Premkumar Kandasamy (@prem_rohit) header
Premkumar Kandasamy (@prem_rohit) profile picture

Dravidian Stock⚫🔴 True & Proud DMK party cadre | Loves #Family👨‍👩‍👧#Friends🤝#Football⚽ Gleaming With My Simba & Chittu #atheist #solutionist #socialjustice

Coimbatore
Joined January 2011
Photo by Premkumar Kandasamy (@prem_rohit)Photo by Premkumar Kandasamy (@prem_rohit)Photo by Premkumar Kandasamy (@prem_rohit)Photo by Premkumar Kandasamy (@prem_rohit)Photo by Premkumar Kandasamy (@prem_rohit)Photo by Premkumar Kandasamy (@prem_rohit)Photo by Premkumar Kandasamy (@prem_rohit)Photo by Premkumar Kandasamy (@prem_rohit)Photo by Premkumar Kandasamy (@prem_rohit)Photo by Premkumar Kandasamy (@prem_rohit)
Premkumar Kandasamy retweeted
நான் பொது வாழ்வில் இருக்கிறேன் என்ற ஒரே காரணத்திற்க்காக என்னை பற்றி ஆபாசமாகப் பேசுவதும், என்னை இழிவாக தொடர்ந்து பேசுவதும் தான் த.வெ.க அரசின் கொள்கையா? ஏன் பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட கூடாதா? மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, த.வெ.க virtual warriors என்று சொல்லிக்கொண்டு, Virtual abusers உருவாக்குவது நியாயமா? என்மீது, தொடுக்கப்பட்ட அத்தனை, ஆபாச, கேலி இழி செயலுக்கும் தலைமை காவல் நிலையத்தில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லையே ஏன்? கொள்கை ரீதியாக எதிர்காமல் இப்படி ஆபாச ரீதியாக பெண்களை சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்? த.வெ.க வை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் தான் மாண்பு உள்ளதா? இல்லை மற்ற பெண்களுக்கு மாண்பு இருக்க கூடாது என்பது தான் த.வெ.கா. அரசின் நிலைபாடா?
665
1,428
195
3,321
300,569
Premkumar Kandasamy retweeted
The scenes unfolding in Delhi today, and the scale of repression being unleashed against peaceful protesters, bring back painful memories of the Emergency that I lived through. All political leaders, students and young protesters detained in Delhi and across the country must be released immediately. I strongly condemn the TVK Government in Tamil Nadu for acting as an extension of the BJP and unleashing police repression against protesting students. The Union Government must immediately end its assault on the youth who are peacefully exercising their democratic right to protest. Dissent is not a crime, and democracy cannot survive by silencing those who rise to defend it. The resignation of Chief Election Commissioner Gyanesh Kumar is non-negotiable. Beyond his resignation, all the damage done to the institutional framework of the Election Commission must be undone, and its independence and integrity restored. @abhijeet_dipke @cockroachisback @nehaaisa @aishe_ghosh @dhruv_rathee
527
4,497
140
17,489
432,139
Premkumar Kandasamy retweeted
துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது! நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு தொகுதியிலும் மிகக்கடுமையாகத் தேர்தல் பணியாற்றிய தொண்டர்கள், முன்னணியினர், உடன்பிறப்புகள், கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்றத் தேர்தல் முடிந்த ஐந்தே மாதத்தில் திணிக்கப்பட்டதுதான் இந்த இடைத்தேர்தல். வாக்களித்த மை அழிவதற்கு முன்னால் மக்களின் விருப்பத்தை அழித்துவிட்டு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை விட்டு விலகி, அடுத்த நிமிடமே ஆளும் கட்சியில் சேர்ந்தார்கள். அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை நடந்தது. அதனால்தான் இந்த இடைத்தேர்தல் நடந்தது. பதவி விலகிய இருவரையே வேட்பாளர்களாக அறிவித்து, தேர்தலைச் சந்தித்தது ஆளும்கட்சி. அதிகார பலம், ஆட்சி பலம், பணபலம், போலீஸ் பலம் ஆகியவற்றைப் பக்கபலமாக வைத்து த.