Vivek Gananathan (@VGananathan) header
Vivek Gananathan (@VGananathan) profile picture

தமிழக வெற்றிக் கழகம்

Joined March 2018
Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் வாழ்த்துகளுடன், இன்று (01.11.2026) ஞாயிற்றுக்கிழமை, மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான திரு.@BussyAnand MLA அவர்கள், தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் தேவைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதுடன், மக்களின் நலன் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்காகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறார். அந்த வகையில், இன்று சென்னை முல்லை நகர் மற்றும் அசோக் நகர் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வில், அப்பகுதிகளைச் சேர்ந்த 1,000 பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழங்கினார்.! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், மக்களின் நலனே முதன்மையானது என்ற நோக்கத்துடன், தொகுதி மக்களுடன் நேரடித் தொடர்பில் இருந்து, அவர்களின் தேவைகளுக்கேற்ப நலத்திட்ட உதவிகளை வழங்குவதன் மூலம், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வில் சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு.K.அப்புனு (எ) வேல்முருகன் அவர்கள், பகுதி கழகச் செயலாளர் திரு.மகி மற்றும் திரு.எழிலரசு, வட்டக் கழகச் செயலாளர் திரு.முத்தமிழ், திரு.காளி, திரு.ராஜேஷ் கண்ணா, திரு. நரேஷ், திரு.திலீப், திரு.பாலாஜி, திரு.முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் பகுதிச் செயலாளர் திரு. தர்மா, வட்டக் கழகச் செயலாளர் திரு.சரவணா, திரு.தயாநிதி, திரு.கார்த்தி, திரு.தரணி ஆகியோரும் உடன் இருந்தனர்.
2
22
73
913
Vivek Gananathan retweeted
"தவெக ஆட்சியில் பவர் சென்டர் கிடையாது" - அமைச்சர் நிர்மல்குமார் #NirmalKumar | #tvk | #DMK
75
28
17
153
13,965
Vivek Gananathan retweeted
எதற்கெடுத்தாலும் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை IUML கட்சியின் தேசியத் தலைவர் காதர் மைதீன் பேட்டி #KhaderMohideen #IUML #TamilNaduPolitics #BJP #DMK #TamilNadu #PoliticsNews #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்
36
222
21
1,365
58,743
Vivek Gananathan retweeted
"முதல்வர் தலைமையில் இயங்குகிறோம்..." - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா #cmvijay | #aadhavarjuna | #MKStalin
14
55
2
360
8,520
Vivek Gananathan retweeted
Breaking News | ஆடு வளர்ப்புத் திட்டம்: ரூ.109.75 கோடி ஒதுக்கீடு #GoatRearingScheme #WomenEmpowerment #CMVijay #BreakingNews #News18TamilNadu
3
56
3
340
7,107
Vivek Gananathan retweeted
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2026 முதல் 63 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு. #CMJosephVijay
39
487
6
1,561
55,487
Vivek Gananathan retweeted
முதலமைச்சர் விஜயுடன் பேராசிரியர் கலையரசன் சந்தித்த புகைப்படம் வெளியானது #CMVijay #ProfessorKalaiyarasan #News18Tamilnadu | News18Tamil.com
6
129
2
883
26,220
Vivek Gananathan retweeted
CM Vijay | Breaking News | CM-ஐ சந்தித்த பேராசிரியர் கலையரசன்.. வெளியான புகைப்படம்! காவல்துறை தன்னை அலைக்கழித்ததாக கூறிய |நிலையில் கலையரசனை | அழைத்துப் பேசிய முதல்வர் #cmvijay #BreakingNews #News18TamilNadu #TamilNews
1
18
169
16,357
Vivek Gananathan retweeted
Breaking News | முதல்வர் விஜயுடன் MIDS பேராசிரியர் கலையரசன் சந்திப்பு #BreakingNews #News18TamilNadu #TamilNews
