
Fan account of @actorvijay launched on 19th June 2011 | https://xitter.gq/t.co/FFqswtlxuA | #தமிழகவெற்றிக்கழகம் சமூக ஊடக அணி | @tvkvijayhq @cmotamilnadu
Joined June 2011
- Tweets66.4K
- Following4
- Followers289K
- Likes3.9K
VTL Team retweeted
கோவை பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் இதுவரை இல்லாத அளவுக்கு திமுக ஊழல் செய்துள்ளது, இந்தியாவிலேயே . AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாபெரும் ஊழல் செய்த ஒரே கட்சி திமுகதான் - மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள்
VTL Team retweeted
உலகிலேயே AI தொழில்நுட்பத்தில் ஊழல் செய்து சாதனை படைத்த தி.மு.க!
'Artificial Intelligence Corruption' DMK (AIC - DMK)
பகுத்தறிவு - சுயமரியாதை - சமுகநீதியை தன் இறுதி மூச்சுவரை தமிழ்நாட்டிற்குக் கற்பித்தவர் நம் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார். அவர் வழியில் வந்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள், "மாநில சுயாட்சி" என்ற கொள்கையோடு தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆட்சியை ஏற்று நடத்தினார். ஆனால், அவர்கள் வழியில் வந்ததாகச் சொல்லிக்கொண்டு, அவர்கள் பெயரை மட்டும் தன் ஆட்சிக்கு முகமூடியாக போட்டுக்கொண்டு, முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு துறையிலும் செய்ததெல்லாம் ஊழல்! ஊழல்! ஊழல் மட்டும்தான். இதைத்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக நாம் சொல்லிக் கொண்டிருந்தோம்.
இறுதியில் தந்தை பெரியாரின் பெயரில் அமைந்த நூலகத்திற்கு வாங்கிய புத்தங்களிலும் AI முறையில் ஊழல் செய்து 'உலக ஊழல் சாதனை'யைப் படைத்து நம்மையே திகைக்க வைத்துள்ளார்; தமிழ் அறிவுலகத்தை அவமானத்தில் கூனிக்குறுக வைத்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்.
உலகிலேயே AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதன்முதலில் ஊழல் செய்து Artificial Intelligence Corruption DMK (AIC - DMK) என்னும் சாதனையும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் தி.மு.க படைத்துள்ளது. இதன்மூலம், டிஜிட்டல் ஊழல், AI ஊழல் எனக் காலத்திற்கு தகுந்தவாறு ஊழல் செய்வதில் தன்னைத்தானே வளர்த்துக் கொண்டிருக்கிறது தி.மு.க. இதுதான் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒரே சாதனை! தமிழ்நாட்டை பிடித்த தீராத வேதனை!
இப்படிப்பட்ட ஊழலால் உருவான போலியான - குப்பையான - ஒன்றுக்கும் உதவாத சக்கைகளை புத்தகங்களாக தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கொள்முதல் செய்ததாகக் கணக்குக்காட்டி பல கோடிகளைச் சுருட்டியுள்ளது திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையின் கீழ் செயல்பட்ட ஊழல் கும்பல்!
மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமே இங்கு பிரச்சினை இல்லை; மாறாக, முந்தைய தலைமுறையின் அறிவுஜீவிகளை ஏமாற்றி, இன்றைய தலைமுறையின் அறிவுஜீவிகளின் மூளையை மழுங்கடித்து, வரவிருக்கும் நாளைய தலைமுறை அறிவுஜீவிகளின் எதிர்காலத்தை சூனியத்தில் தள்ளும் படுபாதகத்தைச் செய்துள்ளது திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான முந்தைய அரசு.
ஒரு நாளைக்கு மூன்று அறிக்கைகளை வெளியிட்டு த.வெ.க. அரசை விமர்சித்து வந்த மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தப் பிரச்சினை வெளியானது முதல் எங்கு பதுங்கி இருக்கிறார் என்பதே தெரியாமல் பம்மிக் கொண்டிக்கிறார். இப்போது வெளியிட வேண்டியதுதானே ஒரு அறிக்கையை? ஏன் இன்னும் இந்த விவகாரம் பற்றி அவரிடம் இருந்து எந்த அறிக்கையும் வெளி வரவில்லை?
