Voice of EPS retweeted
தாராபுரம் மட்டுமல்ல மதுராந்தகத்திலும் தவெக கட்சியின் தலைவர் @actorvijay அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது..
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள்.
#வெல்லட்டும்_இரட்டைஇலை
Voice of EPS retweeted
நன்றி விசுவாசம் என்றால் என்னவென்றே தெரியாத தலைவர்தான் தவெக தலைவர் @actorvijay அவர்கள்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள்.
#வெல்லட்டும்_இரட்டைஇலை
Voice of EPS retweeted
முதலமைச்சரின் சினிமா கவர்ச்சியின் காலாவதி தேதி முடிந்துவிட்டது என்பதை உணர்ந்த தவெக தரப்பு, இப்போது பணபலம் மற்றும் குறுக்குவழி அரசியலை கையில் எடுக்கத் தொடங்கியுள்ளது!
குறுக்கு வழியில் மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க நினைக்கும் இந்தச் சீரழிவுக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
Voice of EPS retweeted
தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் நடிப்புக்கு முன் விஜய் தோற்றுவிட்டார்!
- தாராபுரத்தில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள்.
#வெல்லட்டும்_இரட்டைஇலை
#AIADMK
Voice of EPS retweeted
சர்க்கார் ஆடியோ லாஞ்சில் பேசியதை சட்டப்பேரவையிலும் பின்பற்றுகிறார் போல நம்ம ப்ரோ!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
Voice of EPS retweeted
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்ததாக தவெக ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
குற்றச் செயல்கள் நடைபெறுவதில் இருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை.
ஆனால், கடந்த 1 மாதமாக நடப்பதை எல்லாம் பார்த்தால், தமிழக மக்களை, குறிப்பாக பெண்களை, இன்றைய ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகளிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும் போல!
அந்த அளவிற்கு சொந்த கட்சி நிர்வாகிகள் பல குற்றங்களை, குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை ஒரு முதல்வராகவோ, கட்சித் தலைவராகவோ இன்றைய பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் என்ன செய்தார்?
9-5 Desk Job போல முதல்வர் பணியை பார்க்கும் இன்றைய முதலமைச்சர், அந்த 9-5 நேரத்திலாவது சட்டம் ஒழுங்கைக் காப்பது குறித்து எதாவது பணியை செய்தாரா?
இதில், இன்றைய முதல்வர் உள்துறையை வேறு ஒரு அமைச்சரிடம் கொடுத்துவிடும் முடிவில் இருப்பதாக சில செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன.
இளம்பெண் பாலியல் வழக்கில் கைதாகியுள்ள தவெக நிர்வாகி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
Voice of EPS retweeted
மாற்றம் வந்துவிட்டது - அமைச்சர் @imrajmohan
That மாற்றம்:
எதிர்கட்சிகள் பேசினால் நிறுத்தப்படும் நேரலை மொத்தமாக நிறுத்தப்பட்டது.
சபாஷ் அமைச்சரே… சபாஷ்!
#TNAssembly
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
Voice of EPS retweeted
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#மக்களுக்காக_அஇஅதிமுக
#களத்தில்_அஇஅதிமுக
Voice of EPS retweeted
புதிய ஆட்சி அமைந்த நாளில் இருந்து ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் என்பவர் பல பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆளுங்கட்சி தவெக நிர்வாகியால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதேபோல், சென்னை ஆலந்தூரில் தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும், இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் செய்திகள் வருகின்றன.
இன்றைய முதலமைச்சர் பதவி ஏற்கும் போது சொன்ன “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இது தானா?
தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் போது, எப்படி நல்லா இருக்க முடியும்?
உங்கள் ஆட்சியில் குற்றம் செய்யும் உங்கள் கட்சியினர் மட்டும் தான் நன்றாக இருப்பது போல் தெரிகிறது.
தன் கட்சித் தலைவர் முதலமைச்சராக இருப்பது பற்றியோ, அவர் கையில் இருக்கும் காவல்துறை மீதோ இவர்களுக்கு எந்த பயமும் வராமல் இருப்பது ஏன்?
மேற்கூறிய வழக்குகளில் எந்த வித ஒளிவு மறைவோ, அரசியல் குறுக்கீடோ இல்லாமல் நியாயமான விசாரணை நடைபெற்று, குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்றை பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
Voice of EPS retweeted
மூன்று தொலைக்காட்சி சேனல்களை அரசு கேபிளில் இருட்டடிப்பு செய்த காரணத்தை வெளிப்படையாக விளக்கவும் முடியாமல், நியாயப்படுத்தவும் முடியாமல் @TVKVijayHQ அரசு படாதபாடுபடுகிறது!
#ArasuCable #MediaFreedom #FreedomOfPress #TVKGovernment
@AIADMKOfficial @CMOTamilnadu
@polimernews @TamilJanamNews @NewsTamilTV24x7 @Arasu_Cable_Tv
செய்தியாளர்களின் மைக்கைக் கண்டாலே எதோ கொரோனா வைரஸை பார்த்தது போல ஓட்டம் பிடிக்கும் ஆச்சரியக்குறி அமைச்சர்கள்….
#KarurRun, #VillupuramRun என்று ஓட்டம் பிடிப்பதில் தங்கள் தலைவர் வழியையே பின்பற்றுகிறார்களோ என்னவோ..?!!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
வழக்கு பதிய முடியாது…
விசாரணை நடத்த அதிகாரம் கிடையாது…
ஆனால் பெயர் “சிங்கப்பெண் அதிரடிப் படை”!
