திருச்சி முகாமிலிருந்த ஈழத்தமிழர் தம்பி கிருஷ்ணகுமாரை இலங்கைக்கு நாடுகடத்தி இனவெறி அச்சுறுத்தலுக்கு தள்ளுவதா?
தம்பி சுபாஸ்கரனையும் நாடுகடத்த முயல்வது கொடுங்கோன்மை!
2016ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளாக திருச்சி முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர் கிருஷ்ணகுமாரை, இந்தி ஒன்றிய - தமிழ்நாடு அரசுகள் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்தியுள்ளது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும். மற்றொரு தம்பி சுபாஸ்கரனையும் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்த இந்திய ஒன்றிய அரசு முயல்வதும், அதற்கு தமிழ்நாடு அரசு துணைநிற்பதும் வன்மையான கண்டனத்துக்குரியது.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
தொழிலாளர் துறையால் வெளியிடப்பட்ட உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள கடைகளின் பெயர்ப்பலகைகள் மாற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி, ஒவ்வொரு சில்லறை விற்பனை நிலையம் மற்றும் நிறுவனத்தின் பெயர்ப்பலகையிலும், பிற மொழிகளுடன் சேர்த்து தமிழும் கட்டாயமாக இடம்பெற வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றம் மாண்புமிகு நீதியரசர் கே. சுரேந்தர்
இந்த நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வணிக நிறுவனங்களிடம் நாம் தமிழர் சார்பாக கோரிக்கை!
வீரமிகு நமது பாட்டனார்கள் மருது சகோதரர்கள் திருநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் அமைந்துள்ள நினைவிடத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர்வணக்கம் செலுத்தினார்…
வீரமிகு நமது பாட்டனார்கள் மருது சகோதரர்கள் திருநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் அமைந்துள்ள நினைவிடத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர்வணக்கம் செலுத்தினார்.
#ntk
#seeman
#sivagangai
சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு மலர் வணக்கம் செலுத்திய அண்ணன் செந்தமிழன் சீமான்.
#ntk
#seeman
#seemanspeech
#sivagangai
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை ஏற்படுத்தும் விதமாக கொட்டப்பட்டுள்ள நெகிழி மற்றும் திடக்கழிவுகளை அகற்றுவதற்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் அனுமதி பெற்று, இன்று ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2026 செவ்வாய்க்கிழமையன்று தொடங்கப்படவிருக்கும் தூர்வாரும் பணிகளை, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் காலை 11:30 மணியளவில் நேரில் பார்வையிட்டு தூர்வாரும் பணிகளை தொடங்கிவைத்தார்…
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை ஏற்படுத்தும் விதமாக கொட்டப்பட்டுள்ள நெகிழி மற்றும் திடக்கழிவுகளை அகற்றுவதற்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் அனுமதி பெற்று, இன்று ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2026 செவ்வாய்க்கிழமையன்று தொடங்கப்படவிருக்கும் தூர்வாரும் பணிகளை, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் காலை 11:30 மணியளவில் நேரில் பார்வையிட்டு தூர்வாரும் பணிகளை தொடங்கிவைத்தார்.
#ntk
#seeman
#NTK_RestoringRivers
"தீய சக்தி (திமுக), ஊழல் சக்தி (அதிமுக) இரண்டையும் சேர்த்த மிகக் கொடிய சக்தி தவெக."
#ntk
#dmkfails
#admkfails
#tvkfails
தீய சக்தி (திமுக),
ஊழல் சக்தி (அதிமுக)
இரண்டையும் சேர்த்த மிகக் கொடிய சக்தி தவெக."
-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
வைகை ஆறு இன்னைக்கு மதுரை பெருநகரத்தின் கழிவுநீர் ஓடுற காவாயா இருக்கு. திருப்பூர் பகுதியில் நொய்யல் ஆறையும் சாயக் கழிவுகளைக் கொட்டி கொன்னுட்டான். பாலாறு, காவிரி எல்லாத்துலயும் மணல் அள்ளி ஆறு மரணிச்சு போயிருச்சு. மணல் அள்ளித் தின்னுட்டான், மலையைக் குவாரின்னு வெட்டி வித்துட்டான்... பூமியை அழிக்க அணுகுண்டு தேவையில்லை, பிளாஸ்டிக்கே போதுமானது.