வெ.க. இந்தத் தேர்தலை எதிர்கொண்டது. சினிமா கவர்ச்சி பலத்தை மட்டுமே நம்பி அரசியல் களத்தில் குதித்து - பெரும்பான்மை பலம் இல்லாவிட்டாலும் குதிரை பேரங்களின் மூலமாக முதலமைச்சர் ஆகியுள்ள விஜய், இந்த இடைத்தேர்தலிலும் ரீல்ஸ் காட்சிகளே கைகொடுக்கும் என்று நம்பினார். டீ குடித்தார், டிராக்டர் ஓட்டினார், முருங்கைக்காய் பறித்தார், தெருத்தெருவாகப் போனார். எந்தவொரு இடைத்தேர்தலுக்கும், ஒரு முதலமைச்சர் பதவியில் இருப்பவர் இப்படித் தெருத்தெருவாகப் போனது இல்லை. இந்த இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றால்தான் தனக்கு இனி அரசியல் வாழ்க்கை என்ற முடிவோடு செயல்பட்டார். நான்கு நாட்கள் இரண்டு தொகுதியிலும் இருந்துள்ளார் முதலமைச்சர். வெளியூரில் இருந்து இறக்கிவிடப்பட்ட ஆட்கள், அவர் போகும் சாலைகள் அனைத்தும் வைக்கப்பட்ட பேரிகேட், கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள், அமைச்சர்களுக்கு மட்டும் எவ்வளவு செலவு செய்துள்ளேன் என்று ஆளும்கட்சி வேட்பாளரே அளித்த வாக்குமூலங்கள் இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது இந்த வெற்றியை அடைய த.வெ.க. எவ்வளவு பதற்றத்தில் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள். கட்சி, தேர்தல், மக்கள் பணிகள் என்றால் என்னவென்று முதலமைச்சர் விஜய் இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண விரிவாக்கம், தாய்மாமன் தங்கமோதிரம், அண்ணன் சீர் போன்ற திட்டங்களை அவர் அறிவித்தார். இதுவே தேர்தல் நடத்தை விதிகளை மீறியதுதான். இப்படி பல்வேறு விதிமீறல்களைச் செய்தே இந்த முடிவை த.வெ.க. பெற்றுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் துரோகத்துக்கு இடைக்கால வெற்றி கிடைத்துள்ளது. அதே நேரத்தில் பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது! ஜி.பே.யில் பணம் - பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். ஊரையே விலை பேசினார்கள் என்பதை இந்த ஆட்சியை ஆதரிக்கும் கட்சிகளே ஒப்புக்கொண்டு பேட்டி கொடுத்த காட்சிகளையும் நாம் பார்த்தோம். தேர்தலுக்கு முந்தைய இரவு வெளியான வீடியோவில் கோடிகளைக் கொட்டிச் செலவிட்டதை வேட்பாளரே ஒப்புக்கொள்ளும் காட்சிகளையும் பார்த்தோம். தூய சக்தியின் வேடத்தை இது அம்பலப்படுத்தியது. திரைமறைவில், இன்னும் சில கட்சிகளின் வாக்குகளை வாங்கப் பொய்ச்செய்தியைப் பரப்பினார்கள். ஒட்டுமொத்த அமைச்சரவையும் இரு தொகுதிகளுக்குள் மூன்று வார காலம் முடங்கியது. துரோகம் செய்த வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் காவல்துறையினரைக் கொண்டு மிரட்டப்பட்டார்கள். 17 வயது இளைஞரைக் கூட கைது செய்தார்கள். 'ஆளும்கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் தொகுதிக்கு எதையும் செய்யமாட்டோம்' என பிளாக்மெயில் செய்து வாக்கு வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அரசு ஊழியர்களையும் வாக்குப்பதிவின்போது மிரட்டி ஆதரவாகப் பணியாற்ற வைத்தார்கள். 'சூரியனுக்கு வாக்களிக்கச் சொன்னால் விசிலுக்கு அழுத்தச் சொன்னார்கள்' என்று ஒரு மூதாட்டி வெளிப்படையாகப் பேட்டியே அளித்தார். இப்படி, தன் அதிகார பலம் முழுவதையும் இடைத்தேர்தலுக்காகத் தவறாகப் பயன்படுத்தியது த.வெ.க. அரசு. 