SEEMANISM (@Seemanism) header
SEEMANISM (@Seemanism) profile picture

நாம் தமிழர் கட்சி 🐯 தமிழ் தேசியம் 🔥 Here you can see real SeeMANism. 💛❤️ Belongs To Tamilian Stock. 💪

Chennai, India
Joined June 2018
SEEMANISM retweeted
"மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலை என்றால்.." - சீமான் #Thoothukudi | #Seeman | #NTK | #PuthiyaThalaimurai
2
77
234
5,526
SEEMANISM retweeted
"உன் மதம் சிறந்தது வழிபடு; என் மதமும் சிறந்தது வழிவிடு" - சீமான் #Seeman | #ThiruparankundramDeepam | #NTK | #PuthiyaThalaimurai
24
215
22
1,232
61,376
SEEMANISM retweeted
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும்
35
923
19
2,574
42,718
வெல்லும் வரை வந்த மாவீரர் நாள் பதிவுகள் இந்தாண்டு வரவில்லை ! விஜய் ஒரு சுயநல அரசியல்வாதி என்பதற்கு இதுவும் ஒரு சான்று !
139
826
17
2,556
78,486
SEEMANISM retweeted
அம்பாசமுத்திரத்தில் மாவீரர்களை போற்றிய தமிழர் சமுத்திரம்...
17
398
9
1,104
8,914
SEEMANISM retweeted
தமிழீழத் தேசியக் கொடியை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ஏற்றினார். #மாவீரர்நாள்_2026
9
182
6
594
9,483
SEEMANISM retweeted
நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பாசறை வழங்கும் ஏலே மக்கா அம்பாசமுத்திரம் எழுச்சிப் பாடல் பாடல் தயாரிப்பு மற்றும் இயக்கம்: பா.கார்த்திகேயன் பாடியவர்: கந்தசாமி இசை: சங்கர் அருகன்குளம் நாயனம்: கலைமாமணி நாகு தவில்: ஆகாஷ் பாண்டியன் youtu.be/Ou200J1o2TE?si=cpTB…
106
1
220
2,503
SEEMANISM retweeted
மாவீர தெய்வங்களுக்கு வீர வணக்கம்!!!
100
202
2,572
விதையாய் விழுந்த வீரமறவர்களின் கதையே எமது வரலாறு ! #மாவீரர்நாள்2026
23
210
2
769
10,017
ராமர் ராமர்தான்யா !
241
1,198
26
4,749
120,367
SEEMANISM retweeted
தேசமே பிரபாகரன் ! அன்னைக்கு பிள்ளைகளின் பிறந்தநாள் வாழ்த்துகள்! #தேசியத்_தலைவர்72
2
308
12
630
6,845
நினைவில் நிறைந்த தாயகக் கனவு! நீதிக்காகத் தொடரும் தமிழினத்தின் பயணம்! மாவீரர் நாள் – 27.11.2026 உலகப் பெருநிலமெங்கும் பரந்து வாழ்கின்ற என்னுயிர்த் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்! இன்று மாவீரர் நாள்! தாய் மண்ணைக் காக்க தன்னுயிர் தந்த குல சாமிகளைப் போற்றுகின்ற புனித நாள். மண்ணின் விடுதலைக்காக வீர சமர் புரிந்து விண்ணில் ஏறிய வீரர்களின் நினைவு நாள். காரிருள் சூழ்ந்த போதும், கடும் புகை மூண்ட போதும், மரணம் விழிகளுக்கு முன்னால் நிழலாடிய போதும் ஒருபோதும் அசராமல் களமாடி நின்ற மாவீரர்களின் மகத்தான நாள். இந்த கார்த்திகை மாதத்தில் காந்தள் மலர் சூட்டி மக்களைக் காக்க மண்ணை மீட்க இன்முகத்துடன் இன்னுயிர் ஈந்த நம் உடன் பிறந்தாரை உள்ளம் முழுக்க நிறைந்த வலியோடு கண்ணீர் திரை மறைக்க நெகிழ்வுடன் நினைவு கூர்கிறோம். யார் மாவீரர்கள்..? நம்மைப் போல ரத்தமும் சதையும் கொண்டு கனவுகளும் ஆசைகளும் நிறைந்து வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் பிறந்து மண்ணின் விடுதலை என்று வந்தபோது துளியும் தயங்காமல் உயிரை தந்த பெருமக்கள். தன்னிகரற்ற தலைவனின் விழி அசைந்த திசையில் பகை முடிக்க வெடித்து சிதறி உடலெங்கும் வெந்தணல் பூசிக் கொண்ட உத்தமர்கள். இந்த பூமிப் பந்தில் இறுதித் தமிழன் இருக்கும் வரை கால நதியின் ஓட்டத்தில் சளைக்காமல் தழைத்தோங்கும் தமிழின் இறுதி மூச்சு உள்ளவரை ‌மாவீரர்களின் வீரமும் புகழும் உச்சரிக்கப்பட்டு கொண்டே இருக்கும். மனித குல வரலாற்றில் எத்தனையோ இனங்கள் தோன்றியிருக்கின்றன. காலத்தின் ஓட்டத்தில் காணாமல் போயிருக்கின்றன. ஆனாலும் சில தேசிய இனங்கள் மட்டும் இது நாள் வரை உயிர்ப்புடன் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அதன் தனித்துவமான செம்மொழி. அப்படிப்பட்ட செம்மொழி தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டு