எந்த அதிகாரமும் இல்லாமல் எப்படி இந்த அதிரடிப் படையால் செயல்பட முடியும்?
ரோந்து போலீசாருக்கு Uniform மட்டும் மாற்றிவிட்டு, Amma Patrol மீது ஸ்டிக்கர் ஒட்டியது தானே இந்த திட்டம்?
What bro… How will this force function bro @actorvijay ?
பெண்கள் பாதுகாப்பை மற்றுமொரு PR Stunt-ஆக மட்டுமே பார்க்கிறதா இன்றைய #பொய்க்கால்_குதிரை_அரசு ?
அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்பு, கையில் வைத்த மை காய்வதற்கு முன்பாகவே கழகத்திற்குத் துரோகம் இழைத்துவிட்டுச் சென்றவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
மக்கள் துரோகிகளுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
ஆச்சரிய குறிகளிலேயே இவர் கொஞ்சம் ஸ்பெஷல் குறி
😂😂😂
#ஆச்சரியகுறி_பரிதாபங்கள்
Voice of EPS retweeted
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஸ்ரீவைகுண்டம் தவெக MLA சரவணன் ஆதரவில் ,இந்த கொடூரத்தை ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் அரங்கேற்றியுள்ளதாக தெரிகிறது.
மேலும், இதனை மறைக்க, தவெக MLA சரவணனே அந்த பெண்ணிடம் “அமைச்சரிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக” சமரசம் பேசியதாக செய்திகள் வருகிறது.
சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா?
அதுவும், ஒரு ஆளுங்கட்சி MLA இப்படி கேடுகெட்டத்தனமான செயலுக்கு சமரசம் பேசுவதை இன்றைய முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா?
உங்களை திரையில் ரசித்து வளர்ந்த பெண்ணுக்கு, உங்கள் ஆட்சியில்,
உங்கள் கட்சியினரால் நடைபெற்றுள்ள இந்த கொடுமைக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளதை உணர்கிறீர்களா?
“அமைச்சருக்கு தெரியும்; மேலிடத்திற்கு தெரியும்” என்றெல்லாம் தெனாவட்டு பேச்சுகள் வருகிறது என்றால், அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா? அல்லது, முதல்வரைத் தாண்டிய ஏதேனும் Powercenter-ஆ?
சிங்கப்பெண் அதிரடிப் படை துவக்க விழாவில் Single Take-ல் பேசிய வசனங்களை எல்லாம் உங்கள் கட்சியினரைப் பார்த்து பேசுங்கள் @CMOTamilNadu!
பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி சமரசம் பேசி மறைக்க முயன்ற உங்கள் கட்சி MLA-வை பதவி ராஜினாமா செய்ய வைத்து கைது செய்ய இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இருக்கிறதா?
மேலும், வேறொரு பெண்ணுக்கும் இக்கொடுமை நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதனால், இந்த வழக்கை எந்த அரசியல் இடையூருக்கும் இடமின்றி விசாரித்து, குற்றம் இழைத்தவர்கள் மீதும், குற்றத்திற்கு துணை போனோர் அனைவர் மீதும், அது யாராக இருந்தாலும் சரி, எந்த MLA-வாக, அமைச்சராக இருந்தாலும் சரி, கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
Voice of EPS retweeted
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று திறக்கப்படும் மேட்டூர் அணை நீர், இவ்வாண்டு இன்றைய தினம் திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் ஆளாக்கியுள்ளது.
குறுவை சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர்த் திறப்பை பெரிதும் நம்பி இருப்பதால், இந்த நீர் வெளியீடு என்பது மிகவும் முக்கியமானது.
ஏற்கனவே விவசாயப் பயிர்க் கடன் என்ற பெயரில் 10,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்டு இருக்கும் கடன் தொகைகளை சொன்னபடி தள்ளுபடி செய்யாமல், கடுகளவுக் கடனை மட்டும் அடைப்பதாக கூறி விவசாயிகளை ஏமாற்றி, அவர்களை போராட்டக் களத்திற்கு தள்ளிவிட்டுள்ள இன்றைய பொய்க்கால் குதிரை அரசு, தற்போது நீர்த் திறப்பு செய்யாமல், ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
மும்முனை மின்சாரம் ஏற்கனவே விவசாயிகளுக்கு 24 மணி நேரம் அஇஅதிமுக அரசின் அறிவிப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது. அதை தற்போது 18 மணி நேரமாக குறைத்து அறிவித்துள்ளது இன்றைய பொய்க்கால் குதிரை அரசு.
ஏற்கனவே அறிவிக்கப்படாத மின்வெட்டால் மாநிலம் முழுக்க மின்சாரம் இல்லாததால் பம்பு செட்டுகள் இயக்க முடியாத நிலை வேறு உள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் வலிகளை, வேதனைகளை கொஞ்சம் கூட புரியாமல் இன்றைய பொய்க்கால் குதிரை அரசு ஒரு வெற்று ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விவசாயிகள் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்ட விஷயமான இதன் தீவிரத்தை உணர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து கடைமடை வரை சென்றடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறோம்.
@AIADMKOfficial
விசிலடிச்சு தமிழகத்திற்கு சங்கு ஊதிட்டீங்களே
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
விரைவில் கூடுகிறது சட்டமன்றம்
குஜிலிமஸ்க்கு தயாரா @actorvijay
😂😂😂😂
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்









