ஈழத்தமிழர்கள் மீது இலங்கையில் நடாத்தப்பட்ட இனப்படுகொலைகள்
1956 – 2009
1 இக்கினியாகலை படுகொலை 05.05.1956.
150 பேர் உயிரிழப்பு.
2 1956 இனப்படுகொலை 01.05.1958. 300க்கு மேல் உயிரிழப்பு
3 தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை 10.01.1974. 9 பேர் உயிரிழப்பு
4 1977 இனப்படுகொலை
1978. 1500 க்கு மேல் உயிரிழப்பு
5 பெரியபுல்லுமலை இனப்படுகொலை 20.05.1980. 25 பேர் உயிரப்பு
6 1981 இனப்படுகொலை 1981. எண்ணிக்கை தெரியவில்லை
7 யாழ்நூலக எரிப்பு 01.06.1981. சுமார் 90 ஆயிரம் நூல்கள் சாம்பலாகின.
8 1983 இனப்படுகொலை 23.07.1983. 3000 க்கு மேல் உயிரிப்பு
9 வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை 25.07.1983. 35 பேர் உயிழப்பு.
10 திருநெல்வேலி படுகொலை 24,25.07.1983. 51 பேர் உயிழப்பு.
11 சம்பல்தோட்டம் படுகொலை 1984. 55 பேர் உயிரிழப்பு.
12 சுன்னாகம் காவல்நிலைய படுகொலை 08.01.1984. 19 பேர் உயிரிழப்பு.
13 சுன்னாகம் சந்தை படுகொலை 28.03.1984. 9 பேர் உயிரிழப்பு.
14 மதவாச்சி-ரம்பாவா படுகொலை 09.1984. 15 பேர் உயிரிழப்பு
15 திக்கம் படுகொலை 16.09.1984.16 பேர் உயிரிழப்பு.
16 ஒதியமலை படுகொலை 01.12.1984. 32 பேர் உயிரிழப்பு.
17 குமுழமுனை படுகொலை 02.12.1984. 6 பேர் உயிரிழப்பு.
18 செட்டிகுளம் படுகொலை 02.12.1984. 52 பேர் உயிரிழப்பு.
19 மன்னார் படுகொலை 04.12.1984. 200 க்கு மேல் உயிரிழப்பு
20 கொக்கிளை கொக்குதொடுவாய் படுகொலை 15.12.1984. 131 பேர் உயிரிழப்பு.
21 முள்ளிய வளை படுகொலை 16.01.1985. 17 பேர் உயிரிழப்பு.
22 வட்டக்கண்டல் படுகொலை 30.01.1985. 52 பேர் உயிரிழப்பு.
23 புதுக்குடியிருப்பு-ஐயன் கோவிலடி படுகொலை 21.04.1985. 30 பேர் உயிரிழப்பு
24 வல்வை 85 படுகொலை 10.05.1985. 70 பேர் உயிரிழப்பு
25 திருகோணமலை படுகொலை 1985 03.05.1985- 50 பேர் உயிரிழப்பு
26 நெடுந்தீவு குமுதினி படகு படுகொலை 15.05.1985. 36 பேர் உயிரிழப்பு.
27 கிளிவெட்டி படுகொலை 1985 01.01.1985- 150 பேர் உயிரிழப்பு
28 திரியாய் படுகொலை 08.08.1985. 10 பேர் உயிரிழப்பு
29 சாம்பல்தீவு படுகொலை 04.08.1985 – 09.08.1985. 383 பேர் உயிரிழப்பு.
30 வயலூர் படுகொலை 24.08.1985. 50 பேர் உயிரிழப்பு.
31 நிலாவெளி படுகொலை 16.09.1985. 30 க்கு மேல் உயிரிழப்பு
32 பிரமந்தனாறு படுகொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு
33 கந்தளாய் படுகொலை 09.11.1985. 6 பேர் உயிரிழப்பு
34 முதூர் கடற்கரைசேனை படுகொலை 8.11.1985 – 10.11.1985. 30 பேர் உயிரிழப்பு
35 வங்காலை தேவாலய படுகொலை 06.01.1986. 9 பேர் உயிரிழப்பு
36 கிளிநொச்சி தொடருந்து நிலைய படுகொலை 25.01.1986. 12 பேர் உயிரிழப்பு
37 உடும்பன்குளம் படுகொலை 19.02.1986 130
38 ஈட்டி முரிஞ்சான் படுகொலை 19.03.1986 – 20.03.1986 20
39 பெரிய புல்லுமலை படுகொலை 08.05.1986
10.11.1986 18
24
40 அனந்தபுரம் ஏவுகணை தாக்குதல் 04.06.1986 5
41 கந்தளாய் படுகொலை 04,05,06.1986 50 க்கு மேல்
42 மண்டைதீவு கடல் படுகொலை 10.06.1986 33
43 செருவில் படுகொலை 12.06.1986 21
44 தம்பலகாமம் படுகொலை 12.11.1985. 34
45 பரந்தன் விவசாயிகள் படுகொலை 28.06.1986 7
46 பெருவெளி அகதிகள் முகாம் படுகொலை 15.07.1986 48
47 தண்டுவான் பேருந்து படுகொலை 17.07.1986 17
48 முதூர் மணல்சேனை படுகொலை 18.07.1986 14
49 அடம்பன் படுகொலை 12.10.1986 20
50 பெரிய பண்டி விரிச்சான் படுகொலை 15.10.1986 2
51 கொக்ககட்டிச்சோலை படுகொலை 28.01.1987 133
52 பட்டித்திடல் படுகொலை 26.04.1987 17
53 தோணிதட்டமடுபடுகொலை 27.05.1987 13
54 ஆலவாய் கோவில் படுகொலை 29.05.1987 40