ஒரு தேசிய இனமாக மலர்ந்து உலகத்திற்கு நாகரீகம் பண்பாடு கலை இலக்கியம் வீரம் அறம் கொடை அறிவியல் என பல பங்களிப்புகளை செய்த தமிழர் என்ற தேசிய இனத்திற்கு இறையாண்மை மிக்க நிலமோ அரசோ இல்லை என்பது தான் இத்தனை ஆண்டு காலம் வரலாறு செய்த வஞ்சகம். தமிழன் வாழாத நாடில்லை ஆனால் அவனுக்கென்று உள்ளங்கை அளவிற்கு நாடில்லை என்பது காலம் காலமாய் தமிழர் மீது எழுதப்பட்ட அநீதி. இந்தக் களங்கத்திலிருந்து மீண்டு வர வேண்டும், அடிமைத்தளையில் இருந்து அன்னைத் தமிழினம் விடுதலை அடைய வேண்டும் என்கின்ற புனித லட்சியத்திற்காக தலையே விலை ஆனாலும் தந்து விட்டுப் பார்ப்போமே என்று களத்தில் புகுந்தான் கரிகாலன் என்ற எங்கள் தலைவர் பிரபாகரன். அவர் வழியில் லட்சக்கணக்கான இளைஞர்களும் இளம் பெண்களும் ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக காலாட் படையாக, கடற்படையாக, வான் படையாக முப்படையாக தொடங்கி ஆறுபடையாக விரிந்து விண்ணையும் வீரத்தால் முத்தமிட்ட வரலாறு இந்த மண் காணாத மகத்துவம். அப்படிப்பட்ட தலைவனையும் வீரம் செறிந்த ஒரு தலைமுறையையும் நினைவு கூறுகின்ற இந்த கார்த்திகை மாதம் பிறக்கின்றபோதெல்லாம் உலகத் தமிழர்களின் உள்ளங்களில் சொல்லிவிட முடியாத பெருந்துயரும், காலத்தால் கரைத்துவிட முடியாத நினைவுகளும் சூழ்ந்துகொள்கின்றன. கடல் கடந்து வாழ்ந்தாலும், கண்டங்கள் கடந்து வாழ்ந்தாலும், தலைமுறைகள் கடந்து வாழ்ந்தாலும் தாய்மண்ணின் நினைவுகளைத் தங்கள் நெஞ்சங்களில் சுமந்து வாழ்கிற தமிழர்களுக்கு இந்த நாள் வெறும் நாட்காட்டியின் ஒரு நாள் அல்ல; நம் இனத்தின் வரலாற்றையும், துயரத்தையும், தாயகக் கனவையும் நினைவுகூர்கின்ற உணர்வுப்பூர்வமான நாள். பிழைப்புக்காக குடியேறிய சிங்களன் நமது வரலாறு மறைத்து தாய்மண் பறித்து மொழியை மறைத்து அதிகாரத்தைக் கொண்டு மக்களை அழித்த காட்சியினை உலகம் மரத்துப் போன மனதோடு வேடிக்கை பார்த்தது. எல்லோராலும் கைவிடப்பட்ட ஒரு தேசிய இனமாக தமிழர் என்ற தேசிய இனம் தலை குனிந்து நிற்கும் போது முப்பாட்டன் முருகன் தூக்கிய வீரத்தோடு, கடல் கடந்து சோழன் ஆண்ட தீரத்தோடு, தன் சொந்த மக்களையே படையாகக் கட்டி நிமிர்ந்து நின்றார் நம் தலைவர் பிரபாகரன். அவர் கனவு கண்ட நாட்டை உலக வல்லாதிக்கங்கள் ஒன்று சேர சூழ்ந்து வேட்டையாடி அழித்து தடை செய்யப்பட்ட ஆயுதங்களை கொத்து குண்டுகளை வீசி இனப்படுகொலையை சிங்கள வல்லாதிக்கம் கருணை இல்லாமல் செய்தபோது, எட்டு கோடி தமிழர்கள் வாக்கு செலுத்தி வரி செலுத்தி வாழவைத்த இந்திய பெருந்தேசமும் துணை நின்றது தான் கொடுமையிலும் கொடுமை. தாயகத்தை இழந்த இனமாக ஈழத் தமிழினம் உலகம் முழுக்க அலைந்து ஓடி திரிகையில் உடன் பிறந்தார் என்ற முறையில் நம்மால் உதவ முடியாமல் அதிகாரம் அற்ற அடிமை இனமாக திரைப்பட மோகத்திலும் மது மயக்கத்திலும் தாயகத் தமிழகத்தில் வீழ்ந்து கிடப்பது இனப்படுகொலைக்கு நிகரான பேரழிவு. காலம் எத்தனையோ காயங்களை ஆற்றிவிடலாம். ஆனால், ஒரு தேசிய இனத்தின் நெஞ்சில் பதிந்துவிட்ட தாயக இழப்பின் வலியை எந்தக் காலத்தாலும் ஆற்றிவிட முடியாது. பெற்ற பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயின் கண்ணீரையும், தந்தையைத் தேடி வளர்ந்த பிள்ளையின் ஏக்கத்தையும், உடன்பிறந்த உறவுகளை இழந்து தவிக்கின்றவர்களின் துயரத்தையும் எந்தச் சொற்களாலும் முழுமையாக விவரித்துவிட முடியாது. தமிழீழ மண்ணில் போர் முடிவுற்றுப் பதினேழு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், எம் மக்களின் துயரம் முடிவுக்கு வந்துவிட்டதா? பறிக்கப்பட்ட நிலங்கள் முழுமையாகத் திரும்பக் கிடைத்துவிட்டதா? காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் குறித்த உண்மை வெளிப்பட்டுவிட்டதா? போர்க்காலக் கொடுமைகளுக்கான நீதி கிடைத்துவிட்டதா? தமிழர்கள் தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கின்ற உரிமையைப் பெற்றுவிட்டார்களா? இல்லையே ..! போர் முடியட்டும் ! தீர்வுகளை நாங்கள் தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்த உலகத் தலைவர்கள் இன்று தங்களது மௌனத்தால் இனப்படுகொலையை அங்கீகரிக்கின்ற அட்டூழியம் இவ்வுலகில் தானே நடக்கிறது..?? போர்ச்சூழலில் காணாமல் அடிக்கப்பட்டவர்களும் வெள்ளை வேனில் வைத்து கடத்தப்பட்டவர்களும் எங்கே எங்கே என இதுவரை எங்களது தாய்மார்களும் சகோதரிகளும் கதறும் கதறல்கள் இதுநாள் வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழர்களின் தாயக நிலத்தில் சிங்கள குடியேற்றங்களும் பண்பாடு கலாச்சார ஊடுருவல்களும் நிகழ்ந்து தமிழீழ மண்ணின் தனித்துவம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இருந்து மீளுவதற்கு தமிழர்கள் இதுவரை கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடுகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். மாறிவருகின்ற உலக அரசியல் சூழலில் நமது சிந்தனைகளும் செயல்திட்டங்களும் காலத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டிய தேவையிருக்கிறது. கடந்தகால வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு, நிகழ்கால அரசியல் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, எதிர்காலத் தலைமுறைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உருவாக்கிட வேண்டும். உலகத்தின் ஒழுங்கு மாறிவிட்டது. அரசியல் போக்குகள் அதன் திசைவழிகள் முற்றிலுமாக திசை திரும்பி இருக்கின்றன. உலகம் முழுக்க சர்வாதிகாரங்களுக்கு எதிரான சத்திய குரல்கள் எழும்பத் தொடங்கி இருக்கின்றன. இலங்கையிலேயே வெகுமக்கள் புரட்சி நடந்து மனித கொடுங்கோலன் ராஜபக்சே குடும்பம் கூட்டமாக விரட்டியடிக்கப்பட்ட காட்சிகளை நாம் பார்த்தோம். இந்த சூழ்நிலையை தமிழர் தேசிய இனம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் குறித்த உண்மைகள் முழுமையாக வெளிக்கொண்டுவர போராட்ட ஆயத்தங்களுக்கு முன் வர வேண்டும். மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருப்பது வெறும் மனித எலும்புக்கூடுகள் அல்ல; விடை தெரியாத ஆயிரக்கணக்கான கேள்விகள்! நீதி மறுக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வியல் சாட்சியங்கள்! அவற்றை முறையாக ஆராய்ந்து உண்மைகளை வெளிக்கொண்டுவரவும், போர்க்கால மனித உரிமை மீறல்களுக்கும் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கும் பன்னாட்டு நீதிப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யவும் உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் மன்றமும் முன்வர தமிழர் தங்கள் ஓர்மையை, தமிழ்த் தேசிய அரசியலின் வலிமையை உறுதிப்படுத்த வேண்டும். தமிழீழத் தாயகம் என்பது தமிழர்களுக்கு வெறும் நிலப்பரப்பு அல்ல. அது எம் முன்னோர்களின் வாழ்விடம்; எம் மொழியின் வேர்கள் பதிந்திருக்கும் மண்; எம் பண்பாட்டின் தொடர்ச்சி; எம் எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வுரிமையோடு பின்னிப்பிணைந்த நிலம். ஈழத்தமிழர்களின் பூர்வீக நிலங்கள் பாதுகாக்கப்படுவதற்கும், இராணுவமயமாக்கல் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதற்கும், பண்பாட்டு அடையாளங்கள் சிதைக்கப்படாமல் இருப்பதற்கும், தமிழர்கள் சமத்துவத்தோடும் கண்ணியத்தோடும் வாழ்வதற்குமான அரசியல் சூழல் உருவாக்கப்பட வேண்டும். தாயகத் தமிழகத்திலும் ஏற்பட்டிருக்கிற இந்த அரசியல் பேரிடரில் இருந்து மீண்டெழுவதற்கான பாய்ச்சலில் தமிழ்த் தேசிய இளையோர் அணியமாகி வருகின்றனர். தளராத நம்பிக்கையோடு ஓயாத அலைகளாய் சத்திய தலைவனின் பிள்ளைகள் மீண்டு வருவார்கள். தமிழீழ சோசலிச குடியரசு மலர்வதற்கான ஏதுவான அரசியல் மாற்றங்கள் தெற்காசிய பிராந்தியத்தில் நிகழ வேண்டுமானால் இந்திய பேரரசின் வெளியுறவு கொள்கைகள் மாற வேண்டும். அதற்கு தமிழகத்தில் இருந்து தமிழ்த் தேசிய அரசு ஒன்று உருவாகி அழுத்தங்களை தர வேண்டும். அதற்கான காலத்தை