பெரியார் அறிவுலகத்தைப்போல், கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும், இன்னும் தமிழ்நாட்டில் உள்ள எத்தனை நூலகங்களில் இதுபோன்ற ஊழல் புத்தகங்கள் புதைந்து கிடக்கிறதோ, அவையெல்லாம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டு களையெடுக்கப்பட வேண்டும். அதோடு, பெரியார் அறிவுலகத்தில் புத்தகம் வாங்கியதிலேயே இவ்வளவு ஊழல் என்றால், பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலக கட்டுமானத்தில் எவ்வளவு ஊழல் நடைபெற்றிருக்கும் என்பது பற்றியும் பொதுப்பணித்துறை வல்லுநர்களைக் கொண்டு ஆராய்ந்து உண்மைகள் விரைவில் வெளிக்கொண்டுவரப்படும்.
கழிப்பறையில் இருந்து கல்லறை வரை... சாக்கடையில் இருந்து மழைநீர் வடிகால்வாய் வரை... குப்பையிலிருந்து புத்தகங்கள் வரை என அத்தனையிலும் ஊழல் செய்த முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும், ஊழலில் பங்குப்போட்டுக் கொண்டு அவருடைய திருட்டுக் கூட்டாளிகளும் மக்கள் மன்றத்தில் தினம்தோறும் அவமானப்பட்டு வருகிறார்கள்; விரைவில் சட்டத்தின் பிடியில் அகப்படுவார்கள்; நீதிமன்றத்தில் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.
இதற்கிடையில் கோவை பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகம் கொள்முதல் செய்தததில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்க தி.மு.க. சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இது எப்படி இருக்கிறது தெரியுமா? முந்தைய காலங்களில் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் பிக்பாக்கெட் அடிக்கும் ஜேப்படித் திருடனை யாராவது கண்டுபிடித்து "திருடன்... திருடன்" என்று சத்தம் போட்டால், உடனே அந்த ஜேப்படித் திருடன் கொஞ்ச தூரம் ஓடிப்போய், அதே கூட்டத்தில் கலந்திருக்கும் தன் கூட்டாளியான மற்றொரு திருடனிடம் திருடிய பர்சை(Purse) கைமாற்றிவிட்டு, "திருடன் திருடன்" என்று இவனும் சேர்ந்து கூட்டத்தோடு கத்துவான். மக்களும் "இவன் திருடன் இல்லைபோல... அங்கே ஓடுகிற மற்றொருவன்தான் திருடன்" என்று நினைத்து இவனை விட்டுவிட்டு அவனைத் துரத்துவார்கள். ஆனால், அது அந்தக் காலம். அது மலையேறிவிட்டது. மக்கள் இந்தக் காலத்தில் விழிப்படைந்துவிட்டார்கள். அதனால், மக்களிடம் மாட்டிக் கொண்டதும் தி.மு.க போடும் ஜேப்படி திருடன் வேலை இனி எடுபடாது. அதைப் புரிந்துகொண்டு கொஞ்சமாவது தி.மு.க. திருந்த வழி பார்க்கட்டும்.
தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட எண்ணற்ற நம் தலைவர்கள் பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவ சமுதாயம், மதச்சார்பின்மை கருத்துக்களை புத்தகங்கள் மூலமே இந்த மண்ணில் விதைத்தனர். ஆனால், முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்தப் புத்தங்களில் எப்படி ஊழல் செய்யலாம் என்ற நஞ்சையும், பல தலைமுறைகளின் சிந்தனையை அழிக்கும் விஷத்தையும் ஊழல் புத்தகங்களால் விதைத்துள்ளார்.
அந்தக் கொடிய விஷத்தை, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட உள்ள நேர்மையான விசாரணை மற்றும் தமிழக அறிவுஜீவிகள், கல்வியாளர்கள், சமூக அரசியல் அறிஞர்கள் துணையுடன் முறியடிப்போம்! ஆரோக்கியமான சமுதாயத்தைப் படைப்போம்! அறிவார்ந்த தலைமுறையை உருவாக்குவோம்!
VTL Team retweeted
யார் இந்த மகேஸ்வரி ஸ்டாலின்
யார் இந்த பவித்ரா கருணாநிதி
யார் இந்த பவுனாம்பாள் கருணாநிதி
முக்கிய குறிப்பு
அன்பில் மகேஷ் மேல என்ன கடுப்போ , திமுக மேலும் ஒரு FIR போட லஞ்ச ஒழிப்புத்துறையில் மனு கொடுத்திருக்கு.
VTL Team retweeted
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.
இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்!
