Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://xitter.cf/t.co/VQVqPrZ8KD

Tamilnadu, India
Joined February 2018
கழக செய்திகள், ஆளுங்கட்சிக்கு எதிரான பதிலடிகள், Fact Check மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற ‘கழகத் தகவல் தொழில்நுட்ப அணி'யின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்! இணையத்தில் அனைவரும் இணைந்து களமாடுவோம்! Follow @DMKITwing WA Channel: whatsapp.com/channel/0029Va4… #DMK
37
128
218
72,855
DMK IT WING retweeted
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..! கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாடா இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா? 'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர். கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்? முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை. தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும். கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
118
1,413
57
2,726
86,328
சென்னை தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பட்ட அணி மாவட்ட துணை அமைப்பாளர் Dr.S. Navin Kumar அவர்கள் லடாக்கிற்கு பைக்கில் பயணம் செய்து கழகக் கொடி ஏந்தி பாராகிளைடிங் செய்தார்
8
101
4
391
7,892
DMK IT WING retweeted
வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பும் ஆட்சியாக த.வெ.க. ஆட்சி இருக்கிறது!
302
1,054
51
2,440
64,098
செஞ்சியில் காணாமல் போன ஏழு வயதுச் சிறுமியை 14 நாட்களாகியும் கண்டுபிடிக்கவில்லை. வேளாங்கண்ணிக்குச் சென்ற இரண்டு சிறுமிகளை விடுதியில் அடைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி நெஞ்சைப் பதறவைக்கிறது. சாத்தான்குளத்தில் இரு சிறுமிகள் கடத்தப்பட்ட நிலையில், ஒரு சிறுவன் அரிவாளால் வெட்டுப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கோவையில் சாதிய வன்கொடுமையால் 11-ஆம் வகுப்பு மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டார் . மறுபுறம், கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்றுவந்த நான்கு வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார். இப்படி எல்லா வழிகளிலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்?
57
381
7
694
15,896
தவெக ஆட்சியில் இன்றைக்கு பாலியல் வன்கொடுமையா? போதைப்பொருள் நடமாட்டமா? என்ற போட்டி தான் நடைபெற்று கொண்டிருக்கிறது கழக தலைவர் திரு @mkstalin அவர்கள்
14
158
2
317
4,804
தினமும் பத்திரிக்கை எடுத்தாலும் சரி, தொலைக்காட்சி பார்த்தாலும் சரி, சோசியல் மீடியாக்களை பார்த்தாலும் சரி, கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் என்ற செய்திகள் இல்லாத செய்திகள் இன்றைக்கு நாட்டில் இல்லை. ​இப்பொழுது எல்லாம் குழந்தைகளுக்கு எதிரான செய்தி தொடர்ந்து ஓயாத நாட்களாக வந்து கொண்டிருக்கிறது. கழக தலைவர் திரு @mkstalin அவர்கள்
9
130
3
209
3,967
மக்கள் பாதுகாப்பை முற்றிலுமாகப் பலிகடா ஆக்கிய த.வெ.க அரசு! ​சாத்தான்குளம் படுகொலை, சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை, தொடரும் கொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களால் தமிழ்நாடே அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ளதை வேடிக்கை பார்க்கும் திறனற்ற அரசு இது! ​#LawAndOrderFail #TVKVijayFails #DummyCM #TVKCrimes
2
94
136
3,290
இலவச அரிசியைப் பாலிஷ் போட்டு விற்று பச்சை மோசடி செய்யும் தவெக. கம்பத்தில் பாலிஷ் அரிசியைக் கொடுத்ததால் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வை மக்கள் முற்றுகையிட்டதும், அவர் ஒட்டம் பிடித்ததும் தான் இந்த அரசின் மாற்றமா? மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