55 மூளாய் மருத்துவமனை படுகொலை 05.11.1987 5
56 கிழக்கு பல்கலைக்கழகப் படுகொலை 23,24.05.1990 226
57 சம்மாந்துறை படுகொலை 10.06.1990 37
58 வீரமுனை படுகொலை 20.06.1990-15.08.1990 233
59 சித்தாண்டி படுகொலை 20,27.07.1990 137
60 பரந்தன் சந்தை படுகொலை 24.07.1990 15
61 பொத்துவில் படுகொலை 30.07.1990 125
62 திராய்கேணி படுகொலை 06.08.1990 90 க்கு மேல்
63 கல்முனை படுகொலை 11.08.1990 62
64 துறைநீலாவணை படுகொலை 12.06.1990 60
65 ஏராவூர் மருத்துவமனை படுகொலை 12.08.1990 10
66 கோரவெளி படுகொலை 14.08.1990 15
67 சேனகன் படுகொலை 26.08.1990 4
68 நெல்லியடி சந்தை படுகொலை 29.08.1990 16
69 சத்துருக்கொண்டான் படுகொலை 09.09.1990 205
70 நட்பிட்டிமுனை படுகொலை 10.09.1990 23
71 வந்தாறு மூலை படுகொலை 05&23.09.1990 174
72 ஒட்டுசுட்டாள் படுகொலை 27.11.1990 12
73 புல்லுமலை படுகொலை 1984- 110
74 புதுக்குடியிருப்பு சந்தி படுகொலை 30.01.1991 28
75 உருத்ர புரம் படுகொலை 04.02.1991 9
76 வங்காலை படுகொலை 17.02.1991 5
77 வட்டாக்கச்சி படுகொலை 28.02.1991 9
78 வந்தாறு மூலை படுகொலை 09.06.1991 10
79 கொக்கக்கட்டிச் சோலை படுகொலை 12.06.1991 220 க்கு மேல்
80 கிண்ணியடிபடுகொலை 12.07.1991 13
ஈழம் Lens retweeted
தமிழர்களின் பாரம்பரிய அறிவியல் தொழில்நுட்பம்! 🌊💧
கடல் உப்புநீரை நல்ல குடிநீராக மாற்றுவதற்குத் தமிழர்கள் பயன்படுத்திய பாரம்பரியத் தொழில்நுட்பம் வியக்க வைக்கிறது. நம் முன்னோர்களின் அறிவியல் சிந்தனையும், நீர் மேலாண்மைத் திறனும் உலகிற்கே ஒரு முன்னுதாரணம்!
Ancient Tamil Technology! 🌊💧
The traditional technology used by Tamils to transform salty seawater into fresh water reflects the remarkable scientific knowledge, innovation and water-management wisdom of our ancestors.
#orissabalu
#tamilnadupolitics
#TamilTechnology #TamilHeritage
"பிரபாகரன்"
அந்தப் பெயர் எங்கள் வழித்துணையல்ல வழியே அதுதான்
#தமிழினத்தலைவர்72
#மேதகு72
#ஈழத்தின்குரல்
ஜே.வி.பி மீது இருந்த தடை நீக்கப்பட்டது போல் ஏன் புலிகள் மீதான தடையை நீக்க முடியவில்லை? - நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் MP அவர்கள் கேள்வி!
@ImShritharan
#ஈழத்தின்குரல்
47
இவர்களுக்கு இருக்கும் ஒரு மனநலப் பிரச்சினை நிர்வாணமாக்கி பார்ப்பது
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் MP அவர்கள்
@ImShritharan
#ஈழத்தின்குரல்
ஈழம் Lens retweeted
ஆனால் சேரன் போன்ற மேற்குலக கைக்கூலிகள் தம்மையே தாய் நிலத்திற்கு அர்பணித்த ஒப்பில்லா மாவீரர்களை உலக பரப்பில் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தினர். என்னத்த சொல்ல😏
ஈழத்தமிழர்களின் துயரங்களுக்காக
குரல் கொடுத்தவர் என்றால், அந்த மக்களின் வலிகளையும் உணர்ந்திருக்க வேண்டும் அல்லவா.
தொல். திருமாவளவன் அவர்கள் நீண்டகாலமாக ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காகவும், விடுதலைப் போராட்டத்திற்காகவும் தமிழகத்தில் குரல் கொடுத்து வந்தவர் என்பதை ஒரு வகையில் ஏற்றுக்கொள்கிறோம்.
அப்படியானால், ஈழத்தமிழர்களின் துயரங்களையும் அவர்களின் அரசியல் உரிமைகளையும் நன்கு அறிந்திருந்த ஒரு தலைவராக, 2009 ஒக்டோபர் மாதத்தில் அவர் மேற்கொண்ட இலங்கை பயணமும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்த நிகழ்வும் முக்கியமான அரசியல் கேள்விகளை எழுப்புகின்றன அல்லவா.
ஏனெனில், அப்போது போர்
முடிவடைந்து ஐந்து மாதங்கள் கூட நிறைவடையவில்லை. ஆனால், ஈழத்தமிழ் மக்களின் துயரங்கள் முடிவுக்கு வந்திருக்கவில்லை.