#CMJosephVijay
VTL Team retweeted
மானங்கெட்ட, துப்புகெட்ட,வெட்கம் கெட்ட, அறிவுகெட்ட தனமாகக் கட்சி நடத்துகிறவர்கள் ஒவ்வொரு துறையிலும் மாபெரும் ஊழல் செய்துவிட்டு இப்போது ஓவர் லாஜிக் பேசுவதுபோல ஊளையிடுகின்றனர். தீயசக்தியின் ஆட்சியில் வெளியிட்ட ஆணையை வெளியிட்டும் அதை நாங்கள்தான் ஆணையாகப் பிறப்பித்தோம் என்று ஒப்புக்கொள்ள துப்பில்லை ; வக்கில்லை. ஆனால், பரந்தாமன்களை வைத்து ஆத்திரத்தை மட்டுமே கொட்டி வருகிறது.
குடவாசல் என்பதைக்கூட கொடவாசல் என்று குளறுபடியாக இருந்தது குடைசாய்ந்த ஆட்சியின் துப்புகெட்ட அறிவுகெட்ட மானம்கெட்ட உஷார்தனத்தின் உடைசல்தான் அது. கேவலமான அரசியல் செய்யவில்லை என்று கூறிக்கொண்டே அப்படிப்பட்ட அரசியலைத்தான் செய்து வருகின்றனர்.
தங்களது தத்தி அரசாங்கம், முட்டாள் கவர்மெண்ட்தான் அனைத்து ஆணைகளையும் வெளியிட்டது. அதனடிப்படையில்தான் குழுக்கள் அமைக்கப்பட்டும் வெளியிடப்பட்டது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதுதானே?. வெட்கம் கெட்ட வேலை வெட்டி அற்ற முதலமைச்சர் தலைமையில் நடந்த தீயசக்தி ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுக்கள் யாருடைய அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட்டது?.
நாங்கள் அமைத்த குழு நாங்கள் அமைத்த குழு என்று வார்த்தைக்கு வார்த்தைக்கு வாய்கிழியப் பேசும் தங்கள் பிரதிநிதி வாயிலாகவே தங்கள் குழு பரிந்துரைத்த, தேர்வு செய்த பதிப்பகங்கள் மற்றும் நூல்களின் பட்டியலை வெளியிட வேண்டியதுதானே?.
திமுக அறிவுடைய இயக்கம் என்று தனக்குத்தானே கூவிக்கொள்பவர்கள், தங்களின் தீயசக்தி திமுக ஆட்சியில் இருந்தது வரை தேர்வுச்பெய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியலை வெளியிட்டு,, தவெக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டிருந்தால் அதையும் நிரூபிக்கும் வகையில் பட்டியலை ஆதாரத்துடன் வெளியிட வேண்டியதுதானே?. அதைச் செய்யாமல், வழவழா கொழகொழா கேள்விகளை வக்கற்ற, வகையற்ற ஆட்களை வைத்து கேட்பது ஏன்?.
திமுக குறிப்பிடும் பெயர்களில் புத்தகங்கள் தெரிவு செய்ய 2025 நவம்பரிலோ அல்லது 2026 பிப்ரவரியிலோ யாருடைய ஆட்சி நடந்தது?. இதை துப்புகெட்ட,அறிவுகெட்ட,
கூறுகெட்ட வாதாடியை வைத்தே வாதிடலாமே?. அதை ஏன் திமுக செய்யவில்லை?. இல்லாத முகவரியில் ஆணை வெளியிட்டது துப்புகெட்ட,மானம்கெட்ட திமுக ஆட்சியில்தான் என்பதை ஒப்புக்கொள்ள தெம்பு இருக்கிறதா?. திராணி இருக்கிறதா?.
இல்லாத பதிப்பகங்களையும் இல்லாத எழுத்தாளர்களையும் வைத்து கொள்முதல் செய்து ஊழல் செய்துவிட்டு சீல் வைக்கப்பட்ட தேதியை வைத்து, அன்றுதான் கொள்முதல் செய்ததாகக் கூறும் கூமுட்டை அரைவேக்காட்டு ஆளை வைத்து பேசிப்பேசி திமுகவே மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு கேவலப்பட்டு நிற்கிறது.
VTL Team retweeted
“பெரியார் நூலக ஊழல்” விவகாரத்திலிருந்து திசைதிருப்ப ஏதாவது ஒரு விஷயத்தை நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Better luck next time @mkstalin sir..
ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான குழு குறித்து:
ஒன்றிய – மாநில உறவுகளை நிர்வகிப்பதற்காக முந்தைய அரசால் அமைக்கப்பட்ட குழுவில் 3 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். அதில் ஒருவர் 04.05.2026 அன்று ராஜினாமா செய்தார்.
