KOLAPPAN (@skthandesh) header
KOLAPPAN (@skthandesh) profile picture

M-a-s-t-e-r-in-g Law ⚖️ தமிழ்//சட்டம்//பிரமிள்//மார்க்ஸ்//திமுக// Climate-change enthusiast.

CHENNAI
Joined April 2012
Photo by KOLAPPAN (@skthandesh)Photo by KOLAPPAN (@skthandesh)Photo by KOLAPPAN (@skthandesh)Photo by KOLAPPAN (@skthandesh)Photo by KOLAPPAN (@skthandesh)Photo by KOLAPPAN (@skthandesh)Photo by KOLAPPAN (@skthandesh)Photo by KOLAPPAN (@skthandesh)Photo by KOLAPPAN (@skthandesh)Photo by KOLAPPAN (@skthandesh)
🔸காவல்துறை அதிகாரி உள்பட ஒரே நாளில் 15 கொலைகள்! 🔸பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சர் ‘சைலண்ட் மோடில்’ இருக்கிறார்! 🔸அமைச்சரோ கொலைகள் நடப்பது ‘சகஜம்’ என்கிறார்! 🔸தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்குலைந்துகிடக்கிறது! தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு சொல்லும் தரத்திலில்லை. கொலைச் செய்திகள் அன்றாடம் வருவதும், தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பதும் அன்றாடச் செய்திகளின் ஒரு பகுதியாகிவிட்டது. வெளியில் செல்லும் மக்கள் வீடு திரும்பினால் தான் வாழ்க்கை உறுதி என்னும் கொடுஞ் சூழலுக்குள் தமிழ்நாடு சிக்கித் தவிக்கிறது. 🔸ஒரே நாளில் 15 கொலைகளா? கடந்த இரு நாட்களுக்கு முன்னால் தீபாவளி அன்று மட்டும் 15 கொலைகள் தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கின்றன. தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டியில் செந்தில்குமார் (57); திருச்சி மாவட்டம், இனாம் சமயபுரத்தில் விஷால் (17), ராகுல் (17), புறத்தாக்குடியில் கிறிஸ்டோபர் (20); பெரம்பலூர் மாவட்டம், நொச்சியத்தில் ரவி (50); கடலூர் மாவட்டம், பெரியகாட்டுப்பாளையத்தில் பிருத்விராஜன் (26); கள்ளக்குறிச்சி மாவட்டம், நின்னையூரில் பாலசுப்பிரமணியன் (70); சென்னை மாவட்டம், வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் தனுஷ் (19), திருவொற்றியூரில் பவித்திரன் (32); காஞ்சிபுரம் மாவட்டம், திருக்காலிமேடு நேதாஜி நகரில் பார்த்திபன் (32); சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தெற்குத் தெருவில் தங்கச்சாமி என்ற நவீன் (26), மானாமதுரை அருகே வேலூர் முருகபாஞ்சானில் விக்னேஷ் (24); திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பாண்டியன் நகரில் சுவேதா (26); விருதுநகர் மாவட்டம், வடக்குப்பட்டியில் அன்புச்செல்வம் (25); திருவள்ளூர் மாவட்டம், சென்றான்பாளையம் அருகே மேகலா (24) உள்பட 15 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை என்னும் நிலை அசாதாரணமானது. தேனியில் கொல்லப்பட்ட செந்தில்குமார், காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவர். நடுச் சாலையில் பட்டாசு வெடித்து அட்டூழியம் செய்து கொண்டிருந்த போதையாளர்களைத் தடுக்கச் சென்றபோது கொலை செய்யப்பட்டுள்ளார். 🔸காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை! இதேபோல, தாழையூத்து காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்த இளைஞர்களைத் தடுத்த காவலர்கள் மீது தாக்குதல், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களைத் தடுக்கச் சென்ற காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், காவலர் ஆகிய மூவர் மீது தாக்குதல், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் நள்ளிரவில் மது அருந்தி கலாட்டாவில் ஈடுபட்டவர்களைத் தட்டிக்கேட்ட தளவாய் காவல்நிலையக் காவலர், ஊர்க்காவல் படை வீரர் உள்ளிட்டோர் மீது தாக்குதல் - இதில் ஊர்க்காவல் படை வீரர் உயிரிழப்பு. மக்கள் பாதுகாப்புக்காக உழைக்கும் காவல்துறையினரின் உயிருக்கே பாதுகாப்பில்லை என்னும் செய்தி, வன்முறையில், அட்டூழியங்களில் ஈடுபடுவோருக்கு இன்னும் தைரியம் அளிக்காதா? இதன் விளைவு என்னவாகும்? காவல்துறையினருக்கு ‘நமக்கேன் வம்பு – நம்மைக் காப்பாற்றிக் கொள்வோம்’ என்ற எண்ணம் வந்தால், அதன் விளைவு? கடமை உணர்ச்சியே பட்டுப் போகுமே! 