உருவாக்கத்தான் தளராமல் களத்திலே தமிழின இளையோர் நாம் தமிழர் என அணிவகுத்து நிற்கிறோம். உலகெங்கும் பரவி வாழ்கின்ற தமிழர்களிடம் அறிவாற்றல் இருக்கிறது; பொருளாதார வலிமை இருக்கிறது; தொழில்நுட்பத் திறன் இருக்கிறது; பன்னாட்டு அரசியல் தளங்களில் செயலாற்றக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, அறவழியிலும் சனநாயக வழியிலும் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காகச் செயலாற்ற வேண்டிய காலமிது. தனித்தனி அமைப்புகளாகப் பிரிந்து நிற்பதும், தன்முனைப்புகளுக்கு முதன்மையளிப்பதும், ஒருவரையொருவர் குறைகூறிக் கொள்வதும் நம் இனத்தின் அரசியல் வலிமையைச் சிதைத்துவிடும். எட்டு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்ற இந்திய ஒன்றியத்திற்கும் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பிருக்கிறது. இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பும், அவர்களது அரசியல் எதிர்காலமும் உரிய முதன்மையைப் பெற வேண்டும். ஈழத்தமிழர்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்க ஏதுவாக, பன்னாட்டுக் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை உலக அரங்கில் தொடர்ந்து முன்வைக்க வேண்டும். அதற்கான ஆதரவை உலக நாடுகளிடமும் பன்னாட்டு அமைப்புகளிடமும் சனநாயக வழியில் திரட்டிட வேண்டும். தாயகத் தமிழகமும், ஈழத்தமிழர்களும், புலம்பெயர்ந்து வாழ்கின்ற உலகத் தமிழர்களும் அறிவாலும், அன்பாலும், ஒற்றுமையாலும் இணைந்து நிற்க வேண்டிய வரலாற்றுத் தேவையை இந்த நாள் நமக்கு உணர்த்துகிறது. மாவீரர்கள் எந்தக் கனவிற்காக தங்கள் உள்ளங்கையில் தாய் மண்ணைப் பிடித்துக் கொண்டு தன்னுயிரை தந்தார்களோ அந்தக் கனவை நிறைவேற்ற தமிழராய் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளே உறுதியேற்று நிமிருவோம். நமது உள்ளத்து உறுதியிலும், நம் ஒவ்வொரு அசைவிலும் மாவீரர் தெய்வங்கள் நமக்கு வழிகாட்டடும் ! தாயகக் கனவினில் சாவினை தழுவிய மாவீரர்களுக்கு... வீர வணக்கம்! வீர வணக்கம்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
25
333
10
691
17,966
SEEMANISM retweeted
"என் புருஷனை விட விஜய் தான் பிடிக்கும்னு சொல்றாங்க.. எல்லா பெண்களும் எதுக்கு இப்படி சொல்றீங்க..? இவர்களை சொல்லி குற்றம் இல்லை.. இவர்களோடு ஒருத்தன் வாழுறான் பாரு அவனை தான் தேடணும் - சீமான் பேச்சு நடிகர் ஷாருக்கானையும் சுட்டிக்காட்டி சீமான் சொன்ன கருத்து #Nellai | #NTK | #Seeman | #CMVijay | #ActorShahRukhKhan | #PolimerNews
85
359
20
1,103
69,737
இன்று, நவம்பர் 24, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் மணிமுத்தாறு நீர்வழிப் பாதையைச் சீரமைப்பதற்கான திட்டமிடல் பணிகளின் ஒரு பகுதியாக, சமூகச் செயற்பாட்டாளர் நிமல் ராகவன், நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மாநிலச் செயலாளர் வெண்ணிலா தாயுமானவன், மற்றும் நாம் தமிழர் கட்சி ராமநாதபுரம் பொறுப்பாளர்கள்: வெண்குளம் ராசு மாநில ஒருங்கிணைப்பாளர்; லெனின் பிரபு சுற்றுச்சூழல் பாசறை; இராஜசேகரன் மாவட்டத் தலைவர்; ஜெயச்சந்திரன் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்; சாக்சன் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்; ஜீவா சுற்றுச்சூழல் பாசறை; சரவணன் ராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர்; செல்வராசு வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்; அஜய் மாநில ஒருங்கிணைப்பாளர் மாணவர் பாசறை; நத்தார் சித்திக் மாவட்டச் செயலாளர்; மற்றும் பொறுப்பாளர்கள் காளிமுத்தன் வெங்கடேஷ் பிரவீன் ஆனந்த் விஜயகுமார் ஆகியோர் இணைந்து ஆற்றின் நிலையை நேரில் ஆய்வு செய்தனர். ஆக்கிரமிப்பு அகற்றம், கழிவு மேலாண்மை மற்றும் நீர் ஓட்டத்தைச் சீரமைத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து திட்டமிடும் வகையில் இந்த ஆய்வு அமைந்தது. Thank you thambi @being_nimal for your solid guidance and support. Let’s take this further. ❤️❤️❤️
