காத்திருந்தது ஏன்? தேசிய மகளிர் ஆணையமும், சென்னை உயர் நீதிமன்றமும் தலையிடும் நிலை வரும்வரை அரசின் நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது? பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது? பெண்கள் துணிந்து புகார் அளிக்க வேண்டும் என்று சொல்லும் அரசே, ஒரு பெண் மாவட்ட ஆட்சியரின் புகாருக்குப் பதிலளிக்க இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது பேரவலம் இல்லையா?
ஆகவே, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
