5 நிமிடப் பேச்சிலேயே அனைத்தையும் விஜய் மாற்றிவிடுவார் எனக் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம் நான்கே மாதங்களில் கிழிந்து தொங்கிவிட்டது. ஆட்சிக்கு வந்த இத்தனை குறுகிய காலத்தில் இப்படி ஒரு சரிவு எந்த முதலமைச்சருக்கும் இதுவரை ஏற்பட்டதில்லை. கல்லாப்பெட்டிக் கூட்டணிக் கட்சிகள் என விமர்சித்த கட்சிகளையே, இப்போது தன்னோடு இணைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்த நிலையிலும், அனைத்தையும் மீறி, ‘எப்படியாவது வெற்றி பெற்றால் போதும்’ என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளும் வகையில்தான் இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. என்ன செய்தும், தி.மு.க. மீதான மக்களின் நம்பிக்கையை எதுவும் செய்ய முடியவில்லை. தி.மு.க.வை மட்டுமே குறிவைத்துப் பேசினார் முதலமைச்சர். ஆனால், தி.மு.க.வின் செல்வாக்கை அவரால் அசைக்க முடியவில்லை. இதில் மிகவும் முக்கியமானது, துர்நாற்றமெடுக்கும் துரோக சக்தியான த.வெ.க.வுக்கு எதிராகக் களம் கண்ட அனைத்துக் கட்சிகள் பெற்ற வாக்குகளும் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் என்பதுதான்! அவைதான் பெரும்பான்மை! இந்த அரசு மீண்டும் பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குதிரை பேரம், எம்.எல்.ஏ. ஷாப்பிங், பழிவாங்கும் நடவடிக்கைகள், அருவருப்பான பேச்சுகள், அசிங்கமான சைகைகள், ரீல்ஸ் எடுப்பதில் மட்டும் கவனம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு இனியாவது மக்கள் பணிகளில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் கொள்கை - இலக்கு என பயணிக்கும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். களத்தில் கடும் போட்டியைக் கொடுத்து, ஆளும்கட்சியினரை அச்சத்தில் அலையவிட்ட கழக உடன்பிறப்புகளுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன். தோளோடு தோள் நின்று உழைத்த அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தோழர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! சினிமா கவர்ச்சியை மூலதனமாகக் கொண்டு, அதன் மூலமாக மக்களை ஏமாற்றி அதிகாரத்துக்கு வந்து கார்ப்பரேட் மாஃபியாக்கள் சிலரின் கைப்பாவையாக ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் விஜய்யின் முகத்திரையைக் கிழிக்கும் பரப்புரைப் பயணத்தை நாம் தினம்தோறும் தொய்வின்றித் தொடர்வோம். தமிழ்நாட்டுக்கு விரோதமான சக்திகளின் பிடியில் அவர் சிக்கி இருக்கிறார். அதை மக்கள் விரைவில் முழுமையாக உணர்வார்கள்.
2,446
3,945
761
11,737
1,461,943
Premkumar Kandasamy retweeted
அன்று வள்ளுவர் கோட்டம் போல, இன்று சென்னை மெட்ரோ 🚇 பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் அக்டோபர் 11 அன்று மக்கள் பயன்பாட்டுக்கு வருவது கண்டு, வயிற்றில் சுமந்த குழந்தை அடியெடுத்து வைப்பதைக் காணும் தாய்போல் மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்கிறேன் நான். 🚇 தான் பார்த்துப் பார்த்து கட்டிய வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவில் தலைவர் கலைஞர் கலந்துகொள்ள முடியாதபோது, “சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம் சலுகையால் பெறக்கூடியது அல்ல! எது நேர்ந்தாலும் என்ன நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம்” என்று சொன்னார். 🚇 சென்னை மெட்ரோவின் உருவாக்கத்தில் கழக அரசின் இடமும் அத்தகையதுதான்! தமிழ்நாட்டின் ஒவ்வொரு உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்தின் வரலாற்றிலும் தி.மு.க.வின் பெயர் என்றும் நிலைபெற்றிருக்கும்! #ChennaiMetro #CMRL @CMRLOfficial #Porur #Poonamalle #Vadapalani #MetroRail #DMK
159
1,508
47
3,444
119,790
Premkumar Kandasamy retweeted
AI இருக்க பயம் ஏன் ?? நாடு செழிக்க AI.. சிறப்பா வேலை செய்றிங்க ப்ரோ இப்போ இப்படி தான் இருக்கு . என்ன பண்ணலாம் ? 🧐
