தேடப்படுவீர்கள்,
தொலைக்கப்படுவீர்கள்,
இல்லையேல்
நிராகரிக்கப்படுவீர்கள்.
அன்பிற்கான விதிகள் என்றும் மாறாதவை.....!!!
-கார்த்தி சின்னசாமி
ஐய்யாயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்கி வெடிச்சிட்டு...அடுத்த நாள் காற்று மாசுபாடு பற்றி கவலைப்படுபவர்கள்
கருள் என்றால் இருட்டு,
கருப்பு என்று பொருள்.கருள் தான் மாறிமாறிக் கிருள் ஆகிக் கிருஷ் ஆகி, கிருஷ்ணர் ஆயிற்று.நாமும் கரு என்பதை கருப்பன் என்றும் அதிலிருந்து கண்ணன் என்றும் சொல்கிறோம்.
எனவே கண்ணன்,கிருஷ்ணன் என்றாலும் வேர்ச்சொல் கருப்பன் தான். கருள் என்பது வேர்ச்சொல்
-பாவாணர்
உறக்கமா சோகமா
என்று
கணிக்க முடியாத
பள்ளிக்குழந்தைகளின் முகங்களை
ஏந்திச் செல்லும்
பேருந்துகள்
வரத் துவங்கும் முன்பு
நாம் நடையை முடித்துக்கொள்ள வேண்டும்.
-போகன்
மதிமுகவினர் எந்த நிகழ்வுக்கும் பேனர்கள் வைக்கக்கூடாது
-வை.கோ
~யாருமே வைக்காதப்ப வைக்கக்கூடாதுனு அருமையா சொன்னீங்க
“Ignorance more frequently begets confidence than does knowledge,” -Darwin
அறிந்திருப்பவர்களைவிட அறியாதவர்களிடமே தாங்கள் எல்லாம் அறிந்தவர்கள் என்ற தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும்.”
— சார்லஸ் டார்வின்
மேகம் மழையாய் இறங்கியபோது, நனைந்து சிலிர்த்த பூமி சொன்னது "பெருமை மேலே ஏறுவதில் இல்லை கீழே இறங்குவதில் இருக்கிறது"
-அப்துல்ரகுமான் பிறந்ததினம்
சில விடைபெறுதல்கள் வார்த்தைகளின்றி முற்றுப்பெற்ற கவிதைகளாகின்றன...
பேசுவதற்கு இனி எதுவுமில்லை என்பதை உணர்ந்துகொள்ளும்போது மனம் மெல்ல விலகத் தொடங்குகிறது.
ஒருகாலத்தில் பகிர்ந்துகொள்ள ஆயிரம் கதைகள் இருந்த இடத்தில், சொல்ல ஒன்றுமில்லாத அமைதி நிரந்தரமாகிவிடுகிறது.
1
485
குளிரும்போது முற்றிலுமாக குளிரில் இரு;
வெப்பமாக இருக்கும் சமயம் முழுமையாக வெப்பத்தில் ஊடாகிச் செல்.
மாற்றமுடியாதவைகள் எல்லாம்,என்னென்னவாக இருக்கின்றனவோ அவற்றுடன் நாம் முழுமையாக ஒன்றிவிட்டால் நாம் அவற்றின் அடிமையாகாமல் எஜமானன் ஆகிவிடுவோம்
-டோஜான்