அண்ணன் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, புதிய சட்ட ஆணையத்தை (Law Commission) அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது .
இதுதொடர்பாக நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டறிந்ததுடன், ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான பணிகளை மேலும் திறம்படச் செயல்படுத்தும் நோக்கிலும், 07.08.2026 அன்று புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.(அரசாணை எண். 202, சட்டம் (LC) துறையின் பத்தி 3(c)-ஐப் பார்க்கவும்.)
புதிய சட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் முழுநேர உறுப்பினர்கள்:
தலைவர்:
மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் டி. கிருஷ்ணகுமார்.
முழுநேர உறுப்பினர்கள்:
சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மாண்புமிகு நீதியரசர் டீக்கா ராமன்.
திரு. டி.கே. ராமச்சந்திரன், ஐ.ஏ.எஸ்.,
(அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர்.)
திரு. ஏ. அருணகிரி, சட்டத்துறையின் முன்னாள் அரசுச் செயலாளர்.
பகுதிநேர உறுப்பினர்கள்:
திரு. பி. மோகன்தாஸ், (முன்னாள் மாவட்ட நீதிபதி.)
திரு. ஆர். கோவிந்தராஜன், (முன்னாள் மாவட்ட நீதிபதி.)
இவ்வாறு புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
VTL Team retweeted
தமிழை வைத்து 70 வருடமாக சுரண்டிய திமுக,
தற்பொழுது பெரியாரை வைத்து கொள்ளை..
ஆமா இந்த அகல்விளக்கு கமிஷன் யாருக்கு சென்றது @mkstalin , @arivalayam ?
VTL Team retweeted
2023-ம் ஆண்டு முதலே குறிப்பிட்ட பதிப்பகத்தில் இருந்து புத்தகங்கள் அனுப்பியது அம்பலம்.. நியூஸ் தமிழ் நடத்திய கள ஆய்வில் அதிர்ச்சி
Periyar Library | Agalvilakku | Fake Books | Book Scam | Publishers
#NewsTamil24x7 #PeriyarArivulagam
VTL Team retweeted
Three publishers
Akal Vilakku Pathippagam,
Sigma Publishing Services & Phoenix Publications ,
operating from the same address. Since 2023, all have secured government orders and public library purchases.
Who owns them?
How were the contracts awarded?
VTL Team retweeted
கோவை பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டினேன். பெரியார் அறிவுலகம் சம்பந்தமான யாவற்றையும் 99.9 சதவீதம் நானே முடித்துவிட்டேன் என்று
கூறிய அரசியல் மூர்த்தி இப்போது எங்கே போனார்?.
இந்த கோவை பெரியார் அறிவுலகம் ஊழல் உலகமாக மாறியதைத்தான்
எல்லாவற்றையும் நாங்களே முடித்து விட்டோம் என்று அரசியல் மூர்த்தி சொன்னாரா?
ஊழல் சம்பந்தமாக எங்கள் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எழுப்பும் எந்தக் கேள்விக்கும் இதுவரை பதில் சொல்லாமல் சம்பந்தமில்லாத அவதூறாகப் பேசும் அரசியல் மூர்த்தியும் அவரின் வாரிசு ரீபோஸ்ட்நிதியும் அறிவுலகம் ஊழல் உலகமாக மாறியதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?.
ஸ்டாலின் படிக்கச் சொன்னார்.
விஜய் படம் பார்க்கச் சொல்கிறார் என்று சொன்ன திமுகவின் அண்டா குண்டாக்கள் எல்லாம் பம்மிப் பதுங்குவது ஏன்?.
யூட்யூபில் வால்ட்யூப் வாய்களுடன் பேசும் திமுகவின் தண்ணீர் குடிக்கும் பாத்திரங்களும்
அரசியல் விமர்சகர் என்ற பெயரில் திமுகவின் கூஜாக்களாக இருப்போரும்
பத்திரிகையாளர் என்ற பெயரில் திமுகவின் உறுப்பினர் என்பதை மறைத்து அன்றாடம் டிவி விவாதங்களில் மன்றாடும் ஆத்மாக்கள் எங்கே இருக்கின்றனர்?.
ஆப்பசைத்த வானரம்போல தாங்கள் பிளந்த மரத்தின் இடைவெளியில் தங்கள் வாலே சிக்கிக் கொண்டதால், எல்லாவற்றிற்கும் விஜய்தான் காரணம் என்று அவதூறு பேசி அலறப் போகின்றனரா?.