மக்களின் கோரிக்கை உடனே நிறைவேற்றம் VMS முஸ்தபா MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி, MK புரம் பகுதியில் குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசி வந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாகச் சரி செய்யப்பட்டது பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து நமது எம்.எல்.ஏ VMS முஸ்தபா அவர்களின் உடனடி உதவியினாலும் அந்தப் பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. #tvk #TVKVijay‌ #TVKVijay‌HQ #madurai #publicservice
70
1,096
54
2,900
163,213
Premkumar Kandasamy retweeted
நமது #DravidianModel அரசின் சாதனைகள் பற்றி, நேற்று என் நெஞ்சை நெகிழ வைத்த இரு செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 1) worldbank.org/en/news/featur… 2) newindianexpress.com/states/…
120
1,726
38
3,326
89,069
Premkumar Kandasamy retweeted
இது என்னடா அதிசயம் 👀 டம்ளர கவுக்காமலேயே டீ குடிக்கிற வித்த... ஆஸ்கார் கொடுடா டிரம்ப்ப்பே #TVKFails
115
938
56
2,967
215,771
Blast uh..Blast uh... மதுராந்தகம் ரோடுஷோ-வின் போது பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் கட்சி நிர்வாகிகள் தந்த போட்டோக்களை விஜய் புதரில் வீசிச் சென்ற அவலம்.. எல்லாம் போட்டோ ஷூட் தான்.. இதுக்கும் விசிலடித்து கொண்டாடும் தற்குறிகள்... Source : Fb பதிவு
57
1,490
41
3,232
160,980
Premkumar Kandasamy retweeted
சிறுமிகளுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற இழிவான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் எவராயினும், எத்தகைய பொறுப்பில் இருந்தவர்கள் ஆயினும் தப்பிக்க கூடாது. அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. இந்த வழக்கின் முடிவு, இனி இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணமே எவருக்கும் வராத வகையில் அமைய வேண்டும் என்பதுதான் ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவனாகவும், ஒரு குடும்பத்தலைவனாகவும், மனசாட்சி உள்ள மனிதனாகவும் எனது விருப்பம். ஆனால், இந்த வழக்கில் தேவையே இல்லாமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன் தி.மு.கழகத்தின் மீது பொய்யாக அவதூறுகளைப் பரப்பி, ஒரு கூட்டம் குளிர்காய்ந்து வருவது மிகவும் அருவெறுப்பான செயலாகும். வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் கழக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை. பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்பட்டது. இவை அனைத்தும் பொதுவெளியில் இருக்கும், மறுக்க முடியாத உண்மைகள் ஆகும். எவரையும் காப்பாற்ற வேண்டிய தேவை கழக ஆட்சிக்கு இல்லை. தற்போதைய த.வெ.க. ஆட்சியில் நடப்பதுபோல, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது அனைத்துப் பத்திரிகைகளின் முன்பும் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னரும், நடவடிக்கை எடுக்காமல், சமரசம் பேசி வழக்கை முடித்து வைக்கும் இழிசெயல்கள் கழக ஆட்சியில் நடைபெறவில்லை. எனவே, சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத்தேர்தலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் இழிவான செயலையும், முற்றிலும் பொய்யான அவதூறுகளை ஊடகங்கள் மூலமாக பரப்புவதையும் ஆளும்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி பெற்றுத் தருவது மட்டுமே நம் அனைவரின் நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
1,223
2,601
404
5,938
831,834
Premkumar Kandasamy retweeted
வீரமணி தப்பியதற்கு காரணம் : Party fund இல்லையாம் ❌ Family friend ஆம் ✅ அட இந்த உண்மை இன்னைக்குன்னு பாத்தா வெளிய வரணும் ? நான் வேற மனப்பாடம் செஞ்சி முடிச்சுட்டேனேடா பாவிங்களா !