6
26
6
137
66,481
3
1
5
82
12,727
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி. சாலை என்கிற வெற்றிச் சாலையில் வெற்றித் தலைவர் தலைமையில் வெற்றிக் கொள்கைத் திருவிழா என்ற பெயரில் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு (27.10.2024) நடைபெற்றது. இலட்சக்கணக்கானோர் திரண்ட இந்த மாநாடு வரலாறாகவும், தமிழக அரசியலின் வழித்தடத்தையே மாற்றியும், மக்கள் விரோத, ஊழல் சக்திகளை விரட்டி ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாகவும், தமிழ்நாட்டு மக்களை முன்னேற்றப் பாதையில் பயணிக்கவும், வெற்றித் தலைவரின் ஆளுமையை தமிழ் கூறும் நல்லுலகிற்கு பறைசாற்றிய வெற்றித் திருவிழாவாகவும் நடந்தேறியது. 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கழகக் கொடியேற்றி, ஐம்பெரும் கொள்கைத் தலைவர்களை முன்னிறுத்தி ,லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மத்தியில் பேசிய வெற்றித் தலைவர் , அன்று மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மாண்புமிகு முதலமைச்சராக இன்று நிறைவேற்றி வருகிறார், தோழமைக் கட்சிகளை அரவணைத்துச் செல்கிறார், கொள்கை எதிரி & அரசியல் எதிரிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். தமிழக மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அக்கறை காட்டி தூயசக்தியாக திகழ்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டுடன் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக, மனசாட்சியுள்ள மக்களாட்சி நடத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்களின் வெற்றிப் பயணம் என்றென்றும் தொடரும், வெற்றித் தமிழகம் நோக்கிய இலக்கு வெல்லும் !
39
1,394
16
4,615
47,735
Vivek Gananathan retweeted
இன்றைய நாள் அக்டோபர் 27 தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய அரசியல் வரலாற்றிலும் மிக முக்கியமான நாள். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் நமது வெற்றி தலைவர் அண்ணன் தலைமையில்... இரண்டு வருடங்களுக்கு முன் 2024 இதே அக்டோபர் 27 ஆம் நாளில் தான், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி. சாலை என்கிற வெற்றிச் சாலையில் தமிழக வெற்றி கழகத்தின் பிரம்மாண்டமான முதல் மாநாட்டை, வெற்றிக் கொள்கைத் திருவிழாவாக நடத்தினோம். 100 அடி உயர கொடிக்கம்பத்தில் முதல் முறையாக நமது கழகக் கொடியை, லட்சக்கணக்கான இளைஞர்களின் ஆர்ப்பரிப்புக்கு இடையே ஏற்றி வைத்தார் நமது வெற்றி தலைவர். ஒரு நடிகர் என்ன செய்து விடப் போகிறார்? அவரிடம் என்ன கொள்கை பிடிப்பு இருக்கப் போகிறது? என புற்றீசலாய் புறப்பட்ட விமர்சனங்களை எல்லாம் புயல் காற்றாய் ஊதித் தள்ளியது வி. சாலை மாநாடும், மாநாட்டில் நமது வெற்றி தலைவர் அண்ணன் அவர்களின் முதல் உரையும்.l "இது தாறுமாறாய் ஆடுகிற ஆட்டம் அல்ல... தத்துவத்துடன் ஆடுகிற ஆட்டம்" என்று நமது தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் பாதையை மிக தெளிவாக வரையறுத்து வெளியிட்டார் நமது வெற்றி தலைவர். லட்சக்கணக்கான கழகத் தோழர்களும், பொதுமக்களும் தன்னெழுச்சியாக கலந்து கொண்ட முதல் மாநாட்டில் தொடங்கிய நமது அரசியல் பயணம் வெற்றிச் சாலையில் என்றைக்கும் தொடர்ந்து பயணிக்கும்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவத்தின் வழியில் தமிழ்நாட்டுக்காக தொடர்ந்து உழைப்போம்! கொள்கை தலைவர்களின் வழிகாட்டலில், மாண்புமிகு முதலமைச்சர் தமிழக வெற்றி கழக தலைவர் அண்ணன் அவர்களுடைய தலைமையில்... ஆட்சி மாற்றத்தையும் அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்திய நமது வெற்றிப் பயணம் மக்களுக்காக என்றைக்கும் தொடரும்! @TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #TVK