பிளாஸ்டிக் மட்கி மண்ணோடு மண்ணாக 5,000 ஆண்டு, 50,000 ஆண்டு, 5 லட்சம் ஆண்டு ஆகும்னு ஆளுக்கு ஒன்னு சொல்றாங்க. எதையும் நாம பார்க்கப்போறதில்ல. ஆனா எங்க பார்த்தாலும் பாலித்தின் குப்பையாகி நாடே குப்பை மேடா ஆயிருச்சு.
- செந்தமிழன் சீமான்
இந்தியா போன்ற வளரும் நாடுகள் 100 கோடி மக்களுக்குச் கைபேசி (செல்போன்), தொலைக்காட்சி (டிவி) கொடுக்கத் திட்டமிட்டிருக்கின்றன; ஆனால், மக்களுக்குத் தூய்மையான நீரையும், சத்தான உணவையும் கொடுக்க எந்தத் திட்டமும் இல்லை.
உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்ததால்தான் அரிசியின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க இந்த அரசிடம் சேமிப்புக் கிடங்குகள் இல்லை; பல கோடி ரூபாய் மதிப்பில் தார்ப்பாய்களை வாங்கி நெலை மூடி வைக்கும் நிலையே நீடிக்கிறது
- செந்தமிழன் சீமான்
இந்திய உயர்நீதிமன்றமே கேக்குது... இந்தியாவின் நிலப்பரப்பை விட இரண்டு மடங்கு நெகிழிப் (பிளாஸ்டிக்) குப்பைகள் கடலுக்குள் கிடக்குதுன்னு சொல்றாங்க. ராமேஸ்வரத்துல ஒரு தங்கச்சி கடலுக்குள்ள டைவ் அடிச்சிட்டு வந்து சொல்றா, உள்ள வெறும் பிளாஸ்டிக்கா கிடக்குதுன்னு. மீனவர்கள் வலையை இழுக்கக் கஷ்டப்பட்டு, நிறைய மீன் வந்துருச்சுன்னு கரைக்கு இழுத்து பார்த்தா அம்புட்டும் பிளாஸ்டிக் பாட்டிலும் குப்பையும்தான் இருக்கு.
- செந்தமிழன் சீமான்
ஆவின் எங்கே இருக்கு உங்களுக்கு? ஆவினைத்தான் ஒழிச்சிட்டீங்களே! அதிலிருந்து வந்த வருவாய் நின்று போச்சு. கர்நாடகாவிலிருந்து நந்தினி, ஆந்திராவிலிருந்து திருமலை, குஜராத்திலிருந்து அமுல்... அங்கிருந்து பாலை எடுத்துக்கிட்டு ஆவினை மூடியாச்சு. வருவாய் வர்ற எல்லாத்தையும் மூடிட்டு வெறும் வாயை வச்சுக்கிட்டு அங்கேயும் இங்கேயும் வாங்கிட்டு வந்து...
60 ஆண்டுகளா பேரறிஞர் அண்ணா, கலைஞர், அம்மா ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோர் ஆட்சிக்காலம்... ஊர்பூரா மின்சாரம் போய் சேரல, மின் விளக்கு வரல, மின் கம்பங்கள் ஊன்றப்படல. உற்பத்தியில முதலீடு செஞ்சீங்களா? வாங்கறதுல முதலீடு செய்யறதுல காட்டுற ஆர்வத்தை ஏன் உற்பத்தியில காட்டல? உற்பத்தியில முதலீடு செஞ்சிருந்தா நிலையான தீர்வை எட்டியிருக்கலாம்.
- செந்தமிழன் சீமான்
"நமது ஆறு, நதியைக் மீட்போம், நாட்டைப் காப்போம்" என்ற முழக்கத்துடன் நதிகளைத் தூய்மைப்படுத்துவோம்!
- செந்தமிழன் சீமான்




