ஆயிரக்கணக்கான குடும்பங்கள்
தங்களின் உறவுகளை இழந்து தவித்துக்கொண்டிருந்தன. பலர்
காணாமல் ஆக்கப்பட்டு தமது உறவுகளைத் தேடிக்கொண்டிருந்தனர். தங்கள் உறவுகளை இழந்து சொந்த வீடுகளையும் சொத்துக்கள் நிலங்களையும் இழந்து சொல்லோனா துயரங்களை அனுபவித்து மக்கள் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் அடைக்கப்பட்டு, அடிப்படை வாழ்வாதாரங்களுக்காகப் போராடிக்கொண்டிருந்தனர்.
மெனிக்பாம் உள்ளிட்ட முகாம்களில் வாழ்ந்த மக்கள் எப்போது தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவோம் என்ற ஏக்கத்துடன் அகதி வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
தமது குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும், காணாமல் போன உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா, இழந்த வீடுகளையும் நிலங்களையும் மீண்டும் பெற முடியுமா என்ற எண்ணற்ற கேள்விகளுடன் ஒரு சமூகம் மீள முடியாத துயரத்தில் இருந்த காலகட்டம் அது.
இவ்வாறான சூழலில், அந்த மக்களின் துயரங்களுக்காகக் குரல் கொடுத்து வந்த ஒரு அரசியல் தலைவர், அந்தத் துயரங்களுக்கும் இறுதிப்போருக்கும் மக்கள் அழிவுக்கும் அப்போது. பொறுப்புக் கூற வேண்டிய அரசாங்கத்தின் தலைவரான மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து உரையாடியது அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியதா.
அத்தகைய சந்திப்புகளுக்கு
ஒரு காலச்சூழலும் அரசியல் நோக்கமும் இருக்க வேண்டும்.
அப்போது அந்தச் சந்திப்பின் மூலம் முகாம்களில் வாழ்ந்த மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? அவர்களின் மீள்குடியேற்றம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை, அரசியல் உரிமைகள், நில மீட்பு, மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக என்ன உறுதியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன, அந்த மக்களின் சார்பாக எத்தகைய அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது,
இவைதான் இன்று நான் எழுப்பும் கேள்விகள்.
மேலும், மஹிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின் போது இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்குப் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார்கள். அன்றைய ஊடகச் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்தக் குழுவில் திருமாவளவனும் இடம்பெற்றிருந்தார்.
இருப்பினும், பின்னர் வெளியிட்ட கருத்துகள், அந்தக் காலகட்டத்தில் ஈழத்தமிழர்கள் மத்தியில் எழுந்த ஏமாற்றத்தையும் சந்தேகங்களையும் தானாகவே இல்லாமல் செய்துவிட முடியாது.
ஈழத்தமிழர்களின் துயரங்களுக்காகக்
குரல் கொடுத்தவர் என்றால், அந்தத் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருந்த மக்களின் மனநிலையையும் அரசியல் உணர்வுகளையும் புரிந்துகொள்ள வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருந்தது அல்லவா.
மக்கள் தங்கள் உறவுகளை இழந்து,
சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டு, அகதி முகாம்களில் அடிப்படை வாழ்வாதாரங்களுக்காகப் போராடிக்கொண்டிருந்த போது, அவர்களின் துயரங்களுக்குக் காரணமானதாகக் கருதப்பட்ட அரசாங்கத்தின் ஜனாதிபதியைச் சந்தித்தது எவ்வாறு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்.
இது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் எழுப்பப்படும் கேள்வியல்ல. மக்களின் வலிகளையும் அரசியல் தலைவர்களின் பொறுப்புகளையும் அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுக் கேள்வியாகும்.
மக்களுக்காகக் குரல் கொடுப்பது என்பது அவர்களின் துயரங்களைப் பற்றிப் பேசுவதோடு முடிந்துவிடுவதில்லை. அவர்கள் துயரத்தின் உச்சத்தில் இருக்கும் போது எடுக்கும் அரசியல் முடிவுகளிலும் அவர்களின் உணர்வுகளுக்கும் கௌரவத்திற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும்.
வரலாற்றில் எந்தத் தலைவராக இருந்தாலும், அவர்களின் உரைகளையும் போராட்டங்களையும் மட்டுமல்ல, முக்கியமான காலகட்டங்களில் அவர்கள் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளையும் கேள்விக்கு உட்படுத்துவது மக்களின் உரிமையாகும்.
ஈழத்தமிழர்களின் வரலாற்றை எழுதும் போது, பாராட்டப்பட வேண்டிய செயல்கள் மட்டுமல்ல, விமர்சிக்கப்பட வேண்டிய அரசியல் முடிவுகளும் மறைக்கப்படாமல் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஏனெனில், வரலாறு என்பது தலைவர்களைக் காப்பாற்றுவதற்காக எழுதப்படுவதல்ல,மக்களின் உண்மைகளையும் அனுபவங்களையும் எதிர்காலத் தலைமுறைக்குக் கடத்துவதற்காக எழுதப்படுவதாகும்.