36
923
7
4,776
38,048
Vivek Gananathan retweeted
"பள்ளியில் பயிலும் குழந்தைகள் பாதுகாப்பில் பணம் பார்த்த கேவலமான கும்பல்.. தி.மு.கவிற்கு பேசுவதற்கு அருகதையே கிடையாது..." குழந்தைகளுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை நாங்கள் வசூல் செய்வோம் என சான்றிதழ் வழங்க 4,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் புரோக்கரை வைத்து கோடிக்கணக்கில் பணத்தை வசூல் செய்ததால் தற்போது மாட்டிக்கொண்டுள்ளார்கள் - அன்பில் மகேஷ் மீதான வழக்கு குறித்து அமைச்சர் விளக்கம் #Chennai | #MinisterNirmalkumar | #DMK | #AnbilMaheshPoyyamozhi | #MKStalin | #PolimerNews
55
663
22
2,411
87,472
Vivek Gananathan retweeted
This is a major miss from Union Power Ministry, Article says Rajasthan is spending ₹46.09 per unit power. This has raised serious questions about national demand forecasting and resource adequacy planning by Union government. Since individual States have limited visibility of nationwide power demand and generation availability, unlike central power-sector institutions. The Union Power Ministry needs to examine why such demand–supply gaps were not anticipated and planned in advance. Atleast now Union Power Ministry should plan on national-level forecasting and better coordination with states which could help States avoid such prohibitively expensive power in future. timesofindia.indiatimes.com/…
86
509
29
1,706
108,765
26
483
5
1,349
17,268
Vivek Gananathan retweeted
1.5°C இலக்கிற்கு வாய்ப்பில்லை ஐ.நா வெளியிட்ட புதிய அறிக்கை #UN | #UNEP | #HeatWave
5
73
11,570
Vivek Gananathan retweeted
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, காவலர் நினைவுச் சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.5.96 கோடி காப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார். #CMJosephVijay‌
18
343
3
1,116
28,807
Vivek Gananathan retweeted
அரசியல் மேடைகள் தந்தை பெரியார் காலத்தில் பகுத்தறிவைக் கற்பிக்கும் பள்ளிகளாக இருந்தன; அறிஞர் அண்ணா காலத்தில் அரசியல் அறிவை வளர்க்கும் பல்கலைக்கழகங்களாக இருந்தன. ஆனால், அண்ணாவிற்குப் பிறகு தி.மு.க., அரசியல் மேடைகள் தனிநபர் தாக்குதல் மேடைகளாக மாறின; அதுவும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இயங்கும் தி.மு.க-வின் தற்போதைய மேடைகள், ஆபாசப் பேச்சுக்கள் - அசிங்கமான வார்த்தைகள் - அவதூறு கருத்துக்களை மட்டுமே பரப்பிக் கொண்டிருக்கும் அருவருப்பான மேடைகளாக மாறிவிட்டன. அதுவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தோற்று வீட்டில் முடங்கி இருக்கும் தி.மு.க., தன் ஆற்றாமையை, காழ்ப்புணர்வை தன் ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்படுத்துகிறது. அவற்றில் சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் மேடைகளை தி.மு.க-விற்கு எதிரணியில் இருக்கும் அரசியல் கட்சிகளை, அரசியல் கட்சிகளின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் ஆபாசமாகத் தாக்கும் களங்கம் சூழ்ந்த களமாகப் பயன்படுத்தி வருகிறது. அந்தவகையில், சென்னையில் நடைபெற்ற தி.மு.க மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பெண் பேச்சாளர் ஒருவர் , தமிழ்நாட்டு மக்களால் மிகப்பெரிய நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களை மிகவும் தரக்குறைவான முறையில் விமர்சனம் செய்கிறார். அதை மேடையில் இருக்கும் சென்னை மாநகர மேயர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் மேயர் பிரியா அவர்கள் கைகொட்டி சிரித்து ரசித்துக் கொண்டிருக்கிறார். தி.