Vathsala retweeted
மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உடனடி நடவடிக்கை – கோரிக்கை வைத்த சில மணி நேரங்களிலேயே மாற்றுத்திறனாளி மாணவருக்கு டேபிள் டென்னிஸ் போர்டு வழங்கப்பட்டது!
இன்று (27.11.2026) வெள்ளிக்கிழமை, மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், சென்னை R.K. Convention Centre-ல் தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழாவின் மூன்றாம் கட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து, பாராட்டு சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.
அப்போது, திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் R. அஸ்வின், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் பாராட்டு சான்றிதழை பெற்றுக்கொண்டார்.
அந்த சந்திப்பின்போது, தனக்குப் பாரா டேபிள் டென்னிஸ் (Para Table Tennis) விளையாட்டில் மிகுந்த ஆர்வம் இருப்பதாகவும், டேபிள் டென்னிஸ் விளையாடுவதற்கான போர்டு கிடைத்தால் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று சாதனை படைக்க முடியும் என்றும் தனது விருப்பத்தையும் கோரிக்கையையும் மாணவர் அஸ்வின் தெரிவித்தார்.
மாணவரின் ஆர்வத்தையும் விளையாட்டுத் திறமையையும் ஊக்குவிக்கும் வகையில், அவரது கோரிக்கையை உடனடியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றினார்.
அதன்படி, இன்று மதியம் மாணவர் கோரிக்கை வைத்த நிலையில், சில மணி நேரங்களிலேயே, மாலையில் அவருக்கு டேபிள் டென்னிஸ் போர்டு வழங்கப்பட்டது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உடனடி நடவடிக்கையால் தனது விளையாட்டு கனவு நனவானதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்த மாணவர் அஸ்வின், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டதுடன், எதிர்காலத்தில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று நிச்சயம் சாதனை படைப்பேன் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சியோடு, அவர்களது தனித்திறன்களையும் விளையாட்டு ஆர்வத்தையும் ஊக்குவித்து, அவர்களின் கனவுகளை நனவாக்குவதிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொண்டுள்ள அக்கறைக்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. இந்நிகழ்வின்போது கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் அவர்கள் உட்பட, பல்வேறு மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
Vathsala retweeted
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட இருப்பதாக செய்திகள் வரத்தொடங்கி உள்ளன. இந்த நேரத்தில், தி.மு.க. என்ன செய்யப் போகிறது?.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நாடகம் ஆடுவதுபோல எந்தத் திசைத்திருப்பலும் மடைமாற்றமும் செய்யாமல், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மனசாட்சியுடன் வெளிப்படையாக ஒரே நிலைப்பாட்டை எடுத்து அறிவிக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கையும் நல்லிணக்கத்தையும் பேணும் உறுதியான சூழல் நிலவுவது குறித்து கடந்த மூன்று நாள்களாக வாய் திறக்காமல் எந்த முட்டுச் சந்தில் நின்று திமுகவும் அதன் தலைமையும் முனகிக் கொண்டிருந்தது என்று தெரியவில்லை. இப்போது வந்து சுத்தம் சுயம்பிரகாசம்போல சுருதி கூட்டி சுயபுராணம் பாடுகிறது.
பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டும் சூழ்ச்சி அரசியல் செய்வதில் தமிழக வெற்றிக் கழகத்திற்கோ எங்கள் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கோ ஒருபோதும் உடன்பாடில்லை.
திமுக தலைமைபோல, தொகுதி மறுவரையறை விவகாரத்தில், இரட்டை நிலைப்பாட்டில் உறுதியோடு இருக்கிறோம் என்று கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல், மனசாட்சி இல்லாமல் ஆதாய அரசியல் ஆடும் மதில்மேல் பூனையோ பூனைமேல் மதிலோ இல்லை எங்கள் த.வெ.க.
அரசியலுக்காகக் கொள்கை வேடம் போடுவது ; அரசியல் ஆதாயத்திற்காக ஜால்ராவை மாற்றி அடிப்பது என அப்பட்டமான அசிங்கமான அரசியல் நிலைப்பாட்டை எடுப்பதுதான் தி.மு.க.வின் குணம். அதன் தலைமையின் குணம்.
அண்ணா உருவாக்கிய இயக்கத்தின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது தெரியுமா?. குரங்கு கையில் பூமாலை போலத்தான் இருக்கிறது என்று மக்களே சொல்கின்றனர்.