🔸காவல்துறையினராலும் பாதுகாப்பில்லை! இது ஒரு புறம் என்றால், இன்னொருபுறம், காவல்துறையினரால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகும் நிகழ்வுகளின் பட்டியலும் செய்திகளில் வருகிறது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி திருக்காணாப்பட்டியில் உள்ள டாஸ்மாக் பாருக்கு எதிராக ராஜ்குமார் என்ற இளைஞர் மற்றும் சில அமைப்புகளுடன் இணைந்து போராட்டம் நடத்தியதால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர், அந்த இளைஞரை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளனர், அதற்குக் காவல்துறை உடந்தையாக இருந்தது சிசிடிவி காணொலி மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 🔸சட்டப்பேரவை துணைத் தலைவரின் அநாகரிகச் செயல்! தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவிசங்கரைச் சந்தித்து, தனது பகுதி அடிப்படை வசதிகள் குறித்துப் புகாரளிக்கச் சென்றவரைத் சட்டப்பேரவை துணைத் தலைவரே தாக்கிய காணொலி வெளிவந்ததும், தாக்கப்பட்டவர் அதற்கு மறுப்பு தெரிவிப்பதாக ஒரு காணொலி வெளியிடப்பட்டது. ஆனால், அது காவலர்களும் சட்டப்பேரவை துணைத் தலைவரும் தன்னை மிரட்டி எடுத்த காணொலி என்று அடுத்து அவர் வெளிப்படுத்திவிட்டார். வெட்கமாக இல்லையா? சென்னையில் புயலில் சிக்கி மீனவர்கள் இறப்பதற்குக் காரணம் யார் என்று கேள்வி எழுப்பியவரைக் காவல் அலுவலர் மிரட்டும் காணொலி வெளிவருகிறது. 🔸சீரழிந்து கிடக்கும் இளைய தலைமுறை கேட்கும் செய்திகளில், கொடுமையினும் கொடுமையாகக் கொலை செய்யப்பட்டோர், கொலை செய்தோர், வன்முறையில் ஈடுபட்டோரில் பெரும்பாலோர் 18 வயது கூட நிரம்பாதவர்கள். அதிகபட்சம் 20 - 25 வயதினர். மதுவும், கஞ்சா - மருந்து போதைகளும், திரைப்படங்கள் தரும் மிதமிஞ்சிய வன்முறை போதையும், கட்டுப்படுத்த ஆளில்லை என்னும் போக்கில் அவர்களை நினைக்க வைத்திருக்கும் அரசும் தானே இதற்குக் காரணம்? இளைய சமுதாயம் இப்படிச் சீரழிந்து போயிருப்பதைக் கண்டு நம் நெஞ்சம் குமுறுகிறது. 🔸பொறுப்பேற்க வேண்டிய முதலமைச்சரின் அமைதி! இத்தகைய கொடுமைகள், சட்டம் – ஒழுங்குச் சீர்கேடுகளைத் தடுக்க வேண்டிய பொறுப்புமிக்க அத் துறையின் அமைச்சரும், முதலமைச்சருமான ஜோசப் விஜய் அவர்கள் இது குறித்து எந்தக் கருத்தும் கூறாமல், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், கண்டும் காணாமல் இருப்பது நியாயமா? பொறுப்பேற்க வேண்டியவர் வாய்திறக்காமல் இருப்பது பொறுப்பற்ற செயல் அல்லவா? எதற்கெடுத்தாலும் தி.மு.க. மீது பழி போட்டு, திசை திருப்புகின்ற பணிகள் சில ஊடகங்களின் உதவியோடு நடத்தப்படுகிறது. ஆட்சி என்பது காட்சி அல்ல என்பதைத் திரும்பத் திரும்ப முதலமைச்சருக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது. பொது மக்கள் உயிரச்சத்தில் இருக்கிறார்கள். 🔸அமைச்சரின் பொறுப்பற்ற பதில் ஊடகங்களுக்குப் பதில் அளிக்கும் அமைச்சர் ஒருவர், ஏதோ தீபாவளி என்றால் பட்டாசு வெடிப்பது இயல்புதான் என்பதைப் போல “தீபாவளி என்றால் சில கொலைகள் நடப்பது வழமைதான்!” என்று அளிக்கும் பதில், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறது. பொறுப்பற்ற, ஆளுமையற்றவர்களின் கைகளில் தமிழ்நாடு சிக்கிக் கொண்டு படாத பாடு படுகிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்த நிலைமை என்ன? இப்போதிருக்கும் நிலைமை என்ன? திடீரென மக்கள் இப்படி மாறிவிட்டார்களா? காவல்துறையும், பாதுகாப்பும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால் சட்டம் – ஒழுங்கும் கட்டுப்பாட்டில் இருந்தது. 🔸மக்களை வாட்டும் அரசு விலைவாசி உயர்வு ஒரு பக்கம் மக்களை வாட்டுகிறது; கொலைவாசி உயர்வு ஒரு பக்கம் மிரட்டுகிறது. ஆட்சி நடத்துவது என்றால் என்னவென்று அறியாதவர்களின் அறியாமை காரணமாகத் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய முதலீடுகள் பறிபோகின்றன. இதுகுறித்தெல்லாம் கவலைப்படாமல், தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளில் இறங்காமல், வேறு வேறு பிரச்சினைகளுக்கு மடைமாற்றிக் கொண்டும், ஊடகங்களுக்குச் செய்தி கொடுத்துக் கொண்டுமே காலத்தை ஓட்டிவிடலாம் என்று கருதுகிறார்களா த.வெ.க. அரசும் அதனை ஆட்டுவிப்போரும்? வாக்களித்த மக்களை என்னவென்று கருதுகிறார்கள்? பிரபலம், மாய்மாலப் பேச்சுகள், தங்களை எப்போதும் பாதிக்கப்பட்டவர்களாகவே காட்டி ‘விக்டிம் கார்டு’ (Victim Card) நாடகமாடும் போக்கு இவற்றால், தமிழ்நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் ஏமாந்து போனதன் விளைவை ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. 