அரசியல் மூர்த்தியின் கூடாரமே ஆழ்ந்த அமைதியில் உறைந்து போய் உள்ளதால், இந்த ஊழலால் தி.மு.க. ஆடிப்போய் உள்ளது மட்டும் உறுதியாகி உள்ளது.
VTL Team retweeted
#Breaking
TN Govt appoints 3 special public prosecutors for Gem Granites Veeramani POCSO case.
VTL Team retweeted
புதிய நூலகங்களுக்கான நூல் / மின்நூல் தேர்வுக் குழு (Selection Committee) - 2025
நூலகத்தில் இடம்பெறக் கூடிய தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்பட்ட நூல்கள் மற்றும் மின்நூல்களை ஐந்து வகை
பிரிவுகளில் தேர்ந்தெடுப்பதற்கு மொத்தம் 13 உறுப்பினர்களைக் கொண்ட நூல் தேர்வுக் குழு அமைக்கப்பட்டது.
1. முனைவர், ஜெ. ஜெயரஞ்சன், பேராசிரியர் (பொருளாதாரம்) - மாநில திட்டக்குழு துணைத் தலைவர்
2. முனைவர். சுல்தான் அஹமத் இஸ்மாயில் - மாநில திட்டக்குழு உறுப்பினர்
3. முனைவர். கு. அரசேந்திரன் - முதன்மை ஆசிரியர்
4. முனைவர் ராமு மணிவண்ணன் - பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர்
5. முனைவர். கே. ராஜன் - கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆலோசகர்
6. முனைவர். E. முருகன் FRSC, FASCh, - ஆராய்ச்சித் துறை முதல்வர், பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர்
7. முனைவர். B. சந்திர மோகன் - பேராசிரியர்
8. திரு. S.பாலபாரதி - எழுத்தாளர் & பாலபுரஸ்கார் விருதாளர்
9. முனைவர். விஜய பாஸ்கர்
10. தலைவர்/இயக்குநர்/பேராசிரியர், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி
11. முனைவர். A.R. வெங்கடாசலபதி, பேராசிரியர்|
12. திரு. R சுதன், IAS (Retd), உறுப்பினர் செயலாளர், மாதிரி பள்ளிகள், கல்வித் துறை.
13. திரு. M.P.விஜயகுமார், தலைவர், தமிழ்நாடு உயர்கல்வி மன்றம்.
அரசாணை (நிலை) எண். 250, 05.11.2025-ன்படி கோயம்புத்தூரில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் ரூ.50 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இணைய வழியில் நூல் பரிந்துரைக் குழுவில் 112 உறுப்பினர்கள் கலந்து கொண்டு கொள்முதல் செய்வதற்கான நூல்கள் பரிந்துரை செய்யப்பட்டனர்.
09.01.2026 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 112 நூல் பரிந்துரைக்குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை நூல் தேர்வுக் குழு உறுப்பினர்களால் கொள்முதல் செய்வதற்கான நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
நூல் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை, 24.01.2026 அன்று நூல் விலை பேச்சு வார்த்தை குழு வழியாக 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை நூல்களுக்கான விலை குறைப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நூல்களுக்கு ஆணை வழங்க 05.02.2026 அன்று நடைபெற்ற உயர்நிலை குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 06.02.2026 அன்று சிறப்பு நூலகங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் குழுவினரால் நூல் கொள்முதல் ஆணை வழங்க நூல் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டு, ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பெரியார் அறிவுலகத்திற்கு ரூ.19.19 கோடி மதிப்பில் 60,266 நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
VTL Team retweeted
அரசாணை (நிலை) எண். 250, 05.11.2025-ன்படி கோயம்புத்தூரில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் ரூ.50 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இணைய வழியில் நூல் பரிந்துரைக் குழுவில் 112 உறுப்பினர்கள் கலந்து கொண்டு கொள்முதல் செய்வதற்கான நூல்கள் பரிந்துரை செய்யப்பட்டனர்.
09.01.2026 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 112 நூல் பரிந்துரைக்குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை நூல் தேர்வுக் குழு உறுப்பினர்களால் கொள்முதல் செய்வதற்கான நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
நூல் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை, 24.01.2026 அன்று நூல் விலை பேச்சு வார்த்தை குழு வழியாக 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை நூல்களுக்கான விலை குறைப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நூல்களுக்கு ஆணை வழங்க 05.02.2026 அன்று நடைபெற்ற உயர்நிலை குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 06.02.2026 அன்று சிறப்பு நூலகங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் குழுவினரால் நூல் கொள்முதல் ஆணை வழங்க நூல் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டு, ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பெரியார் அறிவுலகத்திற்கு ரூ.19.19 கோடி மதிப்பில் 60,266 நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
VTL Team retweeted
பெரியார் அறிவுலகத்தில் ரூ.50 கோடி ஊழல் செய்த திமுக!