#ஈழத்தின்குரல்
ஈழம் Lens retweeted
அடே நாரயணா மாட்டு மூத்திரம் குடித்தால் இப்படித்தான் மூளை மங்கி அந்த கொலையை ஆய்வு செய்த காவல்துறை ஆய்வாளரே தெளிவாக சொன்னபின்னும் வன்மம் வளர்க்கிறாயே ? இனப்படுகொலையாளி இராஜீவின் கொலை வெளிநாட்டு ,மற்றும் உள்ளக சதி , இராசீவ் தன் தற்பாதுகாப்பிற்காக இடுப்பில் வைத்திருந்த கைக்குண்டு
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்கு தடைகோரிய பொலீசாரின் வழக்கு, இன்றைய தினம் (20) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
@Sugashkanu
#மாவீரர்நாள்_2026
#ஈழத்தின்குரல்
விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்பட்டவர்களை குறிப்பிட்ட பிரதேசத்தில் புதைத்ததாகவும் தற்போது தன்னால் அதனை அடையாளம் காட்ட முடியாது என சோமரத்ன ராஜபக்ச , தமக்கு வாக்குமூலம் தந்ததாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கிருசாந்தி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் விசாரணை மேற்கொள்ள யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில் செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் பற்றிய கலந்துரையாடல் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நடைபெற்றபோது
இவ்விடயம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கூறப்பட்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாணத்தில் தான் சிப்பாயாக வேலை செய்யும்போது விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்பட்டவர்களை குறிப்பிட்ட பிரதேசத்தில் புதைத்ததாகவும் தற்போது தன்னால் அதனை அடையாளம் காட்ட முடியாது. சித்துப்பாத்தி என்ற பெயரே தனக்கு தெரியாது என தெரிவித்தார் - என்றனர்.
இதேவேளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் கருத்தை ஆட்சேபித்த சட்டத்தரணிகள், சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டினர்.
#செம்மணி
#ஈழத்தின்குரல்
வல்லமை தாராயோ என்று உங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்...”
தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்து வித்தாகிப்போன எமது மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரைக் கௌரவிக்கும் புனித நிகழ்வு, இன்று (20.11.2026) யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் மிகுந்த உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது.
எமது மண்ணின் விடியலுக்காய் தம் பிள்ளைகளை அர்ப்பணித்த அந்தத் தியாகத் தாய்மார்களையும், தந்தையர்களையும், உறவுகளையும் வணங்கிப் போற்றுவது எமது தலையாய கடமையாகும்.
ஏற்பாடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
#மாவீரர்நாள்_2026
#ஈழத்தின்குரல்
The United Nations' top court finds Myanmar guilty of committing genocide against the country's long-persecuted Rohingya minority.
cnn.it/4t4ZNO5
72
தமிழீழ தேசியக் கொடிநாள் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் வரை
பாடசாலைகளில் கொடி வாங்கியதும்
விற்றதும் ஞாபகம் இருக்கிறது
அன்று அது ஒரு வித கேளிக்கைதான்
இன்று உயிருக்கு மேலானது
எத்தனை உதிரங்கள் "கொடி" க்காய்
சோழன் முதல் ஈழம்வரை
சொரிந்திருக்கும் தமிழ் மண்ணில்
தமிழனுக்கு ஒரே கொடி என்றும்
புலிக்கொடி !
#ஈழத்தின்குரல்
மன்னார் மடுத் தேவாலயத்தில் குடியிருந்த தமிழ் மக்கள் மீதான படுகொலையின் நினைவு நாள் இன்றாகும்
20.11.1999
"தாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை செய்தனர்"
ஈழத்தின் பண்பாட்டு, வரலாற்று முக்கியத்துவம் கொண்ட மன்னார் மாவட்டத்தின் மடுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது மடுதேவாலயம். இலங்கைத் தீவில் பிரசித்தமான மடு மாதா தேவாலயம். பல்லின மக்களாலும் வணங்கப்படுகின்ற புனித தலம். இந்துக்களாலும் பௌத்தர்களாலும் மிகவும் நம்பிக்கையுடன் வணங்கப்படுகின்றன இந்த தலம் தொடர்ச்சியாக போர் நடவடிக்கைகளுக்கும் இன அழிப்புச் செயல்களுக்கும் முகம் கொடுத்தது என்ற வகையில் இன அழிப்பின் வரலாற்றுச் சாட்சியமாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழ் மக்கள் போர்க் காலங்களில் அடைக்கல மாதாவிடம் அடைக்கலம் புகுந்து தம் உயிரை காக்கின்ற நிகழ்வுகள் பல இடம்பெற்றுள்ளன. 1990 ஆம் ஆண்டின் பின்னர் வடக்கில் இலங்கை அரசின் யுத்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து, இடம்பெயர்ந்து மடுப் பிரதேசம் வரையில் எறியப்பட்டனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மன்னார் எனப் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் 1996இற்குப் பிந்தைய இலங்கை அரச படைகளின் போர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு மடு தேவாலயத்தில் தஞ்சமடைந்தனர்.
மார்ச் மாதம் 22 ஆம் திகதி 1999 ஆம் ஆண்டு ரணகோச என்ற ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கையின் மூலம் மன்னார் மடுப் பகுதியை கைப்பற்றும் போரை தொடங்கினர் இலங்கை அரச படைகள். இதற்கு அன்றைய மன்னார் ஆயர் எதிர்ப்பு தெரிவித்தார். புனித தலமான மடு தேவாலயம்மீது போர் தொடுப்பதை நிறுத்துமாறு அன்றைய ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தார் ஆயர். அக் கோரிக்கைக்கு செவிசாய்க்காத அன்றைய ஜனாதிபதி மடுவை கைப்பற்றும் போரை தொடர்ந்து நடத்தினார்.