2
77
2
261
2,555
SEEMANISM retweeted
144
206
12
780
36,933
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த இனமான தமிழர் எனும் தேசிய இனத்தின், உயிராகவும், உணர்வாகவும், அறிவாகவும், ஆற்றலாகவும், முகமாகவும், முகவரியாகவும் திகழும் நம் தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 72ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளை உலகெங்கும் பரந்து வாழும் எனது உயிருக்கினிய தாய்த்தமிழ்ச் சொந்தங்களோடு பேரன்பும் பெருமிதமும் பொங்கப் பகிர்ந்துகொள்கிறேன். மனித இனத்தின் நாகரீகம் என்பது நதிக்கரைகளில் தோன்றியது என்பார்கள். ஆனால் மனித இனத்தின் வளர்ச்சி சில தனி மனிதர்களின் உள்ள ஊக்கத்திலிருந்துதான் பிறந்திருக்கிறது. அந்த தனி மனிதர்கள் தான் உலகத்தை இயக்கும் உந்து சக்திகளாக திகழ்ந்து உலகத்தை தன்னம்பிக்கையால் சுழல வைத்திருக்கிறார்கள். இந்த பூமி பந்தில் ஆதிக்கங்களும் அடிமைத்தனமும் எப்போதெல்லாம் அதிகாரத்தின் பேரில் உருவாகிறதோ அப்போதெல்லாம் வரலாற்றின் கதாநாயகர்கள் தோன்றி பூமியின் சமநிலையை காப்பாற்றி இருக்கிறார்கள். தமிழரின் நீண்ட நெடிய வரலாற்றில் எத்தனையோ வீர பெருமக்கள் தோன்றி மண்ணைக் காக்க மொழியை மீட்க தங்கள் வாழ்க்கையே அர்ப்பணித்து நின்று இருக்கிறார்கள். அப்படி தோன்றிய பெருமக்களில் உயரிய இடத்தில் மங்கா புகழோடு ஒளி வீசி நம் இதயங்களில் நிறைந்து வாழ்பவர் தான் என் உயிர் அண்ணன்‌ தமிழ் தேசியத்தின் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள். உலகத்தில் அனைவராலும் கைவிடப்பட்ட தேசிய இனமான தமிழர் என்ற இனத்திற்கு‌ இறுதியாக கிடைத்த ஒற்றை நம்பிக்கை நம் தேசிய தலைவர் அவர்கள். புராணங்களிலும் இதிகாசங்களிலும் காப்பியங்களிலும் வரலாற்றின் தொடர்ச்சியான பாதைகளிலும் வஞ்சிக்கப்பட்ட இனமான தமிழ் இனத்திற்கு வாராது வந்த மாமணிப்போல் வந்துதித்து அடிமை இருளை விரட்ட செங்கதிர் சூரியன் போல் சுடர் விட்டு ஒளிந்தவர் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள். நூலகங்களிலும் வரலாற்றின் காப்பகங்களிலும் உறைந்திருக்கின்ற இறந்த காலத்தின் ரத்தம் தோய்ந்த ஏடுகளில் மட்டுமே காணப்படும் சாகச வீரர்கள் உரு கொண்டு நிஜ வாழ்வில் எழுந்து வந்தது போல் அன்னை தமிழினத்தின் அடிமை விலங்கொடிக்க ஆயிரமாயிரம் மாவீரர்கள் எழுந்து வந்தார்கள். அவர்களுக்கெல்லாம் உள்ள சக்தியாய், உயிர் ஒளியாய் , தெளிவூட்டும் அறிவாய், வழிநடத்திய ஆற்றலாய், திகழ்ந்தவர் நம் உயிர் தலைவர். மானுட வரலாறு தோன்றிய காலத்தில் இருந்து ஆயிரமாயிரம் கவிஞர்களும் ஏடெடுத்து எழுதிய எழுத்தாளர்களும் கனவு கண்ட ஒரு லட்சிய நாடு ஒரு தனி மனிதனால் சமகாலத்தில் உருவாகி தழைத்து நின்றது. தனித் தமிழீழ சோசலிச குடியரசு என்கின்ற அந்தப் பெரும் கனவு நாட்டை ‌ பார்த்துப் பார்த்து செதுக்கி இப்படியும் ஒரு நாடு உலகத்தில் உண்டா என்று எல்லோரும் வியக்கும் வகையில் உருவாக்கி எழுப்பிக் காட்டியவர் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள். தாய் மண் விடுதலைக்காக சொந்த மக்களையே ராணுவமாக கட்டி அறுபடை வீடு கொண்ட முருகன் இனத்தில் பிறந்த மக்கள் ஆறு படை கட்டி நிமிர்ந்த வரலாறு. நள்ளிரவு நேரத்தில் கூட இளம் பெண் ஒருவர் கழுத்து நிறைய நகைகளோடு பாதுகாப்பாக சென்று வீடு திரும்புகிற காந்தி கனவு கண்ட தேசம். அறம் சார்ந்த வாழ்வியல். பனை மரம் சார்ந்த பொருளாதாரம், திரும்பிய திசையெல்லாம் வளம் செழிக்கும் அறிவார்ந்த திட்டங்கள், வெற்றி ஒன்றே இலக்கு என்று துவக்கு ஏந்தி பாய்ந்த புலிகள் என கனவு நாட்டை கட்டி எழுப்பினார் நம் தலைவர். அகதி என்றும் அடிமை என்றும் ஓடி ஓடி உலகம் முழுக்க வாழ்கின்ற ஒரு இனத்திற்கு உள்ளங்கை அளவிற்கு நாடாக இருந்தாலும் அது வல்லரசு நாடுகளை விட வலிமையாக கட்டப்பட வேண்டும் என்பதில் கணக்கு பார்த்து கட்டி