தி.மு.க.வின் கொள்கையே தில்லுமுல்லு செய்வதும் திருகுதாளம் போடுவதும்தான். இப்போதும் தி.மு.க. பற்றி மக்கள் சொல்வது இது ஒன்றே ஒன்றைத்தான்.
தி.மு.க.விற்கு மக்கள் சவால் விடுகின்றனர். நீங்கள் நிஜமாகவே கொள்கை வேடம் போடவில்லை என்றால், உண்மையாகவே கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா வருகிறபோது ஆதரிக்கவே மாட்டோம். எதிர்த்து மட்டுமே வாக்களிப்போம் என்று நிரூபிக்க வேண்டும்.
மாறாக, நடுநிலை வகிக்கிறோம், வெளிநடப்பு செய்கிறோம், நாங்கள் சொன்ன திருத்தங்கள் இருக்கின்றன என்றெல்லாம் சொல்லி சால்ஜாப்பு சொல்லி சப்பைக்கட்டுக் கட்டினால் அது பா.ஜ.க.வின் காலைக் கழுவி சரணம் பாடுவதற்குத்தான் சமம்.
தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் நலன்களில் உண்மையான அக்கறை உள்ளவர்களா? அல்லது அரசியல் ஆதாயத்திற்காக எதையும் துறந்துவிட்டு சுயநலப் பாடல் பாடும் சூழ்ச்சிக் கூட்டமா?. இந்த இரண்டில் தி.மு.க. எது என்று நிரூபித்துவிட்டு மற்றவர்கள் மீது குற்றம் குறை சொல்ல வேண்டும். அதற்கு முன்னால், வாயைத் திறந்து பேசவே தி.மு.க.விற்கும் அதன் தலைமைக்கும் வக்கோ வகையோ இல்லை.
I wait for this 🤣🤣🤣🤣🤣
பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த த.வெ.க-வின் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை, பல்வேறு தரப்பிலிருந்து ஏற்பட்ட நெருக்கடியால் புகார் கொடுத்து 119 நாட்கள் கழித்து இன்று கைது செய்திருக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு.
முதலில் இந்த சம்பவம் நடக்கவேயில்லை என்று பொய் சொன்னார்கள். பிறகு புகார் வரவில்லை என்று புளுகினார்கள். எம்.எல்.ஏ பாவம் என்று வாடகை வாய்கள் மூலம் இஷ்டத்திற்கு அடித்து விட்டார்கள்.
விஷயம் பெரிதாகி நாடே இந்த ஆட்சியை காரி துப்பிய பிறகும், கூச்சமே இல்லாமல், Victim-ற்கு எதிராக Online Abusers ஆபாச சேற்றை வாரி இறைத்தார்கள்.
இத்தனைக்கும் பிறகு, பாதிக்கப்பட்ட அதிகாரியின் மன உறுதி - எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் – நீதிமன்றத்தின் தொடர் குட்டு ஆகியவற்றால் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இத்துடன் எதுவும் முடிந்துவிடவில்லை. பாதிக்கப்பட்ட அதிகாரி அளித்த புகாரை தலைமைச் செயலாளர் மறைத்தாரா? முதலமைச்சரிடம் தெரிவித்தாரா?
உளவுத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் டம்மி முதல்வரை மட்டும் தான் உளவு பார்க்கிறார்களா?
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சங்கி அமைச்சர் ஏன் பொய் சொன்னார்?
இனியும் தூங்கிக் கொண்டிருக்காமல் இந்த டம்மி முதலமைச்சரும் - அவரின் சர்க்கஸ் அரசும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
2
90
Vathsala retweeted
சமீப காலமாக, துயில் எழுந்து காமெடியாகக் கதறி, பெண்களின் பாதுகாவலனே தான்தான்(?) என்பதுபோல ரீல் விட்டுக்கொண்டு சுற்றி வருகிறார் ரீபோஸ்ட்நிதி.