14
191
1
351
5,769
இந்த கோமாளி அரசு சன்ன ரகப் பொன்னி அரிசியை கொள்முதல் எப்போது டெண்டர் விட்டது? டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை? எதிர்க்கட்சி தலைவர் திரு. @Udhaystalin அவர்கள் #TVKFailsTN
9
129
1
258
4,584
DMK IT WING retweeted
மக்களுக்கான கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு 30 ரூபாய்க்கு விற்று கொள்ளை அடிப்பது தான் Dummy CM சொன்ன மாற்றமா? அரிசி விலையேற்றத்துக்கான தீர்வாக, கூட்டுறவு அங்காடிகளில் சன்னரகப் பொன்னி அரிசியை ரூ.30-க்கு வாங்கலாம் என்று இந்த அரசு அறிவித்தது. அதை நம்பி ரேஷன் கடைகளுக்குப் போனால், வழக்கமாக வழங்கப்படும் கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு, சன்னரகப் பொன்னி அரிசி என்று விற்கப்படுவதாக தமிழ்நாடெங்கும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பல இடங்களில் அரிசியை திருப்பிக்கொடுத்தும் வருகின்றனர். கம்பத்தில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்பட்டதால், த.வெ.க எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பிய போது, கரூர் பாணியில் ஓட்டெமெடுத்து இருக்கிறார் அந்த MLA. தமிழ்நாட்டில் 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கும் போது, வெறும் 250 இடங்களில் - அதுவும் குடும்பத்துக்கு தலா 5 கிலோ மட்டும் என, சன்ன ரகப் பொன்னி என்ற பெயரில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. 2007-ல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்த போது, அன்றைய முதல்வராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தை அறிவித்து, வெளிப்படையான முறையில் டெண்டர் விட்டு, பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, உள்ளிட்ட பொருட்களை மானிய விலையில் மக்களுக்கு வழங்கினார்கள். ஆனால், இந்த கோமாளி அரசு, சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு எப்போது டெண்டர் விட்டது? டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை? என்ன விலைக்கு அவர்கள் அரசுக்கு பொன்னி அரிசியை வழங்கினார்கள்? த.வெ.க அரசு பொதுமக்களுக்கு எவ்வளவு மானிய விலையில் அரிசியை வழங்குகிறது? இது குறித்து பாலிஷ் எதுவும் போடாமல் வெளிப்படைத்தன்மையுடன் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும்.
211
1,564
40
3,277
134,131
மெத் பூபாலன், பவுடர் சரத், குட்கா விஜயபாஸ்கர் இவங்களை வச்சுக்கிட்டு எப்படி பாஸ், வெட்கமே இல்லாம போதை ஒழிப்பு மாரத்தான்லாம் ஓடுனீங்க? #TVKFailsTN
8
380
2
906
11,407
DMK IT WING retweeted
விஜய் புகுந்த இடம் விளங்காது 😄
3
127
1
251
4,075
4000+ திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு. பள்ளிகள் கல்லூரிகள், மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்கள் போன்ற அறம் சார்ந்த பணிகளை திராவிட மாடல் ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை மிகச் சிறப்பாக மேற்கொண்டது. கோயில் சார்ந்த அரிய ஆவணங்களைப் பாதுகாத்து வைத்தது. திருக்கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத மாற்றுப் பொன்களைத் தங்கக் கட்டிகள் ஆக்கி வங்கிகளில் முதலீடு செய்து வருவாயைப் பெருக்கியது. வெறும் வாயை மட்டுமே அசைக்கும் தவெக ஆட்சியில் அறநிலையத்துறை சீரழிந்து கிடக்கிறது. சரியான திட்டமிடலும் பராமரிப்பும் இல்லாததால் அலுவலகத்திற்குள் மழை தண்ணீர் புகுந்து அரிய ஆவணங்களையும் விலைமதிப்பில்லா பொருட்களையும் சேதப்படுத்தி உள்ளது. பழி போட்டே ஆட்சியை நடத்தி விடலாம் என்று முறுக்கு புகழ் அமைச்சர் நினைக்கிறார். ஒரே நேரத்தில் பக்தர்களையும் கடவுளையும் ஏமாற்ற நினைக்கும் தவெக அரசின் அறநிலையத்துறை நாடகங்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகின்றன.