🔸ஏமாற்றியே காலந்தள்ள முடியாது! திரைப்படங்களிலும், செல்பேசி ஊடகங்களிலும் மூழ்கடித்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்று இனியும் கருதாதீர்கள். மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்துகொண்டிருந்த தமிழ்நாட்டை, இப்படிப் பார்க்க ஒரு போதும் மக்கள் விரும்பவில்லை. தமிழ்நாடு அரசு இதனை ஓர் எச்சரிக்கைக் காலமாக எடுத்துக் கொண்டு உடனடியாகச் செயலில் இறங்கவேண்டும். தாழ்ந்த தமிழ்நாடு, வீழ்ந்த தமிழ்நாடு ஆகிவிடக் கூடாது! - கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் சென்னை 10.11.2026
28
76
7
171
5,032
Justices G.R. Swaminathan and M.D. Sumathi of #MadrasHighCourt direct Tamil Nadu Government to suspend government officials responsible for procurement of AI generated books for public libraries in the State. Bharathiyar can only turn in his grave, they say and add that they are reminded of his immortal condemnatory phrase நெஞ்சு பொறுக்குதில்லையே
11
99
8
286
13,387
'கமலை காந்தியச் சார்புள்ள, மார்க்சிய அனுதாபம் கொண்ட பெரியாரிஸ்ட் என்று புரிந்துகொள்ளலாமா?' என்றால் 'அப்படி உறுதியாகச் சொல்ல முடியாது' என்பதுதான் பதிலாக இருக்கும். 'அன்பே சிவம்' படத்தில் கம்யூனிச ஆதரவு பேசிய கமல்தான், 'குருதிப்புனல்' படத்தில் நக்சல்பாரி போராளிகளை வெறுமனே வன்முறையாளர்களாகவும் போலீஸ் வீட்டுக் குழந்தைகளிடமும் காமுறும் பெண் பித்தர்களாகவும் காட்டியிருப்பார். உலகம் முழுக்க ராணுவமும் போலீஸும் பாலியல் அத்துமீறல்களை நடத்திக்கொண்டிருக்க, நக்சல்பாரிகள் போலீஸ் குடும்பப் பெண்கள்மீது பாலியல்மீறல்களை நிகழ்த்துபவர்களாகக் காட்டுவது என்ன கருத்தியல் நியாயம்? கமலை ஒரு பார்ப்பனியவாதியாகவோ, இந்துத்துவ ஆதரவாளராகவோ அடையாளப்படுத்திவிட முடியாது. அவர் தன் திரைப்படங்களில் சுயசாதி விமர்சனத்தை முன்வைத்தவர். பெரியாரிய, கம்யூனிச அடையாளத்தால் எந்த வணிகவெற்றியும் கிடைக்காத காலகட்டங்களில் அந்த அடையாளங்களுடன் தன்னைக் காட்ட முயன்றவர். எனவே முரண்பாடுகளுடனே கமல்ஹாசனின் பங்களிப்புகளையும் இணைத்தே மதிப்பிட வேண்டும். puthiyathalaimurai.com/featu…
14
18
2
129
4,671
எளிய பின்னணி கொண்டவர்கள் ஆயிரக்கணக்கான பேருக்கு தீபாவளி பரிசு கொடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளனர்.
42
441
19
1,016
33,135
KOLAPPAN retweeted
#BREAKING | ”புத்தக கொள்முதலில் ஈடுபட்ட அதிகாரிகளின் பட்டியல் நாளை தாக்கல் செய்ய வேண்டும்; முறைகேட்டில் ஈடுபட்டோர் தண்டிக்கப்பட்டால்தான் திருந்துவார்கள்” நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்வது தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் பல உத்தரவுகளை அரசுக்கு பிறப்பித்துள்ளனர் #SunNews | #Books | #Library | #TNGovt | #MadrasHC
11
121
4
372
21,637
So far, TVK in Tamil Nadu has been blaming the DMK for their failures in these six months, and now they start blaming the bureaucracy also. When will they take responsibility and accountability for their actions and inactions? In democracy, the buck stops at political leadership. Tamil Nadu deserves better. Shared my concerns on @ndtv @mkstalin @Udhaystalin @arivalayam
#TheSouthernView with @vasudha156 | Tamil Nadu News | 10 Murders, Rising Questions: Is Tamil Nadu Facing A Law & Order Crisis? On panel: @TVKSathyaKuma, @KBalamuruganPhD and @sumanthraman
1
31
2
110
2,697
😋🤩
மழைக்காலம்.வின்டு ப்ளோ கம்மியாக இருக்கும் இதன் காரணமாக ஏர் குவாலிட்டி டம்ப் ஆகிவிட்டது கார்பன் எமிசனும் காரணம். விழா காலங்கள் முடிந்து நிறைய பேர் உள்ளே வருவதும் காரணமாக இருக்கலாம் வடசென்னை காற்று மாசு அதிகமாக உள்ளது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ராஜீவ் பதில் @Saislakshmanan @SundarrajanG
61
டமார்...! டுமார்...!
