
கழகத்தின் தெய்வங்கள் #அண்ணா #எம்ஜிஆர் #அம்மா கழகம் வெற்றி பெற உழைக்கும் ஒன்றரை கோடி தொண்டர்களில் நானும் ஒருவன் #எங்கள்_உயிர்_அதிமுக🖤🤍❤️
Kanyakumari, India
Joined April 2020
- Tweets36.1K
- Following1.3K
- Followers5.2K
- Likes124K
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweeted
கோவை சிறைச்சாலையில் இருந்து ராகவன் என்ற விசாரணைக் கைதி தப்பி ஓடியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இதுவரை கேள்விப்படாத கொடுமையாக சிறைக் கைதிகள் இந்த ஆட்சியில் தப்பித்துச் செல்வது , சின்னத்திரை சீரியல் போல் தொடர்கதை ஆகி உள்ளது.
“வெற்றி ஆட்சி சாதனை மலரில்”
சட்டம் ஒழுங்கு சீர்கேடு,
போதைப்பொருள் கடத்தல்,
விலைவாசி உயர்வு, மின்வெட்டு, கடன்கள் வரிசையில் இதுவும் முக்கிய தலைப்பாக வைக்கலாம்.
தேனி, புழல், சேலம் என ஒவ்வொரு முறை சிறைக்கைதிகள் தப்பி ஓடும் போதும் ஒரு ஒரு செய்தி வருகிறது, “சிறைத் துறை பாதுகாப்பை பலப்படுத்துகிறோம்”, “கண்காணிப்பு கோபுரங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்களை நிற்க வைக்கிறோம்” என்றெல்லாம்.
இன்று கூட “சிறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்; இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என @CMOTamilNadu செய்தி வெளியிட்ட சில மணித் துளிகளில் கோவை சிறையில் கைதி தப்பியோடிய கேவலம் அரங்கேறியுள்ளது.
மொத்தத்தில், இந்த ஆட்சியின் கோமாளித்தனங்களை குறிப்பிட வேண்டும் என்றால், “வாய் மட்டும் தான் வேலை செய்யுது, மத்தது எல்லாம் அப்படியே இருக்கு” என்ற @actorvijay நடித்த போக்கிரி படத்தில் வரும் நகைச்சுவை தான் பொருத்தமாக இருக்கும்.
அது எப்படி கைதிகளால் , சிறையில் இருந்து இவ்வளவு எளிதாக தப்பிக்க முடிகிறது?
இது போன்ற கடுங்குற்றவாளிகள் , தப்பித்துச் சென்று என்ன என்ன குற்றங்களை செய்வார்கள் என நினைத்தாலே பதறுகிறது,
சிறைச்சாலையை கூட பாதுக்காப்பாக வைக்க முடியவில்லை என்றால் எப்படி
இந்த ஆட்சி தங்களைக் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வரும்?
அறிக்கை மூலம் அதிகாரிகளை முழு கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் தங்களது பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பணியில் மெத்தனமாகவோ, கவனக்குறைவாகவோ செயல்படக்கூடாது என்று அறிவுருத்தும் தவெக கூட்டணி அரசின் முதல்வர்
திரு. ஜோசப் விஜய் எப்போது தனது அறிக்கையில் கூறியுள்ளவாறு தனது முதல்வர் பணிகளை மேற்கொள்ளப்போகிறார்?
@AIADMKOfficial
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweeted
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்கள்.
இந்நிகழ்வின் போது மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. @SellurKRajuOffl அவர்கள், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. @rbudhayakumar_ அவர்கள், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. @rajanchellppavv அவர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweeted
தமிழக மக்களுக்கு “வெற்றி தீபாவளி” பரிசாக ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு பலகாரங்களின் விலையை கடுமையாக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக வெற்றிக் கழக அரசு.
மக்கள் தீபாவளிக்கு அதிகமாக நெய், இனிப்புகளை வாங்குவார்கள் என்று தெரிந்தும், இப்போது சரியான நேரம் பார்த்து விலையை உயர்த்தி லாபம் பார்க்கலாம் என்று ஒரு அரசு நினைத்து செயல்படுவது என்ன மாதிரியான மனநிலை?