எழுப்பி சாதித்துக் காட்டிய சாதனைத் தலைவர் நம் உயிர் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள். அந்தக் கனவு நாட்டை தான் உலகத்தின் வல்லாதிக்க நாடுகள் அனைத்தும் சேர்ந்து கொண்டு சூறையாட நின்ற போது தாய் பருந்து எப்படி தன் குஞ்சுகளை காப்பாற்ற தவித்து நிற்குமோ அதேபோல களத்தில் இறுதிவரை நின்று தன் மண்ணின் விடுதலைக்காக இறுதிவரை போராடி நின்றார் எம் தலைவர். அதிகாரத்தால் விலை பேசப்பட்ட போதும், ஆயுதங்களால் மிரட்டப்பட்ட போதும், ஆசை வாக்குறுதிகளால் உள்ளத்தை அசைத்துப் பார்த்த போதும் துளியும் சமரசம் இல்லாமல் கொண்ட கொள்கைக்கு நேர்மையாக நின்று உயிரே போனாலும் உள்ளத்தில் நிலைத்த லட்சியத்திற்கு ஒருபோதும் துரோகம் செய்யாமல் உறுதியாய் நின்று இறுதியாய் சான்றானவர் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள். "உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன் ஆனால் அந்த உயிரினும் விட உன்னதமானது எமது உரிமை எமது விடுதலை எமது கௌரவம்" என முழங்கிய சொற்களுக்கு அவரே சாட்சியாக நம் கண் முன்னால் நின்றது தான் வியப்பினால் அசையா நம் விழிகளில் உறைந்து போன வியப்பான உண்மை. ஒரு இனத்தின் கண்ணீர் என்பது தனி மனிதனின் துயரமல்ல; அது தலைமுறைகளின் வலி. ஒரு இனத்தின் உரிமை பறிக்கப்படுவது என்பது அதன் நிலம் மட்டுமல்ல, அதன் மொழி, பண்பாடு, வரலாறு, எதிர்காலம் என அனைத்தும் அச்சுறுத்தப்படுவதற்குச் சமம். அந்த உண்மையைத் தனது வாழ்வின் வழியாக உணர்த்தியவராகத் தமிழர்களின் தேசிய உணர்வில் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் நிலைத்திருக்கிறார். எப்படியும் வாழலாம் என்ற எண்ணத்திற்கும், எதற்காக வாழ வேண்டும் என்ற இலட்சியத்திற்கும் இடையிலான வேறுபாட்டை அவரது வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது. ஒரு மனிதனின் வாழ்வு அவன் அடைந்த வெற்றிகளால் மட்டுமே அளவிடப்படுவதில்லை; அவன் எதற்காக வாழ்ந்தான், எவற்றைத் தனது வாழ்வின் உயர்ந்த நோக்கமாகக் கொண்டான், தனது காலத்தின் துயரங்களுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றினான் என்பவற்றாலும் அளவிடப்படுகிறது. அந்த வகையில், தனது வாழ்வையே தமிழர் தேசிய உரிமை, தாயக உணர்வு, மொழி, இன அடையாளம் ஆகியவற்றோடு பின்னிப் பிணைத்துக்கொண்ட தலைவராக நம் உயிர் தலைவர் மேதகு வே பிரபாகரன் விளங்குகிறார். இனத்தின் துயரங்களுக்கு மத்தியில், தமிழர்களின் அரசியல் உரிமைகள், மொழி, கல்வி, சமூக சமத்துவம், பெண்களின் பங்கு, தன்னிறைவு போன்ற கனவுகளை முன்னிறுத்தி தமிழ் தேசிய கனவு தேசத்தை கட்டி எழுப்பினார்.. தமிழ்நாடு என பெயர் வைத்து இது தமிங்கில நாடாக தரங்கெட்டு போய் இருக்கும் நிலை கண்டு வருந்தி வாடி நிற்கையில் பொருளாதாரத் தடைகளும், போர்ச்சூழலும், நெருக்கடிகளும் சூழ்ந்திருந்த ஒரு நிலத்தில் அடிப்படை கல்வி முதல் உயர்கல்வி வரை தாய்மொழியில் கல்வி, வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தனித்தமிழ் பெயர்கள், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்கின்ற உயரிய நிலை என நிலை நிறுத்தி தமிழன் தலை நிமிர்த்தினார் நம் தலைவர். சாதியற்ற சமூகத்தை உருவாக்கி மாவீரர் துயிலுமிடங்களில் விதைத்த வீரத்திற்கே முதலிடம் என உருவாக்கி சாதியை சவக்குழியில் புதைத்து வீரத்தை புவியிலே நட்டவர் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன். வீட்டிற்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைக்கவிழுந்தார் என்கின்ற பாட்டன் பாரதியின் பாடல் வரிகளை நினைவாக்கி ஆணுக்கு பெண் சமம் அல்ல ஆணும் பெண்ணும் சமம் என்பதை சரித்திரத்தில் நிலைநாட்டி ஆண்களுக்கு நிகராக பெண்களையும் ஆயுதமேந்தி மண்ணின் விடுதலைக்காக போரிட வைத்த மகத்தான புரட்சியாளன் நம் தலைவன். என்னை நோக்கி வரும் எத்தனையோ அவதூறுகளுக்கு மத்தியில் இதயத்தில் பாயும் விமர்சன அம்புகளால் காயப்படும் காயங்களுக்கு