திருக்கோயிலூர் தொகுதி கண்டாச்சிபுரத்துக்கு அருகில் உள்ள வீரசோழபுரத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் மூர்த்தி அவரது மனைவி சரண்யா ஆகியோர் தீக்காயங்களோடு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்களது மகன் பத்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
முண்டியம்பாக்கம் மருத்துவமனக்குச் சென்று அவர்களைப் பார்த்தேன். மேல் சிகிச்சைக்காக அவர்கள் இருவரையும் சென்னைக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டேன்.
Dr D.Ravikumar MP retweeted
நூலகத்தில் வரலாற்றுப் பிழைகள் மலிந்த __________________________________
நூல்கள் :
_______
விசாரணை ஆணையம் அமைத்து உண்மை கண்டறிய வேண்டும் !
___________________________________
தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!
___________________________________
கோவையில் அண்மையில் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் திறந்து வைக்கப் பெற்ற 'பெரியார் அறிவுலகம்' என்னும் நூலகத்தில் இடம் பெற்று பல நூல்கள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் அந்த நூலகத்தை நேரில் சென்று பார்வையிட்டதில் அவர் இதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகி மனம் நொந்து தனது இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சான்றுக்கு சில நூல்களைக் குறிப்பிட்டு நூல்களைக் கொள்முதல் செய்ததில் எத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். இது மிகுந்த பேரதிர்ச்சியை அளிக்கிறது.
போலி நிறுவனங்களின் பெயரால் தரமில்லாத நூல்களைக் கூடுதலான விலைக்கு கொள்முதல் செய்ததால் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது என ஊகிக்கும் அதே வேளையில்; வரலாற்றுப் பிழைகள் மலிந்த மிகவும் கீழான நூல்களை நூலகங்களில் வைத்திருப்பது புதிய -இளைய தலைமுறையினரைப் பாழாக்கும் மிகமோசமான மன்னிக்கமுடியாத பெருங்குற்றம் ஆகும். இது தீராத ஆத்திரத்தையும் பெருங்கவலையையும் அளிக்கிறது.
இதன்பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிந்து தொடர்புடையோர் யாவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை அளித்திட அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட அரசுக்கான பொதுநூலகங்களில் இடம்பெற்றுள்ள நூல்களின் உள்ளீட்டுக்கான தரம் எத்தகையது என்பதைக் கண்டறியவும்; போலி நிறுவனங்களின் மூலம் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளைக் கண்டறிந்து தொடர்புடையோரைத் தண்டிக்கவும் ஏதுவாக தமிழ்நாடு அரசு உடனடியாக 'விசாரணை ஆணையம்' ஒன்றை அமைத்திட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.
நீதிபதி குரியன் ஜோசப் ஆணையத்தைக் கலைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்!
===•
மத்திய மாநில உறவுகளை சீராய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான ‘ ஒன்றிய மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக்குழு’ கலைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. “அந்தக் குழுவுக்குச் சட்ட அதிகாரம் இல்லை, அதன் பணி சட்ட ஆணையத்தின் பணிகளையே அதுவும் செய்வதாக இருக்கிறது” என அதற்குச் சொல்லப்பட்டிருக்கும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை.
ஒன்றிய அரசிலும் சட்ட ஆணையம் உள்ளது. ஆனாலும் மத்திய- மாநில உறவுகளை ஆராயும் பணி சட்ட ஆணையத்திடம் கொடுக்கப்பட்டதில்லை. சர்க்காரியா கமிஷன், பூஞ்ச்சி கமிஷன் ஆகியவற்றிடம்தான் ஒப்படைக்கப்பட்டன.
நீதிபதி குரியன் ஜோசப் ஆணையத்தைக் கலைக்கக்கூடாது என்று எமது தலைவர் @thirumaofficial அவர்கள் அறிக்கை வாயிலாகக் கேட்டுக்கொண்டிருந்தார். அந்தக் கருத்தைச் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்திலேயே திரு @VanniTamizhVCK தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.
நீதிபதி குரியன் ஜோசப் ஆணையத்தின் அறிக்கையின் முதல் பகுதியே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஆவணமாகத் திகழ்கிறது. அதன் இறுதி அறிக்கை ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து மிக முக்கியமானப் பரிந்துரைகளை முன்வைக்கும் என்ற நம்பிக்கையை அது தந்துள்ளது. இறுதி அறிக்கை நிறைவுசெய்யப்படும் நிலையில் இருக்கும்போது இந்த அவசர முடிவு ஏன் எடுக்கப்பட்டதெனப் புரியவில்லை. சட்ட ஆணையம் அந்தப் பணிகளைத் தொடர்வது சாத்தியமில்லை.
மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள் இந்த முடிவை மறுபரிசீலனைச் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
Dr D.Ravikumar MP retweeted
West Bengal Assembly Election Was Not Legally Valid, Says Former CEC S.Y. Quraishi
 thewire.in/rights/west-benga…
கைது குறித்த உச்சநீதிமன்றத்தின் முக்கியமான தீர்ப்பு.
டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பைப்போல வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.