வியாபாரிகள் கூட இந்த நேரத்தில் மக்களுக்கு சில சலுகைகள் அளித்து விற்பனையை அதிகரிக்கப் பார்ப்பார்கள். ஆனால், இந்த அரசோ, சினிமாவில் வரும் கார்ப்பரேட் வில்லனைப் போல செயல்படுகிறது.
நடிகராக இருக்கும் பொது தீபாவளிக்கு வெளியாகும் விஜய் பட டிக்கெட்டுகளை விலை உயர்த்தி “Black Ticket”-ஆக விற்பது போல இனிப்புகளையும் தீபாவளி நேரம் பார்த்து உயர்த்தி விட்டீர்களோ? பழக்க தோஷத்தில் பிளாக்கில் விற்றுவிடாதீர்கள்!
“அதிகம் இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும். அதைத் தடுக்கவே இந்த வெற்றி தீபாவளி திட்டம்” என்று பிரஸ் மீட் கொடுத்து உருட்ட எந்த அமைச்சரை Assign செய்துள்ளீர்கள் @CMOTamilNadu அவர்களே ?
மக்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட, ஆவின் பால் பொருட்கள் மற்றும் இனிப்புகள் மீதான இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweeted
காவிரி தொழில்நுட்பக் குழுவின் அருமை தெரியாமல் முடக்கி வைத்திருக்கும் திரு. ஜோசப் விஜய்யின் பொய்க்கால் குதிரை அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweeted
தென்னக மண்ணில் விடுதலைச் சுடரை ஏற்றி வைத்து, "ஜம்பூ தீவு பிரகடனம்"
மூலம் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை நெஞ்சுரத்துடன் எதிர்த்து நின்ற மாவீரர்கள்!
வளரி வீச்சால் வெள்ளையர் படையை அலறவைத்து, தங்களின் மதிநுட்பத்தாலும் இணையற்ற நிர்வாகத் திறனாலும் தாயகத்தைக் காத்து நின்ற தீரமிக்க மாமன்னர்கள்!
தமிழர்களின் வீரத்திற்கும், எதற்கும் விலைபோகாத விசுவாசத்திற்கும் தனிப்பெரும் அடையாளமாய் விளங்கும் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவு நாளான இன்று, அவர்களின் ஒப்பற்ற வீரத்தையும் உன்னதமான தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியர் அவர்களின் மணிமண்டபத்தில் உள்ள அவர்களின் திருவுருவச் சிலைக்கு @AIADMKOfficial சார்பிலும், எனது சார்பிலும் தலைமைக் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.
@AIADMKOfficial
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweeted
டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பல்லடத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் உயிரிழப்பு
#kovai #dengue #child #thanthitv
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweeted
பிரபல இசையமைப்பாளர் அன்புச் சகோதரர் “தேனிசைத் தென்றல்” தேவா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
எளிய பின்னணியில் இருந்து வந்து, எளிய மக்களின் வாழ்வியலை தன் இசையால் பிரதிபலித்தவர் தேவா அவர்கள். Mass, Melody, Devotion என அனைத்து வகையான பாடல்களிலும் தனி முத்திரை பதித்தவர்.
தேவா அவர்களின் “கானா” பாடல்களுக்கு துள்ளாத கால்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரின் உள்ளங்களிலும் நிறைந்திருக்கிறது அவருடைய இசை.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மீது பெரும் மதிப்பும், நம் @AIADMKOfficial கழகத்தின் மீது பேரன்பும் கொண்ட சகோதரர் தேவா அவர்கள், நம் கழகத்திற்காக மெட்டமைத்த பிரச்சாரப் பாடல்கள் என்றைக்கும் கழகத் தொண்டர்களின் இதயங்களில் தனித்த இடம் பெற்றவை.
மாண்புமிகு அம்மா அவர்களுக்கும் சரி, நான் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னும் சரி, தேவா அவர்கள் நமக்காக பாடிய பிரச்சாரப் பாடல்களே கழகத்தின் குரலாக பட்டிதொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், நம் இயக்கத்தின் அறைகூவல் குரலாக அன்புச் சகோதரர் தேவா அவர்களின் காந்தக் குரல் திகழும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
“தேனிசைத் தென்றல்” தேவா அவர்கள் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறை மற்றும் இசைத் துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
#Deva
@AIADMKOfficial
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweeted
55-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் உயிரினும் மேலான கழகம்!
