Pinned Tweet
மடியில் சுமந்து மன்றாடி வேண்டிக்கொள்ளும் அம்மாவையும் தோளில் சுமந்து என் துயரங்களை போக்கிய அப்பாவையும் விடவா வேறு தெய்வங்கள் இருந்து விட போகிறது இவ்வாழ்க்கையில்....!
#கூலு
என்னுடைய முதல் கவிதை தொகுப்பு வெளியாகியுள்ளது
புத்தகம் பெற தொடர்பு கொள்ளவும் ❤️
#கூலு
#tamilbook
"சாப்பிட்டதில் சுவையான உணவு யாதெனில் அத்தனை தூக்கத்திலும் அப்பா ஊட்டி விட்ட ரெண்டு பொரட்டா எச்சில் சொட்ட திண்ற போதுள்ள சுவை தான்"
"இனிமையான நினைவுகள் யாதெனில் தெரியாமல் சட்டையை கறையாக்கிய நீல மையை காணும் போது ஒரு நிமிடம் வந்து சென்ற பள்ளி பருவ நினைவு தான்"
'பிழைத்திருக்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் முதலாவது கடனில்லா ஒரு நாள் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பது தான்'
என் பதிவுகளில் பெரிதும் எல்லோராலும் விரும்பப்பட்ட பத்து பதிவுகளை காண்பிக்க முடியுமா @grok
1
2
518
என் மீதான உன் பெருங்கோபத்தின் வெளிப்பாடு மௌனம் என்றறிவேன்
பெருங்கோபத்திற்கு மத்தியிலும் அவ்வப்போது ஒரே ஒரு மிஸ் யூ என்ற குறுஞ்செய்தியை அனுப்பி விடுகிறாள்
நான் அனுப்பிய ஸ்மைலி எமோஜிகளில் மீண்டும் துளிர்கிறது ஒரு காதல்....!
#கூலு
இப்போதெல்லாம் நிதானமாய் தான் நகர்கிறேன்
அவர்களுக்கென இவர்களுக்கென
ஓடி ஓடி அயர்ந்து சரிந்து விட்டேன்
யாரும் இப்போதெல்லாம் எனதருகில் நகர்வதில்லை
எனக்காய் நகர்கிறேன் எனக்காய் சிரிக்கிறேன்
எனக்காய் அழுகிறேன்
எனக்காய் எனக்காய் மட்டும்....!
#கூலு
முகம் சுழித்துக் கொண்டு
நடந்தே தான்
வந்தேன் என்கிறாய்.....
வருத்தம் கொள்கிறது
என் மனது
இவ்வளவு நேரம்
சுமந்து கொண்டிருந்தது
நான் தானே என்று...!
#கூலு
வெகுநேரம் காத்திருங்கள் தவறில்லை...
உங்களுக்காக நீங்கள் வந்தவுடன் யோசனை வேண்டாம் நகருங்கள் போதுமானது.....!
#கூலு
எப்போதாவது என்னை நேசிப்பதுண்டா....
சில சமயங்கள் என்னை நான் வெறுப்பதுண்டு.....!
#கூலு
பிரியலாம் தானே என்று நேற்று என்னிடம் நீ கூறினாய்
பிற கெதற்கு பார்க்கும் போது கண்களில் கண்ணீரை வைத்துக்கொண்டிருக்கிறாய்..!
#கூலு
நீயும் நானும் போதுமெனக்கு
வேதங்களும் சாஸ்திரங்களும்
சடங்குகளும் சம்பிரதாயங்களும் எனக்கெதற்கு.....!
#கூலு



