VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
வியப்புக்குரிய ஆளுமை ,!
சமத்துவம் ததும்பும் தோழமை !
மாண்பமை அமைச்சர்
அண்ணன் எம். ஆர். கே. பன்னீர் செல்வம் அவர்கள்.
எழுச்சித்தமிழர் மரியாதைக்குரிய நமது தலைவர் அவர்களின் வெற்றிக்கு தொடர்ந்து அரும்பாடு பட்டு அதை தேர்தல் களத்தில் சாத்தியமாக்குகிற ஆளுமையாக அண்ணன் எம். ஆர். கே. பன்னீர் செல்வம் அவர்கள் திகழ்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் மட்டுமே கிடைத்ததால் எழுச்சித்தமிழரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. இந்த வெற்றிக்கு பின்னால் அண்ணன் எம். ஆர். கே அவர்களின் கள்ளங்கபடமற்ற அரிய உழைப்பு இருக்கிறது என்பதை சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை.
தலைவர் அவர்களின் மணி விழா மேடையில் திமுக வெற்றிக்கு சிறுத்தைகளின் பங்களிப்பு முக்கியமானது என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மனதார புகழ்ந்தார் அதே மனசாட்சியோடு நமது தலைவரின் வெற்றிக்காக உழைத்த அண்ணன் எம். ஆர். கே. பன்னீர் செல்வம் அவர்களை எண்ணிப் பார்க்கிறேன் !
காட்டுமன்னார்க்கோயில் பேரூராட்சி தலைவர் பதவி என்பது பொதுவில் ஒதுக்கப்பட்ட பதவியாகும். ஆனால் பேரூராட்சியில் ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்த அண்ணன் திரு கணேசமூர்த்தி அவர்களை பேரூராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற செய்தவர் அண்ணன் எம்.ஆர்.கே அவர்கள்.
இந்த சரித்திர சாதனையை ஆரவாரம் ஏதும் இல்லாமல் அமைதியாக அவர் சாதித்திருக்கிறார்.
காட்டுமன்னார்க்கோயில் ஒன்றியம் பொதுத்தொகுதிதான். பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது , அதில்கூட சிறுபான்மை சமூகத்தை சார்ந்த இஸ்லாமிய சகோதரி திருமதி சஃதியா பர்வீன் அவர்களை ஒன்றிய பெருந்தலைவராக வெற்றி பெற செய்து தனது சமத்துவ உணர்வை சமூக நல்லிணக்க பாங்கை உறுதி படுத்தியிருக்கிறார் அண்ணன் எம். ஆர். கே. பன்னீர் செல்வம் அவர்கள்
பெருந்தலைவர் அய்யா எல் இளையபெருமாள் அவர்களுக்கு நூற்றாண்டு நினைவு அரங்க மண்டபம் அமைக்கவேண்டுமென சட்டமன்றத்தில் நான் வைத்த கோரிக்கையை ஏற்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் அதை அறிவித்தபோது மனம் நிறைந்து சட்டமன்றத்திலேயே வாழ்த்தி பேசியவர் அண்ணன் எம். ஆர். கே. பன்னீர் செல்வம் அவர்கள்.
வாழ்த்தி பேசியதோடு நிற்காமல் சிதம்பரம் புறவழிச் சாலையில் மையமான பகுதியில் மிகசிறந்த இடத்தை பல கோடி மதிப்புள்ள நிலத்தை அதற்காக தேடி உறுதிபடுத்தியவர் அமைச்சர் அண்ணன் எம். ஆர். கே. பி. அவர்கள்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில்
கோரோனாவால் அவர் பாதிக்கப்பட்டு தேர்தல் பணிகளை செய்ய முடியாத நிலைக்கு ஆளானார். அந்த நிலையில் கூட உயிரை பணயம் வைத்து காட்டுமன்னார்க்கோயில் சட்டமன்ற தொகுதியில் எனக்காக களத்தில் இறங்கி அவர் பணியாற்றினார். உரத்து பேச முடியாத அளவுக்கு உடல் நலம் குன்றியிருந்த நிலையில் கூட நான் குறிஞ்சிபாடியில் வெற்றி பெறுவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் காரணமாக இருந்தார்கள். எனக்காக சிந்தனை செல்வன் பணியாற்றினார். ஆகவே அவரது வெற்றிக்கு நாம் பணி செய்வது என்பது நாம் நன்றி உள்ளவர்கள் என்பதை உறுதிசெய்ய காலம் தந்த வாய்ப்பு என்று கட்சிகார்ர்களை வணிகர்களை பிறசமூக தலைவர்களை கூட்டி கூட்டி பேசினார்.