Who are you என்று பவரில் இருந்தபோது பஞ்ச் டயலாக் பேசிவிட்டு, இப்போது பஞ்சரானதும், பம்மிப் பதுங்கி, மண்ணோடு மண்ணாகத் தவழ்ந்து சென்று மனுகொடுத்து மன்றாடியும் வருகிறார். மண்டையை ஆட்டி ஆட்டிப் பேட்டிக் கொடுத்தும் பீலாவிட்டுப் பிதற்றி வருகிறார். மக்கள் அவருடைய பேட்டியை ‘நாங்கள் சினிமா செய்திகளே பார்ப்பதில்லை’ என்ற ரீதியில் சுண்டுவிரலால் டச் ஸ்க்ரீனில் தள்ளிவிட்டுத் தவிர்த்து வருகின்றனர்.
டம்மி வாரிசான டகால்ட்டிநிதியின் ‘பெண்கள் பாதுகாவலன் வேடம்’ தாறுமாறாகக் கிழியும் வகையில் திமுக எம்.எல்.ஏ. ஒருவரே செயல்பட்டு உள்ளார். அந்த எம்.எல்.ஏ. வேறு யாருமல்ல. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. திரு.வசந்தம் கார்த்திகேயனே. அதாவது, பெண்கள் முன்னிலையிலேயே ஆபாசமாகப் பேசி அலறவிடும் டம்மி டாடியின் ஆபாசக் கொள்கைப் படையில் அணிவகுப்பவர் என்று சொன்னால், அவர் யாரென்று இன்னும் ஆழமாகப் புரியும்.
தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் பெண் அதிகாரி திருமிகு. அ.லலிதா அவர்களை வசந்தம் கார்த்திகேயன் தகாத வார்த்தைகளில் மரியாதைக் குறைவாகப் பேசி இருக்கிறார்.‘தான் யார் என்று தெரியுமா?’ என்று கேட்டுத் தன் அதிகாரத் திமிரைக் காட்டி மிரட்டி இருக்கிறார். இது குறித்து, அந்தப் பெண் அதிகாரி கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமும் புகார் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது, புகாரின் அடிப்படையில், அதிகாரத் திமிரோடு பெண் அதிகாரியை மிரட்டிய தி.மு.க. எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மீது தியாகதுருக்கம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் திருமிகு.லலிதா அவர்களும் பெண் அதிகாரிதான் என்பது, பெண்களுக்காக வாதாடுவதுபோல வேடம் போடும் வக்கற்ற வாரிசான வக்கிரநிதிக்குத் தெரியும்தானே?. பெண் அதிகாரி ஒருவரை, திமுகவின் ரத்தத்தில் ஊறிப்போன பண்ணையார்த்தன அதிகாரத் திமிருடன், தகாத முறையில் பேசி மிரட்டித் துன்புறுத்தியதற்காகத் தங்கள் எம்.எல்.ஏ.வை உச்சிமேல் வைத்து மெச்சப் போகிறாரா இந்த ஒப்பாரிநிதி?.
வகையற்ற வாரிசான உதறல்நிதி இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?. துப்புக்கெட்ட வாரிசான டுமீல்நிதி இதுபற்றித் துப்பறியுமாறு எந்தத் தபால்காரரைப் பார்க்க, தன் அடிப்பொடிகள் அணிவகுக்கத் தரையில் உருண்டு போகப் போகிறார் இந்தப் புலம்பல்நிதி?.
மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் இந்த எடுபடாத வாரிசான இயலாமைநிதி, பெண் அதிகாரி ஒருவரைத் துன்புறுத்தியதற்காக தங்கள் கட்சி எம்.எல்.ஏ.வைத் தாமாக முன்வந்து அழைத்துக்கொண்டுபோய் நீதிமன்றத்தில் நிறுத்துவாரா?. இல்லையெனில், துப்பட்டாவைத் தலையில் கட்டிக்கொண்டுத் தும்மி விட்டு, அடுத்தவர் மீது அவதூறு பரப்பி, தங்கள் எம்.எல்.ஏ.வை ‘என் அன்பிற்கினிய அதிகாரத் துஷ்பிரயோகத் திலகம் வாழ்க’ என்று போற்றிப் புகழப் போகிறாரா?. அல்லது வழக்கம்போல தி.மு.க. என்றாலே வக்கிரமும் வன்மமும் நிறைந்த ஆபாசக் கூட்டம்தான் என்று எண்ணி மகிழ்ந்து, குப்புறப்படுத்துக் கொண்டு கும்பகர்ணத் தூக்கத்தை தொடரப் போகிறாரா?.