பல்லின மக்களையும் காப்பாற்றும் மடுமாதா, சிங்களவர்களும் திருவிழாக் காலங்களில் நிறை நிறையாக வந்து தங்கி வணங்கிச் செல்லும் நம்பிக்கை மாதா, தம்மை காப்பாற்றுவாள் என நினைத்தபடி தமிழ் மக்கள் தஞ்சமடைந்தனர். நவம்பர் 20ஆம் திகதி. 1999ஆம் ஆண்டு. மடு மாதா தேவாலயப் பகுதியை கைப்பற்றும் சண்டையை மூர்க்கமாக மேற்கொண்டனர் இலங்கை அரச படைகள். பாலம்பிட்டி – சின்னப் பண்டிவிரிச்சான் காடுகளின் ஊடாக மடுநோக்கி போர் எடுத்தது இலங்கை இராணுவம்.
இப் போர் நடவடிக்கை காரணமாக பாலம்பிட்டி, தட்சணாமருதமடுப் பகுதி மக்களும் இடம் பெயர்ந்து மடு தேவாலயம் நோக்கி வந்தனர். ஒரு கட்டத்தில் இலங்கை அரச படைகள் மடுதேவாலயத்தை ஆக்கிரமித்தனர். மடுதேவாலயத்தில் மக்கள் தஞ்சமடைந்திருந்ததைக் கண்ட இராணுவத்தினர் அவர்களை அங்கிருக்குமாறே சொல்லினர். மக்கள் அங்கு தஞ்சமடைந்திருப்பதை இராணுவத்தினர் பண்டிவிரிச்சானில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினருக்கு அறிவித்திருக்கக்கூடும். 20க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள்.
துப்பாக்கிப் பிரயோகங்கள். இன்னொரு புறம் எறிகணைகள். மடு ஆலய வளாகத்தில் வசித்த மக்கள் அனைவரையும் ஆலய மண்டபங்களில் தஞ்சமடையுமாறு கூறினர் இராணுவத்தினர். இரவு 9மணியின் பின்னர் பண்டிவிரிச்சான் இராணுவ தளத்திலிருந்து செல்கள் மடுதேவாலயம் நோக்கி வரத் தொடங்கின. இரவு பதினொரு மணி இருண்டு போன அந்த நாளில் பீரங்கிகள் மக்களின் பக்கம் திரும்பின. சனங்கள் என்ன செய்வதென தெரியாது வானத்தை நோக்கி மடுமாதாவே எங்களைப் காப்பாற்றும் என இறைஞ்சியபடி இருந்தனர்
இராணுவத்தின் எறிகணை இருதய ஆண்டவர் ஆலயம்மீது வீழ்ந்து வெடித்தது. ஆலய மண்டபம் குருதி வெள்ளத்தில் நனைந்தது. உயிரை காக்க தஞ்சமடைந்த சனங்கள் கொல்லப்பட்டுக் கிடந்தார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று முப்பத்து ஒருபேர் அவ் இடத்தில் இனக்கொலை செய்யப்பட்டனர். 13 சிறுவர்கள் உள்ளடங்க எல்லாமாக 44பேர் கொல்லப்பட்டார்கள். அவர்களின் உடல்கள் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மடுவில் விதைக்கப்பட்டது. தொடர்ந்து தாக்குதல்களை இராணுவத்தினர் விரிவுபடுத்தினர். அன்றிரவு மடு தேவாலயப் பகுதியை முழுமையாக இலங்கை அரச படைகள் கைப்பற்றின.
இச்சம்பவத்த்தில் காயமடைந்த்த தெய்வசேகரம் அமரசிங்கத்தின் இவ் இனப்படுகொலை பற்றிய வாக்குமூலம்.
“அன்றைய தினம் 6.30 மணிக்குப் பின்னர் நாம் இருந்த தேவாளயப்பகுதி எங்கும் சரமாரியான துப்பாக்கிச் சத்தமும் எறிகணைவீச்சுச் சத்தமும் கேட்டவண்ணமிருந்தது. ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் உறங்கச் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தவேளை சரியாக இரவு 9.15 மணியிருக்கும் முதலாவது எறிகணை திருக்குடும்பக் கன்னியர் மடத்தில் விழுந்து வெடித்தது. அடுத்த எறிகணை ஆலயத்தின் முன் நின்ற ஆலமரத்தில் விழுந்து வெடித்தது. அதன்பின்னர் கடைசியாக ஏவப்பட்ட எறிகணை நான் இருந்த இடத்திற்கு மேலிருந்த இரும்புக் கம்பியில் வீழ்ந்து வெடித்தது.