மு.க-வின் நாடாளுமன்ற குழுத் தலைவராகவும் தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராகவும் உள்ள திருமதி.கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்கள் தலைகுனிந்து மௌனமாக இருக்கிறார். அவர் அந்தப் பேச்சாளரைக் கண்டிக்காதது ஒருபுறம் என்றால், மறுபுறம் சொந்தக் கட்சியினர் பேசும் பேச்சுக்களை கேட்க முடியாமல் திருமதி.கனிமொழி அவர்களே தலைகுனிந்து கூனிக்குறுகும் அளவுக்குத்தான் இன்றைய தி.மு.க மேடைகளின் தராதரம் இருக்கிறது. இதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். மேலும், உடனடியாக, சட்டப்படியான முறைகளில், தி.மு.க-வின் இதுபோன்ற அநாகரீக செயல்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதையும் அழுத்தமாக வலியுறுத்துகிறேன். அப்போதுதான் ஜனநாயகமும் ஆரோக்கியமான அரசியலும் வலுப்பெறும். அதனால், தி.மு.க மேடையில் அநாகரீக முறையில் பேசிய அந்தப் பெண் பேச்சாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும். நாகரீக அரசியல், பண்பான அரசியல் என்று வெறும் வார்த்தைகளில் மட்டும் பேசிக் கொண்டிருக்கும் தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இவற்றை எல்லாம் கண்டிக்காமல் வழக்கம்போல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அல்லது "அவரே இதுபோன்ற கொச்சையான பேச்சுக்களை கேட்டு ரசித்து ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறாரா?" என்ற கேள்விக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், இதுபோன்ற அவதூறுகளால், ஆபாசப் பேச்சுக்களால் தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக உருவாகி உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி மறைத்துவிட முடியாது. ஆனால், தி.மு.க-வின் இதுபோன்ற ஆபாச நடவடிக்கைளால், அந்தக் கட்சியும் அதன் தலைமையும் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் இல்லங்களில் இருந்து முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும் என்பது உறுதி! ஒரு காலத்தில் அழகிய தமிழின் அடுக்குமொழிகளால் கட்சியை வளர்த்த தி.மு.க-வினர் இன்றைக்கு அசிங்கமான பேச்சுக்கள், ஆபாசமான வாக்கியங்கள், கொச்சையான வார்த்தைகளுக்குள் முடங்கிப்போய் கிடக்கின்றனர். அவர்களை முறைப்படுத்தி கட்சியை வளர்க்கும் வழி தெரியாமல் அந்தக் கட்சியின் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். தந்தை பெரியாரின் பகுத்தறிவு - சுயமரியாதை - சமூகநீதிக் கருத்துக்களையும் பேரறிஞர் அண்ணா அவர்கள் அரசியலுக்கு வகுத்துக் கொடுத்த கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற இலக்கணத்தையும் மறந்துவிட்ட தி.மு.க-வினர்... அவர்களுடைய இதுபோன்ற அவதூறுகளையும் ஆபாசப் பேச்சுக்களையும் கடந்துதான் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் தமிழக மக்களின் மனங்களிலும் நிரந்தர வெற்றியைப் பெற்றுள்ளார்; இனியும் பெற்றுக் கொண்டே இருக்கப்போகிறார் என்பதையாவது மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
14
957
30
2,956
51,227
Vivek Gananathan retweeted
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் புதிய திட்டங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay‌
14
674
11
2,030
67,107
Vivek Gananathan retweeted
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் புதிய திட்டங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay‌
36
799
10
2,511
55,651