இன்னும் 100 ஆண்டுகள் கடந்தாலும், இந்த மக்களின் நன்மைக்காகத் தொடர்ந்து இயங்கும்!
இந்தக் கழகத்தைப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும் தெய்வங்களாக இருந்து காத்து வருகிறார்கள்!
எங்கள் அய்யா எடப்பாடியார் அவர்கள் கழகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்!
இவர்கள் இருக்கும் வரை இந்த இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது!
மீண்டும் வருவோம்… மீண்டெழுந்து வருவோம்! 🔥
#Young_ADMK
#55YearsOfADMK @AIADMKOfficial
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweeted
தேர்தலுக்கு முன்:
போதைப்பொருள் ஒழிப்பு- அண்ணனோட Guarantee!
ஆட்சிக்கு வந்ததும்:
நாகை தவெக மாவட்ட நிர்வாகி பூபாலன் வீட்டில் 135 கிலோ மெத் போதைப்பொருள் பறிமுதல் என செய்தி.
போதைப்பொருள் ஒழிச்ச மாதிரி தெரியல ப்ரோ…. போதைப்பொருளை உங்க கட்சி நிர்வாகி வீட்டுல ஒளிச்சி வச்ச மாதிரி தான் தெரியுது..!!!
அடேங்கப்பா மாற்றம்..!!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweeted
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் @BJP4TamilNadu மாநிலத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் திரு. @NainarBJP அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல்நலத்துடனும் தொடர்ந்து தாங்கள் மக்கள் பணியாற்றிட என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweeted
தமிழகத்தில் எதிர்பாராவிதமாக
5 மாதங்களுக்கு முன் அமைந்த
த.வெ.க. கூட்டணி அரசின் ,
தமிழ்நாடு மின்சார வாரியம் வரலாற்றிலேயே இல்லாத வகையில்
யூனிட் ஒன்றுக்கு சராசரியாக
35 ரூபாய் என்ற மிக, மிக அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது!
ஏற்கனவே தவெக ஆட்சிக்கு வந்தவுடன் மின்சார வாரியம் கடன் சுமையால் தள்ளாடுகிறது என்றும், முந்தைய ஆட்சியில் மின் கட்டணத்தை நிர்ணயிப்பதில் குளறுபடிகள் உள்ளதாகக் கூறி, மின் கணக்கீட்டில் மாறுதல் செய்கிறோம் என்று ஏற்கனவே ரூ.1500 மின் கட்டணம் செலுத்தி வந்த தமிழக மக்கள் தற்போது சுமார் ரூ.4,000 வரை கட்டுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், இந்த அதிக விலையில் மின் கொள்முதல் செய்ய போடப்பட்ட ஒப்பந்தம், தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேலும் கடன் சுமையில் மூழ்கடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தேர்தலுக்கு முன் தனது சொகுசுப் பேருந்தில் மேல்புறத்தில் இருந்து வசனம் பேசிய நடிகர் விஜய், எழுதிக் கொடுத்த வசனத்தை, அதாவது மின்சார வாரியத்தைப் பற்றி பேசும்போது, 'டெண்டர்' என்ற வார்த்தையை மிக அழகாக, தொண்டை நரம்பு தெறிக்குமளவிற்கு, ஏற்ற இறக்கத்துடன் பேசி கைத்தட்டலை பெற்று. ஆட்சியைப் அமைத்த திரு. ஜோசப் விஜய், மின் பற்றாக்குறை அவசர நிலையை பயன்படுத்தி, ஏற்கனவே யுனிட் ஒன்றிற்கு ரூ.11-20 கொள்முதல் பொடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சராசரி யூனிட் ஒன்றுக்கு ரூ.35 வரை அதிக விலைக்கு 'மின் கொள்முதல் ஒப்பந்தம்' செய்வதில் மிகப் பெரிய 'மெகா ஊழல்' நடைபெற்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர். த.வெ.க அரசு ஆட்சிக்கு வந்தவுடன் 'வெற்றி மெகா வசூல் திட்டத்தை' தொடங்கிவிட்டதாக மக்கள் பரவலாக பேசுகின்றனர்.