இதன்போது என்னைச் சுற்றியிருந்த எனது அம்மாவான சந்திரசேகரம் பூமணி, அக்காவான அம்பிகாவதி, இவரின் மூத்தமகனான கஜானன் மற்றும் பெரியப்பாவின் மகன்-மனைவி மற்றும் மகள்-கணவர் உட்பட பல உறவினர்கள் பலியானார்கள். இத்தாக்கதலில் நாற்பது பேர்வரை இறந்தும் ஆறுபதிற்கும் மேற்பட்டவர்கள் வரை காயமடைந்தும் இருந்தார்கள். இந்த எறிகணைத் தாக்குதலின் பின்னர் வேறெந்த வெடிச்சத்தமும் இல்லாமல் ஒரே அமைதியாகக் காணப்பட்டது. எங்கள் மேல் வீசப்பட்ட எறிகணைகள் அனைத்தும் தேவாலயத்திற்கு முன்னாலிருந்த மடு அரச செயலகத்திலிருந்த இராணுவத்தினர் ஏவியதை நான் உட்பட பல மக்கள் கண்டோம். இதிலிருந்து இது ஒரு வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயலாகவே கருதவேண்டியிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் பண்டிவிரிச்சானிலிருந்த ஒரு மதுபானச்சாலையை உடைத்து அங்கிருந்த மதுவை அருந்திய பின்னரே இச்செயலைச் செய்துள்ளனர். இச்சம்பவம் நடைபெற்ற பின்னர் எனது அண்ணாமார், அயலவரின் உதவியுடன் இரவு 1.00 மணியளவில் என்னை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு எடுத்து சென்று இராணுவத்தினரின் வாகனத்தில் ஏற்றி வவுனியா வைத்தியசாலையில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அதன்பின்னர் மயக்கமுற்ற நான் இருபத்தைந்து நாட்களுக்குப் பின்னர்தான் பழையபடி எனது சுயநினைவைப் பெற்றேன்.”
(நன்றி- இணையதளம்)
இனப்படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரம்
01. சூரியகுமார் சுகந்தன் – விவசாயம் 22
02. சூரியகுமார் சுகந்தி – வீட்டுப்பணி 23
03. இந்திரமோகன் தட்சாயினி – மாணவி 13
04. நிக்கலஸ்யூட் யாழினி; – ஆசிரியை 25
05. நவரட்ணம் இராசேஸ்வரி – வீட்டுப்பணி 58
06. கனகரத்தினம் வாரித்தம்பி – கமம் 54
07. காளிதாசன் செல்வகுமாரி – வீ.பணி 22
08. கிரேசு செல்வராஜா – விவசாயம் 39
09. கருணைராசா கபாஸ்கர் – மாணவன் 15
10. கருணைராசா தெய்வானை – வீட்டுப்பணி 49
11. குணவீரசிங்கம் யோகேஸ்வரி – வீ.பணி 22
12. குணவீரசிங்கம் லோகேஸ்வரி – மாணவி 10
13. குணவீரசிங்கம் சுகன்யா – 9
14. குணவீரசிங்கம் சுவேனியா – மாணவி 20
15. தர்மலிங்கம் தர்மநீதன் – மாணவன் 10
16. தர்மலிங்கம் சாந்தகீதன் – குழந்தை 4
17. தம்பாப்பிள்ளை திசவீரசிங்கம் – விவசாயம் 46
18. திசைவீரசிங்கம் மதிராஜ் – குழந்தை 3
19. திசைவீரசிங்கம் அம்பிகாவதி – வீட்டுப்பணி 37
20. முனியாண்டி உதயகுமார் – விவசாயம் 22
21. முனியாண்டி செல்வம் – வீ.பணி 55
22. முத்தையா சிவானந்தம் – கமம் 26
23. ஜெயராம் ஜெயசீலன்; – மாணவன் 18
24. செல்வராசா நிறாஜ் – மாணவன் 9
25. செல்வராசா ரதன் – மாணவன் 12
26. வேலுப்பிள்ளை தர்மலிங்கம் – 44
27. ந்திரமோகன் பபிதரன் – மாணவன் 6
28. சந்திரமோகன் சுஜிதரன் – மாணவன் 9
29. சந்திரமோகன் சுதாகரன் – மாணவன் 9
30. சந்திரசேகரம் பூமணி – வீ.பணி 61
31. சதாசிவம் ஜமுனன் – 21
32. சிவானந்தம் சுகந்தினி – வீ.பணி 22
33. சிறிபாஸ்கரன் மைந்தினி – குழந்தை 3
34. வாரித்தம்பி பவானி – மாணவி 17
35. ஏகாம்பரம் ராமேஸ்வரி – வீ.பணி 52
காயமடைந்தவர்களின் விபரம்
01. சூரியகுமார் செல்வராணி – வீட்டுப்பணி 43
02. இளையதம்பி உருக்குமணி
03. இராமசாமி கேதீஸ்வரன் – 24
04. இராமலிங்கம் இந்திராணி – 17
05. இராமலிங்கம் தனலட்சுமி – 52
06. இரத்தினம் நவரத்தினராசா – 46
07. இரத்தினம் தனேஸ்வரன் – 29
08. இரத்தினம் விஜயலட்சுமி – 17
09. இரத்தினம் ரங்கம்மா – 55
10. ஈஸ்வரி – –
11. உதயசீலன் – –
12. நிஷாந்தன் – –
13. நவரத்தினராசா துஸ்யந்தினி குழந்தை 3
14. நவரத்தினராசா தயாளினி குழந்தை 4
15. நவரத்தினராசா மனோரஞ்சிதம் – 43
16. நவரத்தினராசா அகதீஸ்வரி – 19