15
விபத்து நடந்த அடுத்த நொடியே "ஸ்பாட்டுக்கு" வந்த "ஆம்புலன்ஸ்...!" யாருக்கும் காயம் இல்லாததால் திரும்பிச் சென்றது...! (கட்டைக் குரலில் நியூஸ் சேனலில் வாசிக்கிற அளவிற்கான ஒரு நிகழ்வு...) 😅😂
அந்த பெண் Mind voice 😱 நான் சிவனேனு சும்மா தானடி உக்காந்துட்டு இருந்த 😂😂
30
Mr. Vanchinathan's post Before / After. The G.O. dissolving the High-Level Committee on Union-State Relations reached us on Friday evening, on the eve of Diwali. Today, the first working day after the festival, the Committee's boards were already gone before office hours had even begun. That speed was nowhere to be seen when we repeatedly sought extensions for the Committee's essential staff: the office assistants, the accountant, the translator, research officers. We were kept waiting for more than three months. Removing a signboard takes less than a morning. Work on how much say Tamil Nadu should have over its own affairs deserved at least a fraction of that urgency. #Justicekurianjosephcommittee #StateRights #Federalism in question under #TVKVijay‌HQ
11
35
1,339
போலீசுக்கு பாதுகாப்பளிக்க... விரைவில்... "வெற்றி போலீஸ் பாதுகாப்புப் படை !" மேலதிகத் தகவல்களுக்கு இணைந்திருங்கள்... தற்குறிகளின் அரசாங்கத்தோடு...
சட்டம் ஒழுங்கு லட்சணம் பாருங்க... தளபதி நாளை புதிய அறிவிப்பு .. "வெற்றி போலீஸ் பாதுகாப்பு காவல்படை" அமைப்பாரா ?? வெயிட்டுவோம் ..
24
தமிழ் நாட்டின் மாநில சுயாட்சிக்கு முக்கிய திட்டக் கொள்கைகளை வழங்க வேலை செய்து வந்த நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்டக் குழுவை #TvkGovt கலைத்தது ஏனென்று கேள்வி கேளுங்கள்! சும்மா DNA நோண்டுறது, ஆபாசமா திட்டுறது you guys can't escape by this! TN's State rights is at stake! All media should publish this researcher's questions! மாநில சுயாட்சியை கைவிடத் துணை போகும் தவெக அரசை கேள்வி கேளுங்கள்! அல்லுசில்லுத்தனமா எல்லாரையும் திமுக திமுக கொத்தூஸ்னு தற்குறிகள் காலத்தை ஓட்டினால் நீங்களும் சேர்ந்து ஒட்டு மொத்தமாக பாஜகவால் கொத்து பரோட்டா போடப்பட்டு.. டீக்கடை நடத்தக் கூட வழி இல்லாத நிலைக்கு கூடிய விரைவில் ஆளாவீர்கள். இந்த கேள்விகளை எழுப்பும் இந்த ஆய்வாளர் பாதுகாக்கப்பட வேண்டும். அவர் அரசியல் ரீதியாக எந்த பழிவாங்கலுக்கும் ஆளாகாமல் பாதுகாப்பது நமது கடமை.
5
61
4
157
14,654
KOLAPPAN retweeted
வணக்கம் அன்பர்களே. கோவை பெரியார் அறிவுலகத்திற்கான நூல் கொள்முதலில் நடந்துள்ள முறைகேட்டின் மீது நடவடிக்கை கோரும் இந்தக் கூட்டறிக்கையில் தங்களது பெயரை இணைத்துக்கொள்ள விரும்புவோர், இந்த அறிக்கையை அப்படியே நகலெடுத்து தமது பெயரையும் இணைத்து சமூக ஊடகப்பக்கங்களில் பகிரவும். *** கோவை பெரியார் அறிவுலகத்திற்கான நூல் கொள்முதலில் முறைகேடு - உடனடி நடவடிக்கை கோரி கூட்டறிக்கை – 2026 நவம்பர் 9 சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ள கோவை பெரியார் அறிவுலகத்தில் உண்மைத்தன்மையும், அறிவுப்பெறுமதியும் இல்லாத போலியான பல நூல்கள் இடம் பெற்றிருப்பதற்கு எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்களாகிய நாங்கள் எங்களது கண்டனத்தையும் எதிர்ப்பையும் இந்தக் கூட்டறிக்கையின் வாயிலாக வெளிப்படுத்துகிறோம். சமூகத்தில் அறிவுப்பரவலுக்கான சீரிய வழியென நூலகத்தைக் கருதி 1948ஆம் ஆண்டு பொது நூலகச் சட்டத்தை இயற்றிய, 1972ஆம் ஆண்டு பொது நூலக இயக்ககத்தை உருவாக்கிய முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாடு அரசின் பொது நூலக இயக்ககத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மாவட்ட மைய