261
1,697
50
4,041
179,761
Premkumar Kandasamy retweeted
சிங்கப்பெண் படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன் - அரணா இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே? சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளி மாணவியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்கள் பாதுகாப்பில் No compromise என்று சொல்லிக்கொள்ளும் Dummy முதலமைச்சரின் Circus ஆட்சியில், அரசுப்பள்ளி வளாகத்திலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடு. மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் வருகிறார் என்று சொல்லி, இந்த சம்பவத்தை காவல்துறையும் - அதிகாரிகளும் மூடி மறைக்க முயற்சி செய்வதும் - பாம்புக்கடி என்று மடைமாற்றுவதும், தமிழ்நாடு எவ்வளவு மோசமானவர்கள் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க வக்கின்றி பாதிக்கப்பட்ட பெற்றோரின் செல்போன்களை கைப்பற்றி இந்த சம்பவம் குறித்து பொது வெளியில் பேசக்கூடாது என்று போலீஸ் தரப்பில் மிரட்டல் விடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த Reels ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கு, குற்றவாளிகளுக்கு கூடுதல் தைரியத்தை அளிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் சித்திரவதை செய்வது போல் இருக்கிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு அவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப்பள்ளி உட்பட அனைத்துப்பள்ளி வளாகங்களிலும் பிள்ளைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இடைத்தேர்தல் வருகிறது என்று இந்த கொடுமையை மூடி மறைக்க முயற்சித்தால், மக்கள் இந்த ஆட்சியாளர்கள் முகத்தில் கரியை பூசுவது உறுதி.
569
2,569
122
5,216
361,216
Premkumar Kandasamy retweeted
🚨List of project halted/status unknown after new TVK Govt took over : 1. Parandur Airport - Halted 2. Metro extension to Parandur - Halted 3. Sports City - Halted 4. ECR Flyover - Halted 5. Guindy-Velachery flyover - Halted 6. Coimbatore Periyar Library- Ready but no sign of inauguration 7. Hosur Tidel Park - Design ready, Environment Clearance filed. Stuck at tender stage 8. Hosur Knowledge Corridor- No work started 9. Coimbatore Cricket Stadium - No Bidders 10. Last Stretch of Chennai Peripheral Ring Road Many of these have undergone DPR, Feasibility Studies and tendering for 1+ years and few like Parandur for 7-8 years. Cancellation one after the another. Frustrating....🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
148
539
52
2,212
138,806
வெற்றி மின்வெட்டு!
822
2,885
250
9,496
476,975
ஜோஸ் அலுக்காஸ் CEO, நடிகர் விஜயை சந்தித்தது ஞாபகத்தில் இருக்கலாம், சந்திப்பு நடந்த இரண்டாவது நாள் இத்திட்ட அறிவிப்பு வந்தது. இப்போது ஒரு பைசாவுக்கு அந்த குடும்பமே டென்டர் எடுக்கிறது. ஜோஸ் அலுக்காஸ் விளம்பரங்களில் நடித்து, brand ambassador ஆகவும் விஜய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹட்சன் ஆக்ரோ சேர்மன் RG சந்திரமோகன், விஜயை சந்தித்த இரண்டாவது நாள் ஆரோக்யா பால் விலையேற்றப்படுகிறது. ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது. 'லஞ்சம் ஒழிந்தது. இனி அரசு பஸ் விலைக்கே டிக்கெட் தருவோம்' என தனியார் பஸ் ஓனர்களை மீடியாவிற்கு பேட்டியளிக்க வைத்தனர். இன்று, தனியார் பஸ்களில் அரசின் அனுமதியின்றி சத்தமில்லாமல் டிக்கெட் விலையேற்றி விட்டனர். விஷயத்தை மடைமாற்றி சரிகட்டுவற்காக, போக்குவரத்துத்துறை அமைச்சர் அரசு பேருந்தில் பாெதுமக்களை எவ்வாறு கனிவோடு கவனிக்க வேண்டுமென ஓட்டுனர் நடந்துனருக்கு பேருந்தில் வகுப்பெடுக்கும் ரீல்ஸ் பதிவிட்டு ஒப்பேற்றுகின்றனர். எம்எல்ஏக்களுக்கு கார் கேட்ட மறுதினமே, டென்டர் ஏதும் விடாமல் மஹிந்த்ரா கார்கள் மட்டும் சட்டமன்றத்தில் வந்து நிற்கின்றன. M&M ஆட்டோமொபைல் பிரசிடென்ட் வேலுச்சாமி விஜயை பதவியேற்ற பின் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல்வர் அறையை 5½ கோடி மதிப்பில் புதிதுபடுத்த டென்டர் விடும் முன்பே, வேலைகள் தொடங்கி பாதிமுடிந்துவிட்டன. அரை மணி நேர டென்டரிலிருந்து அரை நாள் டென்டரெல்லாம் வரலாறு காணாத வகையில் இந்த நூறு நாட்களில் நடந்தேறி விட்டன. ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களது பராக்கிரமத்தை பாரீர்.. - கவியரசன் திருஞானம்