பெரியார் அறிவுலகத்தில் சின்னச் சின்ன விஷயங்களைக்கூடப் பார்த்துப் பார்த்து வடிவமைத்தேன் என்று தம்பட்டமடித்த Senior Generational Abuser-ஏ!
புத்தகக் கொள்முதலில் ரூ.50 கோடிக்கு ஊழல் அரங்கேறியிருப்பதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்? "கடல்லையே இல்லையாம்" என்பதைப் போல, தமிழ்நாட்டிலேயே இல்லாத அகல்விளக்குப் பதிப்பகம் மற்றும் பீனிக்ஸ் பதிப்பகம் போன்ற பதிப்பகங்களிலிருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
அந்தப் பதிப்பகங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் தரம் என்னவென்று அறிவீரா, Dummy Daddy? முன்னூறு பக்கங்கள் மட்டுமே கொண்ட புத்தகத்தின் விலை ரூ.1,000-க்கும் மேல்!
அரிய தகவல்களை உள்ளடக்கிய புத்தகமாக இருக்குமோ என்று ஒரு புத்தகத்தை எடுத்து 'தமிழ்நாட்டு முதல்வர்களின் வரலாறு' என்ற தலைப்பின் கீழ் வருபவற்றைப் படித்துப் பார்த்தால்,
"இந்த நிலையில் 1969-1976 மற்றும் 1989-1991 இடையே திரு. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு சீரான பல்வேறு திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன."
என்று இருக்கிறது.
அடடே! என்னே ஒரு எழுத்து நடை! என்னே ஒரு இலக்கிய நயம்! தமிழ் இலக்கணம் இயற்றிய தொல்காப்பியரையே மிஞ்சும் இலக்கணம் இந்த வரிகளில் இருக்கிறதல்லவா, Senior Generational Abuser? ஆமாம், நீங்கள் 1989-இல் முதலமைச்சராக இருந்தீரா, சித்தரஞ்சன் சாலை மூர்த்தி?
பாரதியார் பற்றிய புத்தகங்கள் இதைவிடப் படிக்கக் கொடுமையாக இருக்கின்றன. இரண்டு பதிப்பகங்களின் புத்தகங்களே இந்த இலட்சணத்தில் இருக்கின்றன. இன்னும் பிரிக்கப்படாமல் இருக்கும் பல பெட்டிகளில் என்னென்ன பூதங்கள் காத்திருக்கின்றனவோ? இன்னும் பிரித்து அடுக்கப்படாத ஆங்கிலப் புத்தகங்களின் தரத்தை நினைத்தாலே இப்போதே பக்கென்று இருக்கிறது!
அறிவுத் திருக்கோவில்களில் இருக்க வேண்டிய புத்தகங்களா இவை?
பெரியார் அறிவுலகத்தில் அனைத்தும் தனது தனிப்பட்ட கண்காணிப்பில்தான் நடைபெற்றன என்று தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக்கொண்ட சித்தரஞ்சன் சாலை மூர்த்திக்குத் தெரிந்துதான் இந்தப் புத்தகக் கொள்முதல் ஊழல் நடந்ததா?
பதில் சொல்லத் துப்பிருக்கிறதா, Senior Generational Abuser?
#420Model
VTL Team retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (6.11.2026) தலைமைச் செயலகத்தில், விண்வெளித் துறை செயலாளரும், விண்வெளி ஆணையத்தின் தலைவரும், இஸ்ரோ தலைவருமான டாக்டர் வி. நாராயணன் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay was called on by Dr. V. Narayanan, Secretary, Department of Space, Chairman, Space Commission, and Chairman, ISRO, at the Secretariat today (06.11.2026).
#CMJosephVijay
VTL Team retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (6.11.2026) தலைமைச் செயலகத்தில், நபார்டு தலைவர் முனைவர் வி. ஷாஜி கிருஷ்ணன் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay was called on by Dr. V. Shaji Krishnan, Chairman of NABARD, at the Secretariat today (06.11.2026).
#CMJosephVijay
VTL Team retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
