ஏற்கனவே பல லட்சம் கோடி கடனில் மிதக்கும் தமிழக மின்சார வாரியத்தை மேலும் கடனில் மூழ்கடித்து கடைசியில் தனியாருக்கு தாரை வார்க்க இந்த அரசு திட்டமிடுகிறதோ என்ற ஐயம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அநியாய விலைக்கு தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கும் இந்த ஒப்பந்தத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த ஒப்பந்தத்தை இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilNadu
@AIADMKOfficial
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweeted
இன்றைய தினம், தமிழகத்திற்கு வருகை புரிந்து, #ChennaiMetro #Phase2 திட்டத்தின் வடபழனி-பூந்தமல்லி வழித்தடத்தை துவக்கி வைத்துள்ள மாண்புமிகு இந்தியப் பிரதமர்
திரு. @narendramodi அவர்களை
சென்னை விமான நிலையத்தில் மகிழ்ச்சியோடு வரவேற்றேன்.
இந்த திட்டத்தை பொறுத்தவரை, எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு இருந்த போது, இதற்கான DPR தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் அனுமதி பெற்று, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களால் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
மத்திய அரசின் நிதி வராத சூழலிலும், மாநில அரசின் நிதியை ஒதுக்கீடு செய்து, பணிகளை துவக்கிய அரசு அஇஅதிமுக அரசு.
மேலும், மாண்புமிகு பிரதமர் அவர்களை பலமுறை நான் நேரில் சந்தித்து இதற்கான நிதி குறித்து கோரிய நிலையில், மத்திய அரசும் நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ரூ.63,246 கோடி ஒதுக்க 2024-ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம், வடபழனி - பூந்தமல்லி வழித்தடம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. @AIADMKOfficial கழக ஆட்சியில் நாம் விதைத்த விதைகள், தற்போது வரை விருட்சமாவதைக் காண மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த பழனிசாமி நினைத்திருந்தால் மெட்ரோ பாலத்தின் மீது கூலிங் கிளாஸ் போட்டு ஒரு போட்டோஷூட், Tunnel அடியில் Safety Helmet போட்டு ஒரு ரீல்ஸ் ஷூட்டிங் எடுத்திருக்க முடியும். ஆனால், அப்படிப்பட்ட ஏமாற்று அரசியலில் எனக்கு ஒருநாளும் உடன்பாடு இல்லை.
“நாம் பேசக் கூடாது. நம்முடைய செயல்கள் பேச வேண்டும்” என்பதை எப்போதும் நம்புபவன் நான். யாருடைய ஆட்சி இருந்தாலும், நம்முடைய செயல்கள் தான் தமிழக மக்களை உயர்த்திக் கொண்டிருக்கிறது என்ற பெருமிதத்தை நமது திட்டங்கள் இன்றுவரை நமக்கு தந்துக்கொண்டு இருக்கின்றன.
இந்த இனிய தருணத்தில், தலைநகர் சென்னையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மெச்சத்தக்க பங்காற்றிவரும் @cmrlofficial அலுவலர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweeted
வரலாறு மறைக்க முடியாத உண்மை! 🚆
இந்தியாவின் பிரம்மாண்ட உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றாக, சுமார் ₹61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தவர் அன்றைய முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் (21.11.2020)! 🏛️
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweeted
சென்னை மெட்ரோ 2-ம் கட்டம்!
தலைநகரின் வருங்காலத்தை
கட்டமைத்த @AIADMKOfficial !
யார் ஆட்சியில் இருந்தாலும்,
விருட்சமாவது நாம் போட்ட விதைகள்!
@EPSTamilNadu @AIADMKOfficial
#ChennaiMetro #Phase2
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweeted
Town votes currently being counted. 2 rounds to go and then we will have 150 booths in rural - Dharapuram.