கடந்த நவம்பர் - 4, 5 ஆகிய தேதிகளில் காட்டுமன்னார்கோவிலில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது எல்லா வாக்குச்சாவடிகளிலும் திமுக நண்பர்களை காண முடிந்தது. வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான சிறப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த தருணத்தில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் மாத்திரம் 50,000 வாக்குகள் கூடுதலாக எழுச்சித்தமிழர் அண்ணன் திருமா பெற வேண்டும் என்று எங்கள் அமைச்சர் அண்ணன் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார் என்று திமுக உடன் பிறப்புகள் சொன்ன போது நன்றியில் நான் கரைந்து போனேன்.
இதைப்போல இன்னும் நூறு செய்திகளை சொல்ல முடியும். எல்லாவற்றையும் தாண்டி எனது தனிப்பட்ட வாழ்வில் அவர்செய்த உதவிகளை என் உயிருள்ளவரை மறவேன். என். எல் சி வேலையை துறந்து எண்ணற்ற வழக்குகளை சுமந்து துயரத்தின் எல்லையில் கிடந்த எனது குடும்பம் இன்று தலை நிமிர்ந்திருக்கிறது என்றால் தலைவர் திருமாவின் அன்பும் அண்ணன் எம் ஆர் கே அவர்களின் உதவியும் என் வாழ்விணை தங்கத்தின் சகிப்பும்தான்.
இப்படியெல்லாம் பொங்கும் நன்றி உணர்வை வெளிப்படுத்த அமைச்சர் என்னை ஒருபோதும் அனுமதித்ததில்லை. அனால் அதற்கான வாய்ப்பை சில உதிரிகள்…அரைவேக்காடுகள்…..அரசியல் அயோக்கியர்கள் இன்று உருவாக்கி தந்துள்ளார்கள்.
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
#விகடன் சார்பில் இன்று சென்னையில் நடைபெற்ற
'அவள் விருதுகள்: சாதனைப் பெண்களின் சங்கமம்' என்னும் விழாவில் பங்கேற்று
'உரையாடல்கள், கட்டுரைகள், புத்தகங்கள், செயல்பாடுகள்' எனச் சமூக முன்னேற்றத்துக்கு ஓய்வறியாது பங்களித்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி அவர்களுக்கு `தமிழன்னை விருது’ வழங்கினேன்.
விழாவில் விகடன் ஏற்பாட்டில் அவருக்கு மகுடம்சூட்டி வீரவாளையும் வழங்கினேன். அவர் அந்த வாளை 'கல்விக்காக சுழலட்டும் இந்த கல்வி வாள்' எனக் கூறி என்னிடம் வழங்கினார். கல்விக் குறித்து பல்வேறு கோரிக்கைகளையும் மேடையில் முன்வைத்தார்.
அக்கா வான்மதி அவர்களை நினைவுக்கூரும் விதமாக விகடன் சார்பில் ஓர் ஓவியத்தை அன்பளிப்பாக வழங்கினார்கள்.
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
'இந்தியாவின் தலித் அரசியல் வரலாற்றில் மூன்றாவது பாய்ச்சல் திருமாவளவன். ஆயினும், சித்தாந்த அளவில் அம்பேத்கருக்கு அடுத்த நிலையில் திருமாவளவனையே கூறிடத் தோன்றுகிறது. இந்தியாவின் தலித் அரசியலின் எதிர்காலத்துக்கு தமிழ்நாட்டிலிருந்து ஒளிப் பாய்ச்சுபவராக இன்று திருமாவளவன் உருவெடுத்திருக்கிறார்' எழுத்தாளர் சமஸ் அவர்களுக்கும் குமுதம் வாரஇதழுக்கும் நன்றி!
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
அறிவிப்பு ~~~~~~~~ சென்னை மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நாளை 3.11.2023 காலை 10 மணிக்கு வாய்ஸ் ஆப் காமன்ஸ் அலுவலகத்தில் நடைபெறுகிறது. வட சென்னை, மைய சென்னை, தென் சென்னை மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் 12 பேரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். முகவரி: 6, முகமது சதக் டிரஸ்ட் கட்டடம், பைகிராப்ட்ஸ் கார்டன் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை. இவண் தலைமையகம் விசிக.
