கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா?
தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா?
போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா?
கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும்.
மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்.
'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.
நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
#TVKFails #Arrest_ArulVignesh
இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்!
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.
மாற்றிப் பேசி,
உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு,
தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர்,
“MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின்
மாநிலத் தலைவர்,
என வெளியில் தெரிந்தே
இத்தனை அழுத்தங்கள்,
இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார்,
கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர்.
ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும்
கொடுமையை மறைக்க
எத்தனை பொய்கள்?
எவ்வளவு உருட்டுகள்?
இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா?
@AIADMKOfficial சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது.
அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது
ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்?
All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்?
அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது?
நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற
மனநிலை தானே இது?
மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?
இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் @CMOTamilNadu?
“நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற
@actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. @actorvijay அவர்கள்.
இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்!
இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்!
எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட @AIADMKOfficial துணை நிற்கும்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண் ஆட்சியருக்கு ஆபாச செய்தி அனுப்பியதாக த.வெ.க கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சர்ச்சை சென்று கொண்டுள்ள நிலையில்... தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் கள்ளக்குறிச்சி ஆளுங்கட்சியாக உள்ள திமுகவின் சட்டமன்ற ரிஷிவந்தியம் உறுப்பினர் அந்த மாவட்டத்தில் உள்ள ஒரு பெண் அலுவலரை கடந்த 18. 10 .2026 அன்று செல்போனில் மிரட்டல் விட்டதாக கூறி அந்த மிரட்டலை தொடர்ந்து அந்த பெண் அதிகாரியை எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராமநாதபுரத்திற்கு பணி மாறுதல் செய்ததாக ஒரு செய்தி தற்போது வெளி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியருக்கு அடுத்தபடியாக இருக்கின்ற ஒரு பெண் அலுவலரை கள்ளக்குறிச்சி மாவட்ட ரிஷிவந்தியம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் அவர்கள் கடுமையான வார்த்தைகளால் மிரட்டி அவர் சொல்கின்ற பரிந்துரைகளை ஏற்கவில்லை என்றால் உன்னை நான் ராமநாதபுரத்திற்கு பணி மாறுதல் செய்து விடுவேன் என்ற மிரட்டலுடன் பல விமர்சனங்களை வைத்து சமூக ஊடகங்களில் அந்த அலுவலரை பற்றி தவறான செய்தி பரப்பி உள்ளார். இது சம்பந்தமாக அந்த பெண் அலுவலர் காவல்துறை,சட்டமன்ற சபாநாயகர்,மகளிர் ஆணையம், தமிழக முதலமைச்சர் மற்றும் அவரது உயர் அலுவலர்கள் அனைவருக்கும் புகாராக அளித்துள்ளனர் இந்த புகார் அளித்திருந்த நிலையில்
தற்போது அந்த மாவட்ட அலுவலர் திமுக வசந்தம் கார்த்திகேயன் மிரட்டியது போலவே ராமநாதபுரத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பது த .வெ த ஆட்சியாக அல்லது எதிர்க்கட்சி திமுகவின் ஆட்சியா என்பது பெரும் கேள்வியாக உள்ளது?
அந்த மாவட்டத்தில் உள்ள அலுவலர்கள் அனைவரும் தற்போது அச்சத்தில் உள்ளனர் இந்த மாவட்டத்தில் தொடர்ந்து வசந்தம் கார்த்திகேயனின் ஆதிக்கமே நீடிக்கிறது தமிழக அரசின் விஜயின் ஆட்சிக்கு இந்த மாவட்டத்தில் அதிகாரம் இல்லை என்பதை இந்த பணி மாறுதல் தெளிவாக காட்டுகிறது என்பதால் அந்த மாவட்டத்தில் உள்ள அலுவலர்கள் திட்டங்களை நிறைவேற்றுவதில் வசந்தம் கார்த்திகேயன் அவர்கள் உத்தரவைதான் இன்று வரை கேட்க வேண்டும் என்பதற்கு இந்த பணி மாறுதல் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது என அஞ்சப்படுகிறது.
ஒரு பெண் அலுவலருக்கு இரவு எட்டு மணி அளவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடுமையான வார்த்தைகளை கூறி மிரட்டி உள்ள வசந்தம் கார்த்திகேயன் கட்டுப்பாட்டில் தான் கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது விஜய் வெற்றி ஆட்சி என வெத்து ஆட்சி நடத்துவது இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த மாவட்டத்தில் தமிழக அரசு தோல்வியை கண்டுள்ளது.
மரணங்களுக்கு கள்ளச்சாராயம் காரணமல்ல என்று போன ஆட்சியில் பேட்டி அளித்த நல்லவர்தான் இந்த வசந்தம் கார்த்திகேயன்.
சிக்கிய சிறுத்தை!
முதுமலை புலிகள் காப்பகம்,மசினகுடி வனச்சரகம் சிங்காரா வனப்பகுதிக்குள் அமைச்சர் @VanniTamizhVCK புலி பின்னால் ஓடிச் சென்று ரீல்ஸ் எடுத்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.@gurusamymathi @vijay_vast @wilson__thomas @kovaikarthee @tnforestdept
#nilgiris
#mudumalai #forest
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
🤖 Made with AI
This is really sad.
A trader won 10 trades in a row and made $6.32 million in profit.
Now he's down $6.76 million on a single $ETH trade, wiping out all of that profit and leaving him with a $527K loss overall.
4
676
Former Chennai Police Commissioner Arun, DSP Yasmin and 5 other police personnel named as accused in the chargesheet.
#Breaking
Gem Veeramani POCSO case:
Former Chennai Police Commissioner Arun, DSP Yasmin and 5 other police personnel named as accused in the chargesheet.
The 720-page chargesheet has been filed by the SIT in the special POCSO court.
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது
@Anbil_Mahesh
7
721
