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweeted
நம்ம ஆளு கேட்டாரு பாரு ஒரு கேள்வி ஆளும் கட்ச்சினு கூட பாக்காமா ❤️🔥🤣
“அப்பறம் என்ன புடுங்குறதுக்கா இங்க வந்த🔥🥱”
that's OG ADMK 🔥🌱
@ADMK_Trends @Admk_Tweets @ADMK_force @admk_unofficial
@AIADMKITWINGOFL 🌱
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweeted
போராடும் செவிலியர்கள் மீது அனைத்து அராஜகங்களையும் கையாண்டு வருகிறது ஆச்சரியக்குறி அரசின் காவல்துறை!
செவிலியர்கள் மன வேதனையோடு முதல்வர் நோக்கி கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் இருக்கிறது இந்த நடிக முதல்வரிடம்?
“உங்க அண்ணனா, தம்பியா” என்பதெல்லாம் வெறும் மேடைப் பேச்சு தானா @actorvijay ? இங்க இவ்வளவு இன்னலுக்கு ஆளாகி வரும் செவிலியர்கள் உங்களுக்கு அக்கா, தங்கைகள் இல்லையா?
உங்கள் உறவுகளை இப்படி தான் நடத்துவீர்களா?
#பொய்க்கால்_குதிரை_அரசு
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweeted
Vijay’s action is no different from movie making. To match the Gold ring scheme his attire resembles gold dhothi and shirt. This was my comment.
TVK spokesperson called this derogatory. I politely asked him to educate himself about observation and derogatory remarks.
When he questioned me on my attire , I said that is the only ironed shirt I have for the day . If he is so concerned he can come to my house wash my linen , iron and give me I shall wear. This is my response. He started screaming on the show that my response is derogatory.
#God save us.
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweeted
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், வெறும் 107 MLA-க்களுடன், மைனாரிட்டி ஆட்சி நடத்தும் கட்சியின் கொள்கையும் செயல்பாடும் என்னவென்று பார்ப்போமா?
பிச்சை:
தீயசக்தி தீயசக்தி என்று வாய்கிழிய பேசிவிட்டு, அந்த கட்சிக்கு அளித்த வாக்குகளால் வெற்றி பெற்ற அவர்களின் கூட்டணி கட்சிகளை, அதான்…. கல்லாப்பெட்டி கூட்டணி என்று கூறிய அதே கட்சிகளில் அலுவலகங்களுக்கு “யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்பது போல, “சோபா வந்தது முன்னே, தவெக வந்தது பின்னே” என்று படியேறி பிச்சை எடுத்து ஆட்சி அமைத்தது.
திருட்டு:
சொந்தமாக நின்று ஜெய்க்க வக்கில்லாமல், அடுத்த கட்சி MLA-க்களை “கீழே ராஜினாமா, மேலே இணைப்பு” என தலைமைச் செயலகத்தை குதிரை பேரக் கூடாரமாக மாற்றி, திருட்டுத்தனமாக ஆட்சியை காப்பாற்ற நினைப்பது.
ஓட்டம்:
செய்தியாளர்களைக் கண்டால் ஓட்டம்,
சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் ஓட்டம்,
கரூரில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்த போது ஓடு ஓடு ஓடு ஓடு என்று ஓட்டம் பிடித்தது எல்லாம் தமிழ்நாடு மறக்குமா?
தமிழினத்தை அழிக்கத் துணிந்து, ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை இலங்கையில் கொன்றுக் குவித்த வரலாற்றுத் துரோகி காங்கிரசோடு,
நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப் படுத்தியதோடு, சுப்ரீம் கோர்ட் வரை அதை நிலைநாட்டி, என்று தமிழக மாணவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் முதல் காரணமான காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து நிற்கும் நீங்கள் எல்லாம், எங்கள் கூட்டணியைப் பற்றி பேச கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா என்பதை யோசியுங்கள் தற்குறிகளே!
நேருக்கு நேர் நின்று பிரச்சனைகளை சந்திக்க துணிவு இல்லாமல், 72 நாட்கள் வீட்டுக்குள் முக்காடு போட்டு ஒளிந்துகொண்ட சூரரின் சுண்டெலிகள்… மன்னிக்க… அணில்கள் சற்று ஓரமாக போய் விளையாடவும்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
மக்களால் 12 முறையாகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படாத, தீர்ந்து போன சக்தியின் சில கொள்கைகளும் செயல்பாடுகளும்!