17. நவரத்தினராசா சந்திரகாந்தன் மாணவன் 11
18. கஜன் குழந்தை 3
19. கனகரட்ணம் குமுதினி மாணவி 13
20. கந்தசாமி – –
21. கார்த்திக் குமரன் – –
22. கார்த்திக் சத்தியா – –
23. கார்த்திக் சிவபாதமலர் – –
24. கதிரவேலு சூரியகுமார் – –
25. குமாரசாமி கேதீஸ்வரன் கமம் 26
26. கிற்ஸ்ரி ரஞ்சினி வீட்டுப்பணி 37
27. பூபாலசிங்கம் முகிலன் மாணவன் 9
28. பூபாலசிங்கம் முத்துப்பிள்ளை வீட்டுப்பணி 40
29. பாலசுந்தரம் – –
30. பவித்திரா – –
31. பரமேஸ்வரி – –
32. தயாநிதி மாணவி 10
33. தனுசன் – –
34. தர்மலிங்கம் உதயகீதா மாணவி 11
35. தர்மலிங்கம் குமுதகீதன் மாணவன் 6
36. தர்மலிங்கம் கமலாதேவி – 33
37. திருக்குமரன் – –
38. மல்லிகாதேவி – 34
39. அம்பிகா – –
40. அழகன் செல்வம் – 43
41. ஜோன் திவாகரன் மாணவன் 13
42. யோகராசா நாகேந்திரன் – –
43. யோகராசா பகீரதன் – –
44. கோகுலசாரதி – 59
45. கேதீஸ்வரன் டினோசன் குழந்தை 3
46. கேதீஸ்வரன் ஜெயந்திமலர் – 29
47. பெருமாள் ரவி – –
48. மோகன் பஜாணன் மாணவன் 9
49. செல்வன் கஜன் குழந்தை 4
50. செல்லத்துரை சிவராசா கமம் 38
51. செல்லத்துரை ராதாகிருஸ்ணன் – 36
52. சுஜி – –
53. சந்திரசேகரம் அமரசிங்கம் – 35
54. சுகந்தினி – –
55. சத்தியவாணி – –
56. சதானந்தம் – –
57. சறோஜினி – 32
58. சிந்துஜா – –
59. சிவபாதசுந்தரம் கமலநாயகி வீட்டுப்பணி 38
60. சிவமலர் – 28
61. சிவசக்தி – –
62. சிவராசா மல்லிகாதேவி வீட்டுப்பணி 35
63. சிவராசா வரம்சவல்லி மாணவன் 10
64. சிறிபாஸ்கரன் கௌசல்யா – –
65. சிறிபாஸ்கரன் சயந்தா – –
66. சிறிபாஸ்கரன் சங்கீதா – –
67. சிறிபாஸ்கரன் – 29
68. சிறிபாலசுந்தரம் – 50
69. சிறிதரன் – –
70. வள்ளுவன் – –
71. ரவி – –
72. எஸ்.சதானந்தன் மாணவன் 13
73. ஏகாம்பரம் சிவராஜ் – –
74. எப்.உதயசுதா மாணவி 12
(நன்றி- இணையதளம்)
தமிழீழ விடுதலைப் புலிகள் மடுப் பிரதேசத்தை மக்களின் நம்பிக்கையின் பொருட்டு போர் தவிர்ப்பு வலயமாகவும் புனித பிரதேசமாகவும் கையாண்டனர். புலிகளற்ற மடு தேவாலயத்தில் நிராயுத பாணியாக தனித்திருந்த மக்களையே இராணுவத்தின் படுகொலை செய்தனர். ஒருவேளை அங்கு விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் தம் உறவுகள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறினர். போர் தவிர்ப்பு வலயமாக நடைமுறைப்படுத்தி, விடுதலைப் புலிகள் தமது நடமாட்டத்தை தவிர்த்த தேவாலயப் பகுதியை கைப்பற்றிய இராணுவத்தினர் பெரும் இராணுவ வெற்றியாக அதை சித்திரித்தனர்.
அத்துடன் மடு தேவாலய கைப்பற்றல் வெற்றியை நினைவுபடுத்தும் முகமாக மடு தேவலாயப் படத்தை பின்னணியாக கொண்ட தன்னுடைய புகைப்படங்களை அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தலில் பயன்படுத்தினார். மடு தேவாலயம் சிங்களவர்களாலும் வணங்கப்படும் தலம் என்பதால் அதனை ஒரு போர் வெற்றியாக காட்டி சிங்கள மக்களை கவர்ந்து போர் வெற்றி சூடிய அரசியாக தன்னை அடையாளப்படுத்த முயன்றார் சந்திரிக்கா. தமிழ் மக்களை இனப் படுகொலை செய்து அந்த இடத்தை கைப்பற்றும் அவ் இராணுவ நடவடிக்கையின் மூலம் இருநாட்டுப் போர் மனநிலையில் அவர் இருந்தார்.
தாமும் வணங்கும் தேவாலயத்தில் வைத்தும் எம்மை இனக்கொலை செய்தனர். மடு மாதா பார்த்துக் கொண்டிருக்கவே எம் மக்களை அவர்கள் படுகொலை செய்தனர். மடு மாதாவின் முகத்தில் எங்கள் சனங்களின் குருதி பட்டுத் தெரித்தது. மாதாவின் சந்நிதானம் மனித சதைப் பிண்டங்களால் நிறைந்து கிடந்தது. மடு மாதாவே இந்த இனப்படுகொலையின் சாட்சி. எங்கள் மக்களை இன அழிப்பு வெறியோடு கொன்று வீசிய இலங்கை அரச படைகளின் அராஜகச் செயலுக்கு எங்கள் மாதாவே வரலாற்றுச் சாட்சியாக இருக்கிறார்.