நடுவில் இன்னும் நான் உறுதியோடு நிற்க ஒரே காரணம் அப்பழுக்கற்ற அந்த வீர மனிதனின் வீரமிக்க அந்த விழிகள் தான். தளர்வுகள் என்னைச் சூழும்போது, தடைகள் என் பாதையை மறைக்கும்போது, நம்பிக்கையின் ஒளி மங்கத் தொடங்கும்போது, என் மனத்தின் ஆழத்தில் எழும் அவரது நினைவே மீண்டும் என்னை எழுந்து நிற்கச் செய்கிறது. அவரே எனக்கு அண்ணனாக எம் இனத்தின் மன்னனாக இருந்து என்னை வழிநடத்துகிறார். நான் திரும்பும் திசையெல்லாம் திருஉருவாக நின்று என்னை கைப்பிடித்து அழைத்து செல்கிறார். தோல்விகளாலும் காயங்களாலும் அவதூறுகளும் நான் துவளும் நேரங்களில் எல்லாம் என் உள்ளுக்குள் ஊற்றெடுத்து என்னை ஆற்றுப்படுத்தும் என் வாழ்வியல் துணை என் உயிர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் அவர்கள். என் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் அவரே நிறைந்திருக்கிறார். அசைக்க முடியா உறுதி கொண்ட எங்களது நிலைப்பாடுகளில் அவரே சத்தியமாய் உண்மையுமாய் மறைந்திருக்கிறார். எங்கோ பிறந்த என்னை, என் இனத்தின் மீதான பற்றும், மொழியின் மீதான காதலும், தேசிய உணர்வும் ஒரு பெரும் இலட்சியப் பாதையில் அழைத்துச் சென்றிருக்கின்றன. எண்ணற்ற இன்னல்களையும், துயரங்களையும், அடக்குமுறைகளையும் எதிர்கொண்டபோதும், என் மனத்தின் உறுதியைச் சிதைக்காமல் என்னைத் தொடர்ந்து இயங்கச் செய்கிற அந்த உணர்வின் மையத்தில் என் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் மட்டுமே இருக்கிறார். தமிழ்த் தேசிய இனத்தின் வரலாறு எழுதப்படும் போதெல்லாம் மேதகு வே பிரபாகரன் என்ற பெயர் மட்டும் தங்க எழுத்துக்களால் வைரப் பக்கங்களில் எழுதப்படும். அவர் இன்றி நமக்கு இறந்த காலமோ எதிர்காலமோ நிகழ்காலமோ இல்லை என்பதுதான் நிதர்சனம். அவரே நமக்கு தத்துவமாக வழிகாட்டியாக வழியாக மாறி நிற்கிறார். அவர் காட்டிய பாதையில் தமிழர் என்ற தேசிய இனம் தனக்கான இறையாண்மையை, விடுதலையை ஒரு நாள் வென்றெடுத்தே தீரும். என் உயிரோடு கலந்த அன்புத் தலைவர், என்னுயிர் அண்ணன், நம் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்களை‌ உலகம் முழுக்க பரந்து வாழும் என் தாய் தமிழ் உறவுகளோடு மகிழ்ந்து பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
31
763
26
1,546
16,438
த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் வீட்டின் பால்கனியை தகர ஷீட்டால் மறைக்கும் பணி தீவிரம்.! #TVKMLA | #ArulVignesh | #IAS | #PolimerNews
219
1,242
168
5,626
217,961
SEEMANISM retweeted
*எண்ணத்தில் தலைவன்!* *உள்ளத்தில் இறைவன் !* உலகத்தமிழர்கள் அனைவருக்கும் தேசியத்தலைவர் பிறந்தநாள் வாழ்த்துகள்! #தேசியத்_தலைவர்72
2
236
2
576
2,773
SEEMANISM retweeted
மோசமான நிலைக்கான சான்று - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிவு #Seeman #NTK #NaamTamilarKatchi #TVK #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
16
192
2
490
6,660
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தனக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அவர்கள் புகார் தெரிவித்திருப்பது தறிகெட்டு நிற்கும் தவெக ஆட்சியின் மோசமான நிலைக்கான சான்றாகும். ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கே தவெகவின் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை; அதுவும் தவெகவின் சட்டமன்ற உறுப்பினரே அத்துமீறி நடந்துகொள்ள முனைகிறார் என்றால், எளிய மக்களுக்கு இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கும்? பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறிதும் பொறுத்துக்கொள்ளாத (Zero Tolerance) கொள்கையைக் கடைப்பிடிப்போம் என்று மேடைகளில் வீராவேசமாக முழங்கிய முதல்வர் விஜய் அவர்கள், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காது காப்பாற்றிவிட முனைந்தது எதற்காக? அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அமைச்சர்களைக் கொண்டு