1
184
1
349
8,661
விஜய் மாமா என வசனம் பேசியவர் ஆட்சியில், தமிழ்நாட்டில் ஒரே மாதத்தில் 4 குழந்தைகள் மாயம் #ProtectWomenFromTVK
7
256
4
347
6,511
பெண்கள் பாதுகாப்பு எங்கே? ஊடக சுதந்திரம் எங்கே? செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதி, சிறு நாகலூர் கிராமத்தில் உள்ள கிணற்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! சென்னை அமைந்தகரையை சேர்ந்த பெண் சுமார் 100 கி.மீ. தள்ளி செங்கல்பட்டு மாவட்டம், சிறுநாகலூர் கிராமத்திற்கு கடத்தி வந்து கொல்லப்பட்டாரா அல்லது கொலை செய்து உடலை கொண்டு வந்து போட்டார்களா என்று தெரியவில்லை இந்த கொடூர சம்பவத்தைப் பற்றி செய்தி வெளியிடக்கூடாது என ஊடகங்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் உண்மையா? பெண்களின் பாதுகாப்பு குறித்து மேடைகளில் மட்டும்தான் டம்மி CM பேசுவாரா? பெண்கள் உயிரிழக்கும்போது மௌனம் காப்பதுதான் தவெக அரசின் தூய ஆட்சியா? #ProtectWomenFromTVK
5
328
11
495
11,532
தமிழ்நாட்டுப் பெண்களை த.வெ.க பாலியல் குற்றங்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்! #ProtectWomenFromTVK
23
467
13
665
13,896
DMK IT WING retweeted
கேக் கொள்முதல் செய்வதில் அரசுக்கு ₹25,18,845 இழப்பு.? டெண்டர் நடைமுறை படி L1 மற்றும் L1 விலைக்கு சப்ளை செய்ய ஒப்புக் கொள்ளும் பிற நிறுவனங்களுக்கு மட்டுமே Word Order பிரித்து கொடுக்கப்படும். கேக் கொள்முதலில் L1 Dream Bake Pvt Ltd மற்றும் L1 விலைக்கே கேக் சப்ளை செய்ய Elite Natural Pvt Ltd ஒப்புக் கொண்டது. இந்த இரு நிறுவனங்களுக்கு மொத்தம் 43,94,320 கேக் சப்ளை செய்ய Work Order கொடுக்கப்பட்டுள்ளது L1 விலையை விட கூடுதல் விலை Quote செய்த L2 Britannia Industries Ltd மற்றும் L3 ITC Ltd நிறுவனத்தில் இருந்து மொத்தம் 18,52,092 கேக் சப்ளை செய்ய Work Order கொடுத்து இருப்பதால் அரசுக்கு ₹25,18,845 கூடுதல் செலவு ஏற்படுகிறது இது இழப்பா? இல்லை திமுக ஆட்சியில் டெண்டர் செட்டிங் என்று சொல்வது போன்ற ஊழலா? என்று கண்டுபிடிச்சு சொல்லுங்க @Arappor @JayaramArappor @ArchitectSam76 Source Work Order shorturl.at/6hF0z
அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கேக்குகள் தொடர்பாக, ஒரு கேக் விலை ₹10 என்ற கணக்கில் 62.46 லட்சம் கேக் ₹ 6.25 கோடி செலவிடப்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது. உண்மையில் என்ன ? டெண்டர் நான்கு நிறுவனங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு இருக்கிறது. Company name : Britannia Industries limited Per Unit's Gram : 45 Per Gram value : 0.27 Per unit GST value : 0.61 Without GST : 12.15 rs With GST : 12.76 rs Company name : ITC limited Per Unit's Gram : 43.2 Per Gram value : 0.28 Per unit GST value : 0.61 Without GST : 12.10 rs With GST : 12.70 rs Company name : Elite Natural Pvt Ltd Per Unit's Gram : 45 Per Gram value : 0.24 Per unit GST value : 0.54 Without GST : 10.80 rs With GST : 11.34 rs Company name : Dream Bake Pvt Ltd Per Unit's Gram : 45 Per Gram value : 0.24 Per unit GST value : 0.54 Without GST : 10.80 rs With GST : 11.34 rs இங்கே கவனிக்க வேண்டியது, நான்கு நிறுவனங்களுக்கும் ஒரே விலை நிர்ணயிக்கப்படவில்லை என்பதுதான். நிறுவனத்துக்கு நிறுவனம் கேக்கின் எடை மற்றும் விலை மாறுபடுகிறது. யாரும் தவறான தகவலை பரப்பவேண்டாம் !!