துரோகம்:
பாஜகவுடன் கூட்டணி வைத்து, இனி ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சூளுரைத்ததை காற்றில் பறக்கவிட்டு, மீண்டும் அதே கூட்டணியில் இணைந்து தமிழ்நாட்டு மக்களை நம்ப வைத்து ஏமாற்றியது.
நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்து, மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடியது.
எதற்காக, யாருக்கு எதிராகக் கட்சி தொடங்கப்பட்டது என்பதையே மறந்து, தீயசக்தியுடன் கூட்டணி வைக்க முயன்று தொண்டர்களுக்குத் துரோகம் செய்தது.
கட்சியைத் தொடங்கியவருக்கும், கட்சியை வளர்த்தெடுத்தவருக்கும் அந்தத் தீயசக்தி என்னென்ன செய்தது என்பதை மறந்து, “தான் மட்டும் நன்றாக இருந்தால் போதும்” என்ற சுயநலப் போக்குடன் செயல்படுவது.
முதுகுக்குத்து:
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதல்வராகத் தன்னை அறிவித்தவரின் முதுகிலேயே குத்தியது.
நேர்மையற்ற தன்மை:
ஒரு எதிரியை நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ளத் திராணியில்லாமல், கட்டப்பஞ்சாயத்து செய்து ஒருவரை விலைக்கு வாங்கி வெற்றி பெற முயல்வது.
அதற்கு இன்னொரு பெயர் , பயத்தால் நடுங்கிப் போய் செய்யும் நாணயமற்ற, வஞ்சகமான செயல்.
மற்றும் பலரின் முதுகு குத்துகளும் துரோகங்களும் தொடரும்.
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweeted
பாமகவையோ மற்றக் கட்சிகளையோ விமர்சித்துக் கொண்டிருக்காதீர்கள். 😐
ஒரே இலக்கு இரண்டு திமுகவையும் வீழ்த்துவதே. சமயோசிதமாகச் செயல்படுங்கள். கச கசன்னு எல்லாப் பக்கமும் கடிச்சிட்டு இருக்க வேண்டாம். 😐
தவெக தான் டார்க்கெட். இலக்கு நோக்கித் தான் அடிக்கனும். 🔥🔥
தவெக-வை கடுமையாக விமர்சித்தும், விஜய் ஆட்சியின் நிர்வாக லட்சணத்தை எடுத்துக் கூறியும், MLA க்களை விலைக்கு வாங்கிய இந்த விஜய் தான் தூயசக்தியா எனவும் கேள்வியெழுப்புங்கள். இது போதும். 🔥
"தவெக-வைத் துளியும் பிடிக்காத ஒரு குறிப்பிட்ட வாக்குச் சதவிகிதம், திமுகவிற்குச் செல்லாமல், நாதகவிற்குச் செல்லாமல், வேறெந்தக் கட்சிக்கும் செல்ல விடாமல், அண்ணாதிமுகவிற்கு வர வைப்பதே, நம் கழகத்தின் ஒரே அரசியல் இன்றைக்கு" - இவ்ளோ தான் இனி அதிமுகவின் அரசியல். 😍
அப்ப என்ன செய்யனும்..? தவெக-வை புரட்டியெடுக்கனும். இறங்கி அடிக்கனும். பாவ புண்ணியலாம் தவெகவிற்கு பார்க்கவே கூடாது. அக்கட்சியின் ஒவ்வொரு தவறையும் மக்களிடம் கொண்டு செல்லனும். 🔥
தவெக என்ற ஒற்றைக் கட்சியைத் தவிர வேறெந்தக் கட்சியையும் பெயர் சொல்லித் திட்டிக் கொண்டிருக்க வேண்டாம். முடிந்தவரை. நேரடியா எவனாச்சும் நம்மல சீண்டினா அப்பப் பார்த்துக்கலாம். அதுவும் நம்மல divert பண்ணவா கூட இருக்கும். பார்த்து தான் செயல்படனும். கொஞ்சம் சூதானமா வேலை செஞ்சா வெற்றி நமதே.🔥
நம் இலக்கு,
இரு திமுகவையும் வீழ்த்தி,
இரு தொகுதியிலும் வெற்றி
இவ்ளோ தான். 😍






