நூலகங்கள், கினள நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள், நடமாடும் நூலகங்கள், பகுதிநேர நூலகங்கள், சிறப்புப் பகுதிநேர நூலகங்கள் என 4,755 நூலகங்கள் இயங்கிவருகின்றன. இவற்றுக்கான நூல்கள் மற்றும் மின்நூல்கள் கொள்முதல் செய்வதில் குளறுபடிகளோ முறைகேடுகளோ இருக்கக்கூடாது என்று எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் வலியுறுத்திவந்த நிலையில், “வெளிப்படைத் தன்மையான நூல்கள் கொள்முதல் கொள்கை 2024” வெளியிடப்பட்டது. அப்போதிருந்து செயல்முறையிலிருக்கிற இந்தக் கொள்கைக்குட்பட்டே கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட சிறப்பு நூலகங்களுக்கும் புதிதாக உருவாக்கப்பட்ட ஆறு மாவட்டங்களின் மைய நூலகங்களுக்கும் நூல்கள் மற்றும் மின்நூல்கள் கொள்முதல் செய்வதற்கான அரசாணை 2025 நவம்பர் 05 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அரசாணையின்படி, புனைவு மற்றும் பொதுநூல்களைப் பரிந்துரை செய்வதற்காக எழுத்தாளர்கள், விமர்சகர்கள், கல்வியாளர்கள், வாசகர்கள் உள்ளிட்ட 137 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவினரால் பரிந்துரைக்கப்படும் ஆயிரக்கணக்கான நூல்களிலிருந்து கொள்முதலுக்கான பட்டியலை இறுதிப்படுத்துகிறது 13 பேர் கொண்ட தேர்வுக்குழு. தேர்வுக்குழு இறுதிப்படுத்தும் பட்டியலிலுள்ள நூல்களைக் கொள்முதல் செய்வதற்கு அவற்றினை வெளியிட்டுள்ள பதிப்பகத்தாருடன் பேசி விலையை நிர்ணயிக்கிறது 5 பேர்கொண்ட நூல்விலை பேச்சுவார்த்தைக்குழு. இம்மூன்றுக் குழுக்களின் பரிந்துரைகளையும் கூராய்ந்து ஒப்புதல் வழங்குகிறது 5 பேர் கொண்ட உயராய்வுக்குழு. இவ்வளவு சீரான பரிசீலனைகளின் நிறைவிலேயே நூல்கள் கொள்முதல் செய்யப்படுவதாக நாம் நம்பியிருந்த நிலையில், எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் 2026 அக்டோபர் 17 அன்றும், ஓவியர் சுந்தரன் முருகேசன் 2026 அக்டோபர் 24 அன்றும் முகநூலில் எழுதிய பதிவுகளும், எழுத்தாளர் பெருமாள் முருகன் இணைய இதழொன்றில் 2026 நவம்பர் 6 அன்று எழுதிய கட்டுரையும் கோவை பெரியார் அறிவுலகத்தில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒருபகுதி போலியானவை என்கிற அறிவுலகமே அதிர்ந்துபோகிற தகவலை வெளிக்கொணர்ந்துள்ளன. இதன்படி, ‘அகல் விளக்கு’ என்கிற பதிப்பகத்திடமிருந்தும் அந்தப் பதிப்பகத்தின் முகவரியிலேயே இயங்குகின்ற பீனிக்ஸ் பப்ளிகேஷன் என்கிற மற்றொரு பதிப்பகத்திடமிருந்தும் கொள்முதல் செய்யப்படுள்ள 1800 முதல் 2000 நூல்கள் போலியானவை என்று முதற்கட்டமாக கண்டறியப்பட்டுள்ளன. இவ்விரண்டு பதிப்பகங்களும் இணையவெளியில் கொட்டிக்கிடக்கும் பல்துறை சார்ந்த தரவுகளைத் திரட்டி அவற்றை போலியான எழுத்தாளர்களின் பெயரில் தப்பும் தவறுமாக வெளியிட்டுள்ளன. மட்டுமன்றி போலியான இந்நூல்களுக்கு கொடுக்கப்பட்ட விலையோ பொதுவாக இதேயளவு நூல்களுக்கு கொடுக்கப்படுவதை விடவும் பன்மடங்கு அதிகம். போலியான எழுத்தாளர்களை களமிறக்கியுள்ள இந்த முறைகேட்டினால் மெய்யான எழுத்தாளர்களின் ஆய்வாளர்களின் நூல்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளன. மேலும் இது, அவர்களது பங்களிப்புகளை இருட்டடிப்புச் செய்து பொதுவெளியிலிருந்து அவர்களை அகற்றுவதற்கொப்பானதொரு தீங்குமாகும். உண்மையினை கற்றுணர்வதற்கு வாசகர்களுக்கும் போட்டித்தேர்வர்களுக்கும் வருங்கால தலைமுறையினருக்கும் உள்ள உரிமை, இந்தப் போலியான நூல்களில் மலிந்துள்ள பிழையான தகவல்கள் மூலம் பறிக்கப்பட்டுள்ளது. போலியான ஆயிரக்கணக்கான நூல்கள் வாங்கப்பட்டதன் மூலம் பதிப்புத்துறையில் அர்ப்பணிப்புடன் இயங்கிவரும் பதிப்பகங்களும் அவற்றின் ஊழியர்களும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியில், மாநிலத்தின் வேறுபல நூலகங்களிலும் இந்தப் பதிப்பகங்களின் போலி