என்னதான் செய்யப் போகிறார் இந்த எடுபடாதநிதி?. வழக்கம்போல முன்பே தயார் செய்த கேள்வி-பதில் நாடகத்தை நடத்திவிட்டு, அந்நாடகத்தையும் தொடர முடியாமல் மரத்தின் பின்னால் சென்று மறைந்துகொள்ளப் போகிறாரா இந்த மழுப்பல்நிதி?.
எது எப்படி இருந்தாலும், பெண்களைத் துச்சமாக மதிப்பதுதான் திமுகவின் மரபணு என்பதை மக்கள் மனதில் இருந்து அகற்றவே இயலாது. இதை வக்கற்ற, வகையற்ற, துப்புக்கெட்ட, தூங்குமூஞ்சியான டம்மி வாரிசு டப்பாநிதி டபராசெட்நிதி உணர்ந்தால் சரி.
Vathsala retweeted
உங்கள் மகிழ்ச்சிக்காக இரண்டு குடும்பங்கள் சோகத்தில் மூழ்க வேண்டுமா?.ஆபாசநிதி”
வாணியஞ்சத்திரத்தில் உங்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகப் பேனர் அமைக்கும்போது இரண்டு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். இன்னொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த இரண்டு குடும்பங்களின் கதறல் உங்கள் காதுகளுக்குக் கேட்கவில்லையா? இரண்டு குடும்பங்களின் வீட்டில் மரண ஓலம்.
உங்கள் பிறந்தநாள் பேனருக்காக இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன. ஒரு குடும்பத்தின் எதிர்காலமே இருண்டுவிட்டது.
கொண்டாட்டத்தை விட மனித உயிர் பெரிது. இந்த மரணங்களுக்கு யார் பொறுப்பேற்பார்கள்?
Vathsala retweeted
குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில், தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆண் அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கி மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்.
Vathsala retweeted
மாணவச் செல்வங்களின் எதிர்கால நலனைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், கல்வித்துறையிலும், நூலகங்களிலும் செய்துள்ள ஊழல்கள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெளியில் வரும்.
- தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் இரண்டாம் கட்ட விழாவில் மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள்.
Vathsala retweeted
Namma Passanga Sambavam Thalaivan Kitta Reach Aagirukku!📈😂🔥
@CMOTamilnadu @TVKVijayHQ
அய்யய்யோ வந்திட்டாரே கலாய்ப்பாரே @TVKVijayHQ இத நான் எதிர் பார்க்கல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Vathsala retweeted
"ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?" என்று கேட்ட பேரறிஞர் அண்ணாவின் திமுகவை கபளீகரம் செய்து, குடும்பக் கட்சியாக மாற்றிய மண்ணாங்கட்டிப் பரம்பரை, தாங்கள் கொள்கைக் குன்றுகள் என்று மேடைக்கு மேடை முழங்குவதெல்லாம் வெறும் வாய்ச்சவடால் என்பதை இன்றைய ஆளுநர் சந்திப்பின் மூலம் நிரூபிக்கிறது.
ஆட்சியில் இருந்தவரை ஆளுநரைப் பேசவிடாமல் செய்துவிட்டோம் என்று கொக்கரித்துவிட்டு, இப்போது "ஆபத்பாந்தவனே" என்று ஆளுநரின் காலில் விழவும் தயாராகிவிட்டனர்.
"கலைஞரின் ஆசி பெற்ற சின்னம் தாமரை" என்ற வரலாறு மீண்டும் அரங்கேறப் போகிறது. அதற்கான அறிகுறிதான், சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு உதயநிதி தலைமை நிர்வாகியாக இருக்கும் முரசொலியில் பாஜகவின் மாநிலத் தலைவரின் நேர்காணல் இடம்பெற்றிருப்பது.
பாசிசப் பாயாசம் பருகக் கொத்தடிமைகள் தயாராக இருக்கையில், மண்ணாங்கட்டிப் பரம்பரைக்கு கொள்கையாவது, கொய்யாக்காயாவது என்ற மனநிலைதான் !
அன்று போலவே பாஜகவைத் தமிழ்நாட்டில் வளர்க்கும் பணியை திமுக தலைமையேற்று நடத்தவிருக்கிறது.
திமுக ஒரு தீயசக்தி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் மண்ணாங்கட்டிப் பரம்பரைக்கு வாழ்த்துகள் !