400க்கு மேற்பட்ட வருடங்கள் பழமை கொண்ட மடு மாதா ஆலயம் மத ஒடுக்குமுறைகளின் தஞ்சமடைந்த கிறீஸ்தவ மக்களின் அடையாளம் ஆகும். வன்முறையை வெறுக்கும் குருதி சிந்துதலை எதிர்க்கும் இந்த ஆலயத்தில் தமிழர்கள் குருதி சிந்த வைக்கப்பட்டனர். இந்த ஆலயத்தின்மீது வன்முறை மேற்கொள்ளப்பட்டது. உலகறியப்பட்ட இந்த ஆலயத்தின்மீது தாக்குதலை நடாத்தி தமிழ் மக்களை கொலை செய்து அவர்களின் குருதியால் ஆலயம் நனைவதைக் குறித்து அன்றைய அரசு வருத்தமோ, அச்சமோ அடையவில்லை என்றால் அது மனித உரிமைகள்மீதும் மனித குலத்தின்மீது எத்தகையை பார்வையை கொண்டிருக்கிறது என்பது புரியும்.
இலங்கை அரச படைகள் தெய்வங்களையும் படுகொலை செய்பவர்கள். ஆலயங்களையும் அழிப்பவர்கள். வைச, கிறீஸ்தவ, இஸ்லாமிய ஆலயங்களை அழிப்பதும் அங்கு தஞ்சமடைந்த மக்களை கொன்றழிப்பதும் வடகிழக்கில் பல இடங்களில் நடந்தேறிய சம்பவம். நவாலி தேவாலயம், புதின பேதுருவானவர் ஆலயம் முதலியவற்றில் இனப்படுஅகொலைகளை அரங்கேற்றிய இலங்கை அரச படைகள் சிங்கள மக்களாலும் வணங்கப்படுகின்றன மடுதேவாலயத்திலும் வைத்து தமிழ் மக்களை இனப்படுகொலை செய்துள்ளனர்.
எங்கும் எப்படியும் ஈழத் தமிழ் மக்களை கொலை செய்யும் இலங்கை அரசின், அதன் படைகளின் மரபணுவில் உறைந்த இனப்படுகொலை வெறி களையப்படவேண்டியவை. வரலாற்று ரீதியாக மன்னிப்புக் கோரவும் நீதியை வழங்கவும் வேண்டியவை. இதுவே ஈழத் தமிழர்களின் பாதுாப்பாற்கும் மனித குலத்திற்கும் உலக ஒழுக்கத்திற்கும் அவசியமானது. இவையாவற்றையும் போர் வெற்றியாக மூடி மறைக்கும் அரச மனோபாவமானது இன அழிப்பு சார்ந்த நோயை குருதியில் வைத்தபடி அதனைப் புதுப்பிக்க மறுக்கும் போக்காகும்.
#TamilGenocide
#ஈழத்தின்குரல்
புனிதர் ஆக்கப்படவுள்ள கவிஞர் உருத்திரமூர்த்தியின் மகன் சேரன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் பற்றியும் மக்களாட்சி குறித்தும் இந்தக் காணொளியில் முன்வைத்துள்ள கருத்துகள் கடும் விமர்சனத்திற்குரியவை.
🔴காணொளியில் சேரன் கூறுகிறார்👇
🔺விடுதலைப் புலிகள் அமைப்பு சுதந்திரத்திற்காகப் போராடுவதாக நாம் கருதவில்லை.
🔺மாற்றுக் கருத்துகளைச் சகித்துக்கொள்வது அவர்களுக்கு மிகக் கடினமான ஒன்றாகவும் அதுவே அவர்களின் இயல்பின் முக்கிய அம்சமாகவும் உள்ளது.
🔺அமைப்பிற்குள் கேள்வி கேட்பவர்கள் கொல்லப்படுகிறார்கள் அல்லது அமைப்பை விட்டு வெளியேறி அரசியலில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
🔺அமைப்பிற்கு வெளியே இருந்து கேள்வி கேட்பவர்கள் இரக்கமின்றி ஒடுக்கப்படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள்.
🔺வரலாற்றில் இதுபோன்ற அமைப்புகள் ஆட்சிக்கு வந்த பிறகு உண்மையான மக்களாட்சியைச் செயல்படுத்தியதற்கான எந்தவொரு முன்னுதாரணமும் இல்லை.”
🔴சேரன் என்ற பாலியல் குற்றவாளி விடுதலைப் போராட்டம் குறித்து முன்வைத்த கடுமையான விமர்சனங்களைக் கடந்து அவர் எப்படித் தமிழ்த்தேசியப் பரப்புக்குள் பதுங்கினார் என்பதை அடுத்த பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
#ஈழத்தின்குரல்
ஈழம் Lens retweeted
🇨🇦 Tamil Canadians, it’s time to turn our voices into action!
Imagine if Tamil Canadians united to launch a Canadian parliamentary e-petition calling on the Government of Canada to take Sri Lanka to the International Court of Justice (ICJ) over the Tamil Genocide.
Why wait for others to act when we can organise, mobilise and make our voices heard?
Let’s turn our demand for justice into a concrete political action. Our people deserve justice, accountability and recognition.
Unity is our strength. Justice is our mission.
#TamilCanadians #JusticeForEelamTamils #TamilGenocide #Canada #ICJ


