நூல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், இதேபோல வேறுபல பதிப்பகங்களும் இருப்பதாகவும், ஆங்கில நூல்களின் உண்மைத்தன்மையும் சந்தேகத்திற்குரியவையே என்றும் தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் அறிவுச்சேகரமான நூலகங்களைப் பாதுகாக்கவும், நூலகங்களுக்குள் அதற்கிசைவான நூல்கள் மட்டுமே இருப்பதை உறுதிசெய்வதற்கு பொது நூலக இயக்ககமும் தமிழ்நாடு அரசும் முன்வரவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். இதன்பொருட்டு, நூலகத்துறையில் நடைபெற்றுள்ள இந்த முறைகேட்டை வழக்கமான நிதிசார் கையாடல் என்பதாக குறுக்கிவிடாமல் தமிழ்ச்சமூகத்தின் அறிவுச்செயல்பாட்டை முடக்கும் தேசவிரோதச் செயலாக கருதி தண்டிக்க வேண்டும். அதனிமித்தம் இந்த முறைகேட்டை விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள போலியான நூல்களை கோவை பெரியார் அறிவுலகத்திற்குப் பரிந்துரை செய்தவர்கள், தேர்வு செய்தவர்கள், தொகை விடுவித்தவர்கள் பற்றிய விவரங்களை பொதுவெளியில் வெளியிடுவதுடன் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மோசடி செயல்படுத்தப்பட்ட காலக்கட்டம் பற்றிய உண்மைத் தகவலை வெளியிட வேண்டும். போலியான நூல்களை வெளியிட்டு அறிவுலகத்திற்கும் அரசுக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்துள்ள அகல் விளக்கு, பீனிக்ஸ் மற்றும் இதேபோன்று வேறு பதிப்பகங்கள் இருப்பின் அவற்றின் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசிடமிருந்து மோசடியாகப் பெற்றுள்ள தொகை உரிய வகையில் திரும்பப்பெற வேண்டும். இந்தப் பதிப்பகங்களின் போலிநூல்கள் அனைத்தும் கண்டறியப் பட்டு நூலகங்களிலிருந்து அகற்றுவதுடன் அவற்றை மேற்கொண்டு எங்கும் விற்றுவிடாத வகையில் பறிமுதல் செய்யவேண்டும். மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து நூலகங்களையும் குறிப்பிட்ட காலவரம்புக்குள் ஆய்வு செய்து அறிக்கை தரும் வகையில் நடுநிலையான வல்லுனர் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். நூலகத்துறைக்குள் வருங்காலத்தில் எவ்வகையான முறைகேடும் நடைபெறாவண்ணம் தடுப்பதற்குத் தேவையான திருத்தங்களுடன் “வெளிப்படைத்தன்மையான நூல்கள் கொள்முதல் கொள்கை 2024” வலுப்படுத்தப்பட வேண்டும். நூல் பரிந்துரைக்குழுவினர் தாங்கள் பரிந்துரைத்த பட்டியலிலிருந்தே நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளனவா என்பதை மறுவுறுதி செய்துகொள்ள ஏதுவாக இறுதிப்படுத்தப்பட்ட பட்டியல் அவர்களுக்கு அனுப்பப்படவேண்டும். இவண், து.அரிபரந்தாமன், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ்.வி.ராஜதுரை, ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன், ஆய்வாளர் பேரா.லெ.ஜவகர் நேசன், மேனாள் துணைவேந்தர் பேரா வீ.அரசு, ஆய்வாளர் பேரா அருணன், ஆய்வாளர் வண்ணதாசன், எழுத்தாளர் அறிவுமதி, கவிஞர் டிராட்ஸ்கி மருது, ஓவியர் பேரா கா.அ.மணிக்குமார், ஆய்வாளர் முனைவர் து.ரவிக்குமார், எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர் த.வி.வெங்கடேஸ்வரன், அறிவியலாளர் கோலப்பன், பத்திரிகையாளர், தி ஹிந்து நாளிதழ் பொன் தனசேகரன், பத்திரிகையாளர் ஜி.குப்புசாமி, மொழிபெயர்ப்பாளர் நிழல்வண்ணன், மொழிபெயர்ப்பாளர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் ரோஹிணி, திரைக்கலைஞர் சத்யராஜ், திரைக்கலைஞர் பேரா மு.இராமசாமி, நாடகவியலாளர் பிரளயன், நாடகவியலாளர் அ.மங்கை, நாடகவியலாளர் ஞானராஜசேகரன், திரை இயக்குநர் எம்.சிவக்குமார், திரை இயக்குநர் எம்.மணிகண்டன், திரை இயக்குநர் டிஜெ ஞானவேல், திரை இயக்குநர் கமலக்கண்ணன், திரை இயக்குநர் கெளதம்ராஜ், திரை இயக்குநர் தீபக், திரை இயக்குநர் அதியன் ஆதிரை, திரை இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன், ஆவணப்பட இயக்குநர் பேரா.சிவக்குமார், ஆய்வாளர் பேரா. இரா.