இந்தத் தீர்ப்பையாவது காவல்துறை அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும்👇🏿
🤖 Made with AI
மிஷேல் ஃபூக்கோ சிறப்பிதழ்
நாகார்ஜுனன் மொழிபெயர்த்த ஃப்பூக்கோவின் 3 கட்டுரைகள்; ஃபூக்கோவின் அறிவுசார் உருவாக்கம் குறித்த ரவிக்குமாரின் கட்டுரை
தனி இதழ் வேண்டுவோர் 60/- தபால் செலவு 10/- மொத்தம் 70/- ரூபாய் 9345650230 என்ற எண்ணுக்கு ஜிபே செய்து அதே எண்ணில் முகவரியை வாட்ஸப் செய்க.
Dr D.Ravikumar MP retweeted
🇺🇸White voters just completely shattered the GOP coalition
Data shows white voters shifted 13 points toward Democrats compared to 2024. The biggest shock came from the demographic Republicans counted on most.
White men aged 18 to 44 swung a massive 28 points toward Dems.
Young white voters aged 18 to 29 shifted 30 points, wiping out years of conservative gains.
The old playbook of relying on cultural grievances hit a hard wall.
Source: Washington Post / Writer: Bri
Dr D.Ravikumar MP retweeted
Individuals named as Bharatiya Janata Party (BJP)-appointed Booth Level Agents (BLAs), and listed as ‘objectors’ in at least 77% of the total 1,021 deletion applications filed so far in Delhi’s Mustafabad constituency, have largely denied any association with filing Form 7s as part of the continuing Special Intensive Revision (SIR) of electoral rolls in the city.
The Hindu contacted all 20 BLAs registered with the BJP, according to the Election Commission of India’s (ECI) records, who are named as filing the 787 Form 7s, which cite reasons such as “absent/permanently shifted”, “already enrolled” and “death” to seek the deletion of electors’ names.
✍️ @suruchiarchives
thehindu.com/news/cities/Del…
Dr D.Ravikumar MP retweeted
Remember this bank note?
10 years ago, Modi claimed junking high-value currency would end black money, corruption, terror financing
He asked Indians to make a "grand sacrifice for cleansing the country"
10 years later, @sighyush on what govt data shows about how the clean-up fared:
scroll.in/article/1096851/a-…
Dr D.Ravikumar MP retweeted
🇺🇸 US House of Representatives, seats won so far.
Democrats: 21 seats
Republicans: 12 seats
Dr D.Ravikumar MP retweeted
🇺🇸 US House of Representatives, seats won so far.
Democrats: 12 seats
Republicans: 4 seats
Dr D.Ravikumar MP retweeted
Ohio, Senate Election.
Sherrod Brown (Dem) - 63.6%
Jon Husted (Rep) - 33.4%
William Redpath (Ind) - 1.6%
13.8% reporting
Dr D.Ravikumar MP retweeted
#கேள்விக்களம் | ஆட்சியில் இருப்பவர்கள் இப்படி செய்யவே கூடாது - விசிக எம்.பி. ரவிக்குமார்
#SunNews | #VCK | #KelviKalam
Dr D.Ravikumar MP retweeted
The 2027 Census is going digital, and the geo-mapping software has been handed to a single bidder running a proprietary US-owned platform with a known backdoor that Chinese state-backed hackers exploited for over a year. Every household’s location data, on that. Stupid, foolish, or insane? IFF has analysed the procurement and filed RTIs with the Registrar General.
#Census2027 #DataSecurity #DigitalRights #IFF
Dr D.Ravikumar MP retweeted
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை
ரத்து செய்ய வேண்டும்!
______________________________
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு இலட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்வது வழக்க்மானது.
இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 8-ம் தேதி கொண்டாடப்படுவதால், நவம்பர் 6, 7, 8, 9, 10 ஆகிய நாட்களில் நெடுஞ்சாலைகளில் வழக்கத்தை விட பல மடங்கு வாகன நெரிசல் ஏற்படும். இந்த நெரிசலுக்கு முக்கிய காரணம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலைதான். ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் இது தொடர்கிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எரிபொருள் விரயமும், காற்று மாசும் அதிகரிக்கிறது.
எனவே, மக்கள் நலன் கருதி, தமிழ்நாடு அரசு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
1. தீபாவளி பயண நாட்களான நவம்பர் 6 முதல் நவம்பர் 10 வரை, சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்.
2. தீபாவளி மற்றும்பொங்கல் ஆகிய பண்டிகைகளையொட்டிக் கட்டணம் ரத்து செய்யப்படும் நாட்களில் சுங்கச்சாவடித் தடுப்புகளை முழுமையாகத் திறந்து வைத்து, தடையில்லா போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும்.
3. பண்டிகை கால நெரிசலைக் கட்டுப்படுத்த கூடுதல் காவல்துறையினரைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். ,அத்துடன், அவசர மருத்துவ உதவி மையங்களை அமைத்திடவேண்டும். மேலும், கூடுதல் ஆம்புலன்சுகளையும் நெடுஞ்சாலைகளில் ஏற்பாடு செய்யவேண்டும்.
சுங்கக் கட்டணத்தை விட, மக்களின் நேரமும், பாதுகாப்பும், நிம்மதியான பயணமுமே முக்கியம் என்கிற வகையில் தமிழ்நாடு அரசு தீபாவளி பயண நாட்களில் சுங்கக் கட்டணத்து ரத்து செய்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.




