28
559
9
1,075
23,151
Premkumar Kandasamy retweeted
சூட்டிங் ரோடு கதையும் Flop ! கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி பகுதிக்கு சூட்டிங் சென்ற போது பார்த்த சாலை இல்லாத கிராமத்துக்கு ஆட்சிக்கு வந்த உடனே சாலை போட நிதி ஒதுக்கியதாக அமைச்சர் ஆனந்த் பேசி இருந்தார். இதற்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி, நீங்கள் சொல்வது தாண்டிக்குடி பஞ்சாயத்தில் உள்ள கூடல்நகர் கிராமம். அங்கு ஒப்பந்ததாரர் இறந்து விட்டார். அதனால், மறுடெண்டர் விடப்பட்டு பணி தொடங்கியுள்ளது. தி.மு.க ஆட்சியில் தான் நிதி ஒதுக்கப்பட்டது என்று கூறியுள்ளார். கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் தாண்டிக்குடியின் கூடல் நகர் கிராமத்தில் 3.82 கோடி மதிப்பீட்டில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதியதாக சாலை அமைப்பதற்கு பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார் அடிக்கல் நாட்டி இருந்தார்.
79
670
20
1,653
138,673
Premkumar Kandasamy retweeted
குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்று சேராமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்காத காரணத்தால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது - விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் பேசி இருந்தேன். வறட்சி நிவாரணம் பற்றிக் கேட்டதற்கு, குறுவை சிறப்புத்தொகுப்புக்காக நிதி ஒதுக்கியதைப் பற்றி முதலமைச்சர் விளக்கினார். ஆனால், அவர் ஒதுக்கியதாக சொன்ன அந்த நிதியும் இன்று வரை விவசாயிகளைச் சென்றடையவில்லை. இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த Inefficient அரசு கவனித்ததா? அல்லது வழக்கம்போல விவசாயிகள் பிரச்சினையில் அலட்சியம் காட்டுகிறதா? எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும். விவசாயிகள் நலனில் அக்கறையின்றி தொடர்ந்து மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல. குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
193
1,310
16
2,904
111,949
Premkumar Kandasamy retweeted
இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387! 101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், விமானத்தில் அமர்ந்துகொண்டு எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், சாலைக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும் சென்னையில் எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள் இருக்கும்; தி.மு.க.வின் சாதனைகள் மட்டும்தான் இருக்கும்! மேம்பாலங்கள், கோட்டங்கள், பூங்காக்கள், நவீன பேருந்து முனையங்கள், மெட்ரோ இரயில், IT Park, FinTech Tower, வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனை - நூலகக் கட்டடங்கள் எனக் கடந்த 60 ஆண்டுகாலச் சென்னை வரலாற்றை இரசித்து இரசித்துச் செதுக்கியவர்கள் நாங்கள். சட்டமன்ற உறுப்பினராக, மாநகரத் தந்தையாக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என அத்தனை நிலைகளிலும் சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்! தருமமிகு அன்புமிகு சென்னை வாழ்க! #ChennaiDay #MadrasDay
154
1,835
46
4,819
124,837
Premkumar Kandasamy retweeted
Paaaah! Enna ivlo open ah pesitaru @Udhaystalin 🔥🤯 #DMK
103
1,456
27
7,382
285,504
Premkumar Kandasamy retweeted
'பனை மேம்பாட்டு இயக்கம்' என திமுக ஆட்சியில் செயல்படுத்தி வந்த திட்டத்திற்கு 'பனை பாதுகாப்பு இயக்கம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. உண்மையா புரியல இவ்வளவு நுணுக்கமான Insecurity எதுக்கு? இதுல யார் பெயரும் கூட இல்ல. இத மாத்தி என்ன பண்ணப்போறிங்க? நீங்க என்ன மாற்று? பெயர் மாற்று அரசு
58
438
12
1,186
102,117
தொடாதீங்கடா, தொட்டா கெட்டீங்கனு சொன்ன எவன்டா கேட்டீங்க...
660
1,076
161
5,326
1,067,884