பேச வைத்தது ஏன்? அதிமுக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் இப்போதுவரை முதல்வர் விஜய் ஏன் வாய்திறக்கவில்லை? அமைதியாக இருந்து எதை சாதிக்க நினைக்கிறார்? கடந்த சூலை 31 அன்றே இந்த விவகாரம் அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு புகார் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 115 நாட்களாக முதல்வர் விஜய் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? புகார் தெரிவிக்கப்பட்டப் பிறகும், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அரசுத்தரப்பு எதற்காக சப்பைக்கட்டு கட்டியது? இது மோசடித்தனம் இல்லையா? குற்றவாளியைக் காப்பாற்றும் விதத்திலான முதல்வர் விஜய்யின் நிர்வாக அணுகுமுறை இழிவானது இல்லையா? கடும் கண்டனங்கள்! பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி, மரியாதையுடன் வாழும் சூழலை உருவாக்குவதே அரசின் முதன்மை நோக்கம் என்று கூறினீர்களே முதல்வரே! ஒரு மாவட்ட ஆட்சியரே, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் தெரிவித்து, நடவடிக்கை கோரி, நீதிமன்றத்தில் புகார்கூற வேண்டிய நிலை என்றால், எளிய பெண்கள் எந்த நம்பிக்கையில் காவல்துறையை அணுகுவார்கள்? பெண்களுக்கு அண்ணனாகத் துணை நிற்பேன் என்றும், இரு பெண்களைக் கொள்கைத் தலைவர்களாக ஏற்றிருக்கிறோம் என்றும் மேடைதோறும் பேசிய முதல்வர் விஜய், இந்தப் புகார் அரசின் கவனத்துக்கு வந்தபோது ஏன் மௌனம் காத்தார்? நடவடிக்கை எடுக்க மறுத்தார்? தனிக்கட்சிப் பெரும்பான்மை இல்லாத தனது ஆட்சியைத் தக்க வைக்க எந்த எல்லைக்கும் முதல்வர் விஜய் செல்வாரேன்றால், இது மாற்றமா? கொடும் துர்நாற்றமா? தாராபுரம் இடைத்தேர்தல் வழக்கில், என்னுடைய தங்கை கார்த்திகாவைக் கைது செய்ததில் காட்டிய அவசரமும், பயணத்தின் இடையே தம்பி இசை மதிவாணனைக் கைது செய்ததில் காட்டிய முனைப்பும், அரசை விமர்சித்துப் பேசிய தம்பி சாட்டை துரைமுருகன் மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவுசெய்ததில் காட்டிய வேகமும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான இந்தப் புகாரில் எங்கே போனது? தாராபுரம் இடைத்தேர்தலில் சத்தியபாமா உருவக்கேலிக்கு ஆளானபோது கண்டனம் தெரிவித்த முதல்வர், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவின் புகார் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை? மாண்புமிகு நீதிபதி விக்டோரியா கௌரி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் இவ்விவகாரம் குறித்துப் பேசியதைத் தொடர்ந்து, அவர் மீது தவெகவினர் பொழிந்த ஆபாச வசைகளையும், கீழ்த்தரமான விமர்சனங்களையும் முதல்வர் கண்டிக்காதது ஏன்? பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று தமது கட்சியினரிடம் சொல்லக்கூட முதல்வருக்குத் தயக்கமா? ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட சம்பவமே நடைபெறவில்லை என்று ஊடகச் சந்திப்பில் மறுத்த அமைச்சர் நிர்மல்குமார், எந்த அடிப்படையில் அவ்வாறு கூறினார்? புகாரை மூடி மறைக்கத் துணைபோன அமைச்சர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேசிய மகளிர் ஆணையம் உள்நுழைந்து, உயர் நீதிமன்றம் தலையிட்டு, மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கும் வரை அரசு காத்திருந்தது ஏன்? தேசிய மகளிர் ஆணையமும், சென்னை உயர் நீதிமன்றமும் தலையிடும் நிலை வரும்வரை அரசின் நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது? பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது? பெண்கள் துணிந்து புகார் அளிக்க வேண்டும் என்று சொல்லும் அரசே, ஒரு பெண் மாவட்ட ஆட்சியரின் புகாருக்குப் பதிலளிக்க இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது பேரவலம் இல்லையா? ஆகவே, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
245
1,102
37
2,766
72,540