காமராசு, ஆய்வாளர் கோ.ரகுபதி, ஆய்வாளர் நிருத்யா பி, நடனக்கலைஞர் கோவன், பாடகர் ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் பெருமாள் முருகன், எழுத்தாளர் ச.பாலமுருகன், எழுத்தாளர் க.உதயசங்கர், எழுத்தாளர் குட்டி ரேவதி, எழுத்தாளர் இரா.நடராசன், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், எழுத்தாளர் நா.சுகுமாரன், எழுத்தாளர் சுகிர்தராணி, எழுத்தாளர் என்.ஸ்ரீராம், எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா, எழுத்தாளர் ஈரோடு சர்மிளா, எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன், எழுத்தாளர் அ.வெண்ணிலா, எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ், எழுத்தாளர் பா.மகாலட்சுமி, எழுத்தாளர் நிகழ் அய்க்கண், எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி, எழுத்தாளர் இ.பா. சிந்தன், எழுத்தாளர் கெளதமன், எழுத்தாளர் நக்கீரன், எழுத்தாளர் பா.வெங்கடேசன், எழுத்தாளர் அழகியபெரியவன், எழுத்தாளர் கரிகாலன், எழுத்தாளர் சாம்ராஜ், எழுத்தாளர் அ,உமர் பாரூக், எழுத்தாளர் நீதிமணி, எழுத்தாளர் ம.கண்ணம்மாள், எழுத்தாளர் ம.மணிமாறன், எழுத்தாளர் யாழன் ஆதி, எழுத்தாளர் மு.ஆனந்தன், எழுத்தாளர் ஞா.சத்தீஸ்வரன், எழுத்தாளர் ம.காமுத்துரை, எழுத்தாளர் புலியூர் முருகேசன், எழுத்தாளர் அ.கரீம், எழுத்தாளர் ம.சுசித்ரா, மொழிபெயர்ப்பாளர் வேல்கண்ணன், எழுத்தாளர் முத்துவேல், எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ், எழுத்தாளர் முத்துவேல், எழுத்தாளர் இரா.தனிக்கொடி, பாடலாசிரியர் மீரான் மைதீன், எழுத்தாளர் லக்‌ஷ்மணசாமி ரங்கசாமி (ஒடியன்), எழுத்தாளர் ந.பெரியசாமி, எழுத்தாளர் ஜா.மாதவராஜ், எழுத்தாளர் ராஜசங்கீதன், எழுத்தாளர் நந்தன் கனகராஜ்,எழுத்தாளர் விழியன், எழுத்தாளர் முத்துநாகு, எழுத்தாளர் சக்திசூர்யா, எழுத்தாளர் ராஜுலா ரிஜ்வான், எழுத்தாளர் சித்ரா சிவன், எழுத்தாளர் பா.ஜீவசுந்தரி, ஊடகவியலாளர் ஆ.காமராஜ், ஆசிரியர், மின்னம்பலம் இணைய இதழ் புனிதபாண்டியன், ஆசிரியர், தலித் முரசு முத்தையா, ஆசிரியர், காக்கைச் சிறகினிலே நாகராஜன், பாரதி புத்தகாலயம் நல்லு இரா.லிங்கம், நாற்கரம் பதிப்பகம் ஜீவ கரிகாலன், யாவரும் பதிப்பகம் சிவ செந்தில்நாதன், பரிசல் பதிப்பகம் சுதீர் செந்தில், ஆசிரியர், உயிரெழுத்து மு.ஹரிகிருஷ்ணன், ஆசிரியர், மணல்வீடு சாதிக், அடையாளம் பதிப்பகம் வாசுகி பாஸ்கர், ஆசிரியர், நீலம் இதழ் த.நீதிராஜன், முதன்மை ஆசிரியர், சவுத் விஷன் புக்ஸ் விஜயானந்த் சுப்புராஜ், பயணி வெளியீட்டகம் ஸ்ரீரசா, காலம் வெளியீடு அற்புதராஜ், எழுத்தாளர் கரன்கார்க்கி, எழுத்தாளர் புதியமாதவி, எழுத்தாளர் சரிதா ஜோ, எழுத்தாளர் எஸ்.ஏ.பெருமாள், ஆய்வாளர் ப.கு.ராஜன், ஆய்வாளர் கவின்மலர், ஊடகவியலாளர் கார்த்திக் புகழேந்தி, எழுத்தாளர் ஜமாலன், எழுத்தாளர் ஸ்டாலின் சரவணன், எழுத்தாளர் க.சரவணன், எழுத்தாளர் பாமரன், எழுத்தாளர் பவுத்த அய்யனார், எழுத்தாளர் வழ.தங்கராஜ், எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன், எழுத்தாளர் தமிழகன், எழுத்தாளர் மு.இக்பால் அகமது, எழுத்தாளர் எச்.பீர்முஹம்மது, எழுத்தாளர் இரா.மோகன்ராஜன், எழுத்தாளர் பேரா.என்.சிவராமன், மொழிபெயர்ப்பாளர் அமரந்தா, மொழிபெயர்ப்பாளர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் அ.அருள்மொழி, திராவிடர் கழகம் மதுக்கூர் ராமலிங்கம், தலைவர், தமுஎகச களப்பிரன், பொதுச்செயலாளர், தமுஎகச மரு.அறம், பொதுச்செயலாளர், தகஇபெம பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச்செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை சே.வாஞ்சிநாதன், ஒருங்கிணைப்பாளர், அரசமைப்புச்சட்ட பாதுகாப்பு இயக்கம் அ.லியாகத் அலி, செயலர், அஞ்சுமன் நூற்றாண்டு நூலகம் செந்தலை ந.