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறையில் அதிகாரத்தை வெல்ல அமைப்பாய்த் திரண்ட சிறுத்தைகள்! xitter.gq/i/broadcasts/1BdGYrBPd…
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
சனாதனத்தை எதிர்த்து போராடும் படையின் முன்னனி தலைவராக திருமா திகழ்கிறார் _ துரை.ரவிக்குமார் பேச்சு
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான சாதி திட்டம் _ தொல்.திருமா குற்றச்சாட்டு
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், தோழர் திரு. தொல்.திருமாவளவன் எம்.பி பிறந்தநாளை முன்னிட்டு, 61 நாள் தொடர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில், 55வது நாளாக, இன்று (29.10.2023), சென்னை - பாலவாக்கம், விஷ்ராந்தி முதியோர் இல்லத்தில், விசிக தோழர் பெசன்ட் நகர் திரு.அந்தோணி ஏற்பாட்டில் மதிய உணவு, புடவைகள் வழங்கினேன்.
இந்நிகழ்வில், பெருநகர சென்னை மாநகராட்சி கல்விக் குழுத் தலைவர் திரு.பாலவாக்கம் விஸ்வநாதன், வட்டச் செயலாளர் திரு.ஆறுமுகம், மாமன்ற உறுப்பினர் டாக்டர்.தமிழரசி சோமு, கழக நிர்வாகிகள், முன்னணியினர் கலந்துகொண்டனர்.
@thirumaofficial
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து
@thirumaofficial | #VCK | #Thirumavalavan | #MP | #Wish | #News7Tamil | #anniversary | #10thAnniversary | #Celebration | #News | #News7TamilUpdates
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
தமிழ்நாடு அரசு 49 சிறைவாசிகளை விடுதலை செய்திட பரிந்துரைத்த கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்க தாமதிக்கும் ஆளுநரை கண்டித்தும் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் தோழர் #உஞ்சைஅரசன் அவர்களின் உடல் இன்று அவரது ஊரான உஞ்சை விடுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தோழர் உஞ்சை அரசன் அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்தினோம்!
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
வாக்குச்சாவடி முகவர்கள் செய்ய வேண்டிய வேலை.
#vck
#வெல்லும்_சனநாயகம்_மாநாடு
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
அறிவிப்பு
---------------------
கட்சியின் முதன்மை செயலாளர் தோழர் உஞ்சைஅரசன் அவர்கள் காலை 10.17 மணியளவில் தனியார் மருத்துவமனையில் காலமானார். கடந்த அக்டோபர் -02 அன்று மாரடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று வார காலமாக சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு இன்று இதயம் செயலிழந்த நிலையில் உயிரிழந்தார்.
அவரது உடல் கட்சியின் தலைமையகம் அம்பேத்கர் திடலில் நண்பகல் 12.00 மணியிலிருந்து 4.00 மணி வரையில் வைக்கப்படும். அங்கே அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்படும்.
அதன் பின்னர், பட்டுக்கோட்டை அருகேயுள்ள அவரது சொந்த ஊரான உஞ்சை விடுதிக்குக் கொண்டு செல்லப்படும். நாளை (அக்டோபர் 25 ) மாலை அங்கே அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தி அவ்வூரிலேயே நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது.
கட்சியின் கொடிகள் ஒரு வார காலத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டுமென அறிவிக்கப்படுகிறது.
-தொல்.திருமாவளவன்.
#உஞ்சைஅரசன்
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
நடிகை கவுதமி கருத்து உண்மை!
youtu.be/8NOGUY2q1Qk?si=24T2…
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
"நீ தான் என் குடும்பம்”
மறைந்த உஞ்சை அரசன் அவர்கள் திருமாவை புகழ்ந்து பேசிய கடைசி உரை
@thirumaofficial | #Thirumavalavan | #VCK | #VelichamTV
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
நெல்லை #சந்தியா படுகொலையைக் கண்டித்து கரிசல்குளத்தைச் சார்ந்த பொதுமக்கள் மற்றும் விசிக முன்னணி பொறுப்பாளர்கள் முத்துவளவன், எம்.சி.சேகர், சஜன்பராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படுகொலையான சந்தியாவின் குடும்பத்தினருக்கு ரூ.கோடி இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுகிறோம்.
@mkstalin @CMOTamilnadu



