14
146
4
209
8,500
திருடர்கள் ஜாக்கிரதை ❌ தவெகவினர் ஜாக்கிரதை ✅ என்று கூறும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது தமிழ்நாடு. #TVKFailsTN
152
270
23
642
41,641
மின்சார கொள்முதலில் ரூ.1,500 கோடிக்கு மேல் பெருமளவில் ஊழல் முறைகேடுகள் நடைபெறுவதாக நான் கூறியதற்கு மின்துறை அமைச்சர் பதிலாக, @CTR_Nirmalkumar நான் சோலார் பவர் கம்பேனி நடத்துவதாகவும் அதன் அனுமதிக்கு பல பேர் மூலம் அவரிடம் முயற்சி செய்ததாகவும் சொல்கிறார். அதனை அவர் நிரூபித்தால் அடுத்த நிமிடமே நான் அரசியலை விட்டு விலக தயார்! நிரூபிக்க தவறினால் அமைச்சர் பதவியை விட்டு விலக தயாரா? கேட்டு சொல்லுங்கள் CM sir ? @CMOTamilnadu வழக்கமாக குளிர்காலத்தில் (Winter Season) TNEB மின் கொள்முதல் செய்வதில்லை. #TNEB-க்கு நீண்ட கால ஒப்பந்தங்கள் மூலம் யூனிட் 1-க்கு ரூ.4.91 மற்றும் ரூ.5.50 விலையில் கிடைக்க வேண்டிய 2,800 MW மின்சாரத்தில் வெறும் 2,100 MW மட்டுமே வாங்கப்படுகிறது. அதானியிடம் இருந்து வர வேண்டிய 1,116 MW-ல் 550 MW வாங்க வேண்டிய குறைந்த விலை மின்சாரம் வாங்குவதை தவிர்த்துவிட்டு, யூனிட் 1க்கு ரூ.35-க்கு தனியாரிடம் மின்சாரம் வாங்கத் துடிப்பதின் நோக்கம் என்ன ? இது உங்களுக்கு தெரியுமா CM sir ? அவசர மின்தேவை ஏற்பட்டால் "DAM"- (Daily Ahead Market) சந்தை மூலம் அதிகபட்சமாக யூனிட் 1-க்கு ரூ.12-க்குள் மின்சாரம் வாங்க முடியும். ஆனால், திட்டமிட்டு செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கி, தனியாருக்கு ஆதரவாக யூனிட் 1-க்கு ரூ.35 வரை கொடுத்து மின் கொள்முதல் செய்வதற்கு டெண்டர் விடப்படுவது உங்கள் அனுமதியோடு தான் நடைபெறுகிறதா CM sir ? உடன்குடி மற்றும் வடசென்னை அனல் மின் நிலையங்களில் சுமார் 3,900 MW வரை உற்பத்தி செய்யும் கட்டமைப்பு இருந்தும், வேண்டுமென்றே வெறும் 1,500 MW முதல் 1,800 MW மட்டுமே உற்பத்தி செய்துவிட்டு மகாராஷ்டிரா ரத்னகிரியில் இருந்து மின் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்வதின் மர்மம் என்ன CM sir ? தமிழ்நாடு மின்வாரிய சொத்துகளின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் கோடி என்றும் சந்தை மதிப்பு ரூ.50 லட்சம் கோடியாகக் இருக்கும் #TNEB சொத்தை அதானிக்கு விற்பதற்காக குளிர்காலத்திலும் அதிகமான மின் கொள்முதல் செய்து கடன் அளவை பல லட்சம் கோடி ரூபாய் செயற்கையாக உருவாக்கி, Book value-வில் மின் வாரியத்தின் மொத்த சொத்துக்களும் ஓரிரு லட்சம் கோடி ரூபாய்தான் என்று குறைத்து கணக்கிட்டு தமிழர்களின் உழைப்பால் வந்த மின்வாரிய சொத்தை அதானிக்கு அடிமாட்டு விலைக்கு விற்க துடிக்கும் மின்துறை அமைச்சரை வன்மையாக கண்டிப்பதோடு ! மின் வாரியத்தை அதானிக்கு விற்க மாட்டேன் என்று உத்திரவாதம் தர முடியுமா #CMsir ? @mkstalin @CTR_Nirmalkumar @TVKVijayHQ @TVKHQITWingOffl @actorvijay @Udhaystalin @arivalayam @DMKITwing
19
270
2
573
15,833