கவுதமன், சூலூர் பாவேந்தர் பேரவை ச.சிவக்குமார், மாநிலச்செயலாளர், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் பேரா அ.கருணானந்தம், ஆய்வாளர் அ.ஜெகன்னாதன், ஆய்வாளர் அ.குமரேசன், ஊடகவியலாளர் சிகாமணி, ஊடகவியலாளர் விஸ்வம், ஓவியர் நட்ராஜ், ஓவியர் மணிவண்ணன், ஓவியர் சரண்ராஜ், ஓவியர் விநாயகமுருகன், எழுத்தாளர் ஓடை பொ.துரையரசன், இடது இதழாசிரியர் பேரா அரங்க மல்லிகா, எழுத்தாளர் மயிலை பாலு, எழுத்தாளர் ராஜன்குறை கிருஷ்ணன், ஆய்வாளர் கண.குறிஞ்சி, புதுமலர் இதழாசிரியர் நடராஜன், சந்தியா பதிப்பகம் முஹமது சிராஜுதீன், பாரதி புத்தகாலயம் நீலகண்டன், கருப்புப் பிரதிகள் ம.மதிவண்ணன், எழுத்தாளர் சித்ரன், எழுத்தாளர் சாலை செல்வம், எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன், எழுத்தாளர் ஜான்சிராணி, எழுத்தாளர் கவிதா முரளிதரன், ஊடகவியலாளர் ஜெ.தீபலட்சுமி, எழுத்தாளர் பொ.வேல்சாமி, ஆய்வாளர் பேரா பக்தவச்சல பாரதி, ஆய்வாளர் மால்கம், எழுத்தாளர் இளங்கோ கிருஷ்ணன், எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் ஜெயராணி, ஊடகவியலாளர் ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர்
3
16
4
43
5,951
🥺😳
திரு @tvkravisankar அவர்களே நீங்களாக துணை சபாநாயகர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியை ராஜினனாமா செய்யுங்கள், அதுவே நீங்கள் தலைமைக்கு கொடுக்கும் மரியாதை & விசுவாசம். நாங்கள் எங்கள் அண்ணன் தவறு செய்தாலே அவரிடம் கோபப்படுகிறோம், விமர்சனம் செய்கிறோம். நீங்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டு அல்ல. நீங்கள் செய்யாவிடில் நாங்கள் (virtual Warriors) உங்களை ராஜினாமா செய்ய வைக்காமல் விடமாட்டோம். #ResignRaviSankar @TVKVijayHQ @BussyAnand
59
"6,7 டேக் எடுத்தாங்க.. என் மனசார கொடுக்கல..! உயிரோட போகணும்னா நான் சொல்ற மாதிரி பேசுன்னு வலுக்கட்டாயமா மிரட்டி வீடியோ பதிவு பண்ணாங்க.. இல்லைனா என் குடும்பத்தை கொ*ணுடுவேன்னு சொன்னாரு.." "நான் யார் தெரியுமா..? புஸ்ஸி ஆனந்த் கிட்ட கேளு.. அவரே நான் சொன்னா செய்வாருன்னு துணை சபாநாயகரே மிரட்டுனாரு.." - காலையில் துணை சபாநாயகர் ரவிசங்கர் அருகில் அமர்ந்து கொண்டு எதுவும் பிரச்சனை இல்லை என்பது போல் பேசிய நிலையில் கார்த்திக் என்பவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ.. #Ravisankar | #Thuraiyur | #TVK | #PolimerNews
132
1,357
107
3,432
211,000
KOLAPPAN retweeted
என்னை துணை சபாநாயகர் மிரட்டி 6 வீடியோக்களை எடுத்துள்ளார்
53
1,279
111
2,311
146,632
KOLAPPAN retweeted
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன். Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள். இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை. கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம். ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்? தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
1,290
2,383
524
6,018
753,775
தமிழ் அறிவுலகத்தில் நடந்திருக்கும் ஊழல், மிக ஆபத்தானது, அருவருக்கத்தக்கது, அவமானத்துக்குரியது. பாலில் விஷத்தைக் கலப்பதற்கும் நூலில் விஷத்தைக் கலப்பதற்கும் வேறுபாடு அதிகம் இல்லை. இரண்டுமே வாழும் தலைமுறையையும் வரும் தலைமுறைகளையும் சீரழிக்க வல்லவை. பல்லாயிரம் ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் அறிவு நதியில் நம் காலத்தில் இந்தக் கொடிய விஷம் கலந்திருக்கிறது . இந்த உணர்வுடன்தான் இதனை நாம் அணுக வேண்டும். இதற்கு உத்தரவிட்டவர்களையும் உடன்பட்டவர்களையும் உடந்தையாய் இருந்தவர்களையும் தீவிரமான சட்ட நடவடிக்கைக்கும் தண்டனைக்கும் உள்ளாக்க வேண்டும். #பயணிதரன் #அறிவுக்கருவிகள் #வாழ்வெனும்பயணம்
12
54
2
139
3,300
1
12
49
505